Wednesday, May 14, 2008

பெரியாரும் நாகம்மையும் விண்ணுலக வாழ்வில்.

பெரியார்: நாகம்மை என்னடி காரியம் செய்தாய்? இதை நான் உன்னிடம் எதிர்பார்க்கவே இல்லையடி

நாகம்மை: வாருங்கள் நாதா.. இப்பதான் என்னைப் பார்க்க வேண்டும் போல் தோன்றியதோ..?! உயிருடன் இருக்கிறாளா என்று பார்க்க வந்தீர்கள் போல.

பெரியார்: போடி முட்டாள் பெண்ணே. உன்னைத் தானேடி நான் காதலிக்கிறேன். கலியாணம் செய்திருக்கிறேன். பிறகெதற்கு இப்படி தற்கொலைக்கு முயற்சி செய்தாய்.

நாகம்மை: நாதா.. நான் உங்களின் பாதங்களே சரண் என்று உங்களையே நம்பி வாழ்பவள்.

பெரியார்: போடி பேதைப் பெண்ணே. நீயதெற்கு என்னை சரணடைய வேண்டும். முட்டாள் பார்பர்னன் போல பேசாதே.

நாகம்மை: நாதா.. என்ன இப்படிச் சொல்லிவிட்டீர்கள். நான் நீங்களே கதி என்று வாழும் பேதைதான் நாதா. அதற்காய் பெருமைப்படுபவள்.

பெரியார்: சிறுமையாய் காரியங்கள் செய்து கொண்டு பெருமைப்படுவதாய் சொல்லாதே நாகம்மை.

நாகம்மை: என்ன நாதா சொல்கிறீர்கள்?

பெரியார்: என்னை நீ நம்பி இருந்தால் இப்படியெல்லாம் பகுத்தறிவில்லாமல் பேசுவாயா..?!

நாகம்மை: நாதா.... எது பகுத்தறிவில்லை எங்கிறீர்கள்..?!

பெரியார்: இப்படி என்னிடம் சரண் அது இது என்று பேசாதே. அது பார்பர்னன் கோவிலில் சிலைக்கு முன் பேசுவதை ஞாபகமூட்டுகிறது. உன் மேலான காதலை அது தகர்த்துவிடுகிறதடி. என் காதல் "மூட்ட" மாத்தாதேடி.

நாகம்மை: என்ன நாதா சம்பந்தம் சம்பந்தமில்லாமல் பேசுகிறீர்கள். நானோ உங்களின் அன்புக்காய் ஏங்குகிறேன். நீங்களோ.. பார்பர்னனைத் திட்டுவதையே குறியாய் கொண்டு இருக்கிறீர்கள் என்ன ஆச்சுது உங்களுக்கு..?!

பெரியார்: அது ஒன்றுமில்லையடி... காந்தி அடிகளைப் பார்த்துப் பேசி காங்கிரஸில் சேர்ந்து பணியாற்றப் போனேன். அந்தாள் கராரா இருந்திட்டாரு. அந்தக் கோபத்தில அவர் மதிக்கும் இராமரைப் பழிவாங்க பார்பர்னனை இழுத்து வைச்சுப் பேசினாத்தானே எனக்கு மனசு அடங்கும். அதுதானடி..!

நாகம்மை: நாதா.. நான் உங்களின் மேல் காதலோடு இருக்கும் இவ்வேளையிலாவது உந்த பார்பர்ன நச்சரிப்பை விடுவீர்களா..??!

பெரியார்: என்னடி நாகம்மை.. பகுத்தறிவில்லாமல் பேசுகிறாய். காதல் என்னடி காதல். பகுத்தறிவால் அதற்கு விளக்கம் சொல்லு பார்க்கலாம். அது ஒன்றும் இலகுவான விடயமில்லையடி.

நாகம்மை: நாதா.. உங்கள் பகுத்தறிவும் வியாக்கியாணமும் என்னோடு வேண்டாம் நாதா. கொஞ்சம் அடக்கி வாசியுங்கள்.

பெரியார்: என்னடி சொன்னாய் நாகம்மை. நான் தமிழரைக் கைவிட்டாலும்.. தமிழைக் கைவிட்டாலும்.. என் பகுத்தறிவையும் நான் பேசும் வியாக்கியாணத்தனத்தையும் விடமாட்டேண்டி. அவை தாண்டி என்னை உலகுக்கு காட்டிட்டு நிற்குது பெரியார் என்று. அவை என் கன்னட இரத்தத்தில் பிறந்ததடி.

நாகம்மை: ஓ அந்தக் கன்னட இரத்தத்தால் தான் என்னைக் காதலிப்பதாகக் கொஞ்சிக் குலவிவிட்டு.. மணியம்மையிடம் மாட்டீனீர்களோ..??!

பெரியார்: ஐயகோ.. அந்த விசயம் உனக்கு எப்படித் தெரியுமடி. நீ இறந்த பின் தானே மணியைக் கலியாணம் செய்தேன். என் பகுத்தறிவுப்படி இறந்தவர்களுக்கு பூலோகத்தில் நடக்கும் விடயம் தெரியாதேடி. எப்படிடி கண்டுபிடித்தாய் அதை.

நாகம்மை: கண்ணாடியும் போட்டுக் கொண்டு தாடியும் வளர்த்துக் கொண்டு கலியாணம் என்பது பெண்களுக்குக் கூடாது என்று சொல்லித் திரியும் போது எனக்கு ஒரு சந்தேகம் வந்திச்சுது. இருந்தாலும் நீங்கள் பால் மணம் மாறா பச்சிளம் பாலகியை தள்ளாடும் வயதில் மணப்பீர்கள் என்று கனவிலும் நினைக்கவில்லை நாதா. மணியம்மை என்றொரு சக்களத்தி வருவாள் என் வாழ்வில் என்றும் நினைக்கவே இல்லை.

பெரியார்: பகுத்தறிவில்லாமல் பேசாதடி நாகம்மை. தள்ளாடும் வயதில் கைத்தடிக்குப் பதிலாக மணியம்மையை மணந்தேண்டி. என்னைத் தாங்கிச் செல்ல.

நான் ஒன்றும் பார்பர்னனின் முருகன் போல வள்ளி தெய்வையானையை மணக்கவில்லையேடி. ஒரே நேரத்தில் இரண்டு பொண்டாட்டி வைச்சிருக்கல்லையேடி. உன்னை மேல்லோகம் அனுப்பிட்டுத்தான் மணியை மணந்தேன்.

நாகம்மை: அப்படியா நாதா. அப்போ மணியம்மை பெண்ணல்ல உங்கள் கைத்தடி எங்கிறீர்களா..?!

பெரியார்: நாகு என்ர விசரை கிளப்பாத. பார்பர்னன் போல எரிச்சல் வாற மாதிரி இப்படி முட்டாள் தனமாகப் பேசி.

நாகம்மை: எது நாதா முட்டாள் தனம். பெண்கள் ஆண்களுக்கு அடிமையில்லை. பெண்கள் திருமணம் முடிப்பதாலும் பிள்ளை பெறுவதாலும் ஆண்களுக்கு அடிமையாகிறார்கள் என்றீர்களே..! அப்படிச் சொல்லிவிட்டு மணியம்மையை மறு மணம் முடித்தீர்களே. அது உங்களையே நீங்கள் ஆணில்லை என்று சொல்வதை போலல்லவா இருக்கிறது. அதை உணராமல் நீங்கள் செய்ததை நீங்களே அறியாமல் பேசுகிறீர்களே அதை விடவா நான் பேசுவது முட்டாள் தனம் என்கிறீர்கள்.

பெரியார்: என்னடி கேட்டாய். என்னைப் பார்த்தா கேட்டாய் இக்கேள்வி. பார்பர்னன் கூடக் கேட்காத கேள்வியடி இது. நான் ஆம்பிளையடி. வாய்க்கு வந்தபடி ஆயிரம் சொல்லி இருப்பன் மேடைகளில். அதையெல்லாம் பெரியாரின் "பொன் வாக்குகள்" என்று எடுக்கச் சொன்னனா தமிழர்களிடம்.

நாகம்மை: தமிழர்கள் முட்டாள் தானுங்க. அதாலதான் அவர்களின் மொழியையே காட்டுமிராண்டி மொழி என்றீர்களே. அதைக் கூட பொருட் படுத்தாமல் எருமை மாட்டில் மழை பெய்த கணக்கா உங்களை தூக்கி வைத்துக் கொண்டாடினார்களே. அவர்களைப் பார்த்து நீங்கள் இப்படிக் கேட்கத்தான் செய்வீர்கள் நாதா.

பெரியார்: அது தமிழர்களின் பகுத்தறிவில்லாத நிலை. அந்தப் பேதைத் தனத்தை அவர்களிடம் வளர்க்க நான் பகுத்தறிவு என்று பேசி பட்ட கஸ்டம் தெரிந்தால் இப்படி எல்லாம் கதைக்க மாட்டாய் நாகம்மை.

நாகம்மை: தெரியும் தெரியும். அதுதான் கற்சிலை மேலுள்ள கோபத்தில் என் கற்பைக் கூட கவனிக்காமல் எனக்கு விபச்சாரப் பட்டம் சூட்டி உங்களின் ஆண்மையை நிரூபித்தவராய்சே நீங்கள்.

பெரியார்: (நாகம்மையை முறாய்தபடி)... என்னடி கட்டிய புருசன் என்று பார்க்காமல் எதிர்த்துப் பேசுகிறாய். தெரியும் தானே என்னை எதிர்த்து நியாயம் பேசிய அண்ணாவையே திராவிடக் கழகத்தை விட்டு அடித்து விரட்டியவன் நான்.

நாகம்மை: ஆனால் அது என்னிடம் வாய்க்காது நாதா. நீங்கள் எனக்கே துரோகம் செய்தவராச்சே.

பெரியார்: எதடி துரோகம். ஒரு ஆம்பிளை தன்ர விருப்பத்துக்கு எத்தனை பெண்களையும் கலியாணம் முடிக்கலாமடி. அது பகுத்தறிவு. உன்னை நான் வேறு ஆம்பிளையள கலியாணம் முடிக்க வேண்டாம் என்று தடுத்தனானா..??!

நாகம்மை: நாதா.. உங்களுக்கு பகுத்தறிவுப் பித்துப் பிடித்திவிட்டது போலும். அதுதான் ஜேர்மனிக்குப் போய் வெள்ளைக்காரிகளோடு நிர்வாண நடனம் ஆடிவிட்டு வந்து ரம்பையும் ஊர்வசியும் சொர்க்கத்தில் கடவுள் முன் ஆடலாம் நான் ஆடக்கூடாதோ என்று கேட்டீர்கள் போல.

பெரியார்: நாகம்மை.. விட்டால் நீயே பார்பர்னனுக்கு குறிப்பிடுத்துக் கொடுப்பாய் போலிருக்கே என்னை எதிர்த்துப் பேச. பார்ப்பர்னன் மற்ற தமிழர்களைப் போல ஏமாளியல்ல. அவன் புத்திசாலி. சிறு துரும்புச் சீட்டுக் கிடைத்தாலே போதும் என்னை உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவான். அதனால் தான் அவனை என்னிடமும் மற்ற தமிழர்களிடத்தும் நெருங்க விடாமல் சாதி எதிர்ப்பென்று பிராமண சாதித் தீயை பற்ற வைத்துக் கொண்டிருக்கிறேன்.

நாகம்மை: தெரியுமே.. காதலித்த எனக்கே கணக்கு விட்டவராச்சே நீங்கள். உங்கள நம்பிற தமிழர்களுக்கு என்னென்ன செய்வீர்கள் என்று தெரியாதா என்ன.

பெரியார்: தமிழர்கள் முட்டாள்களடி.. அவர்கள் செம்மறியாட்டுக் கூட்டம். சொன்னபடி சிந்தனையில்லாமல் கேட்டு நடக்குங்கள். ஆனால் நீ என்ர பலவீனத்தையே வைச்சு என்னையே கலாய்கிறாயடி. உன்னோட கவனமாத்தான் இருக்க வேணும்.

நாகம்மை: பின்ன கள்ளைக் குடிக்காதே என்று தென்னை மரத்தைத் தறிப்பீங்க.. அடுத்த நாளே கள்ளச்சாரயத்தை விட கள்ளு மேல் என்று தறிச்ச இடத்தில இன்னொரு தென்னையை நாட்டூவீங்க. இப்படி முன் பின் யோசனை புத்தி இல்லாமல் பேசுற உங்களை எல்லாம் "பெரியார்" "பகுத்தறிவுவாதியுன்னு" சொல்லிட்டு திரியுற தமிழர்கள் முட்டாள் தானுங்களே.

பெரியார்: உரத்துப் பேசாத நாகு. நாங்க இஞ்ச விண்ணுலோகத்தில பேசிக்கிறது பூலோகத்திற்கும் கேட்டிடப் போகுது. கேட்டிச்சு தமிழர்கள் என் சிலைக்கு செருப்பால அடிப்பார்கள். கடவுள் சிலைக்கு பூமாலை போடுவார்கள். அப்புறம் பார்பர்னன் அவர்களை நெருங்கி தமிழை, தமிழரை வளர்க்க அறிவுரை சொல்லிடுவான். அது கர்நாடகத்தின் எழுச்சியை வீழ்ச்சியாக்கிடும்டி. தமிழ தேசியம் என்ற பூதத்தை திராவிடம் என்ற புட்டிக்குள்ள அடச்சு வைச்சுதாலதான்.. இந்திய தேசியம் இப்ப தமிழ்நாட்டில் இருக்குது. அது யாரால என்னால தானடி. அதைப் புரிஞ்சுக்கோ. நான் இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரானவன்னு சொல்லிக்கிறாங்க. ஆனா தமிழரின் தமிழர் தேசக் கனவை சிதைத்து.. தென்னிந்தியாவை இணைச்சவனே நான் தானடி.

நாகம்மை: சரி சரி நீங்களே உங்களை புளுகினது காணும். வாங்கோ காந்தி அடிகள் கரே ராம் நிகழ்ச்சி நடத்தப் போறாராம். ஒருக்கா போய் இராம தரிசனம் செய்திட்டு வரும்.

பெரியார்: சரி நட. அப்படியே நான் மணியம்மைக்கு ஒரு மணியோடர் அனுப்பிட்டு வாறன். கைச்செலவுக்கு காசில்லை என்றால் அவள் எங்க போவாள். என்னைப் போல பார்பர்னனின் காசிக்குப் போக.. காசியும் இல்ல இஞ்ச விண்ணுலகத்தில.

நாகம்மை: எவ்வளவு துணிச்சல் உங்களுக்கு. என்னிடமே சக்களத்திக்கு காசு அனுப்பப் போறன் என்றீங்கள். அதுசரி பார்பர்னனைத் திட்டிக் கொண்டே அவனுடன் நட்பு வைச்சு ரகசியமாய் காய் நகர்த்திய காய் அல்லவா நீங்கள்.

பெரியார்: ஏதோ கிழட்டு வயசில செய்த பாவத்துக்கு பரிகாரம் தேடத்தானடி. பார்பர்னன் அதுதான் பூலோகத்தில யாகம் என்று செய்யுறான் நான் இதை இங்க செய்யுறன்.

நாகம்மை: நாதா.. போதும் உங்கள் ரோதணை. திரும்பத் தொடங்காதீங்க. உந்த பார்பர்ன புராணத்தை. பூலோகத்தில இணையத்தளங்களில வலைப்பூக்களில உங்கட உந்தப் புராணம் தானாம் இப்ப கிட்.

பெரியார்: அப்படியாடி. என்ன தான் இருந்தாலும் என்ர சிஷ்ய கோடிகள்.. பார்பர்ன சாமிமாரின் சிஷ்ய கோடிகளை விட திறமைசாலிகள் தான்.

நாகம்மை: ஆமா.. ஆசை தோசை அப்பளம் வடை. விட்டால் உங்களைப் பற்றியே புளுகிட்டு.. எனக்கு பகுத்தறிவு இல்லை எண்டுவியள். நடவுங்கோ. கெதியா கரே ராம் நிகழ்ச்சி முடியப் போகுது.

- முற்றும்.

(இணையத்தில் எடுத்தது.)

1 comment:

Anonymous said...

நல்ல பதிவு. பெரியார்சாமிகளுக்கு சாட்டையடி.