Monday, February 13, 2006

காதலர் தின வாழ்த்துப்"பா"இயையும் இரு மனங்கள்
இணைந்தோர் அரசமைக்க
அன்பு கோலோஞ்ச
ஆயுள் வரை
அகிலம் நடக்கட்டும்
அன்பின் வழி..!

தென்றல் தாலாட்ட
தெம்மாங்கு தான் பாட
தெவிட்டாத நினைவுகள்
மாசறப் பறக்கட்டும்
காதற் கொடியாய்
ஆட்சிக் கொடியாய்
வெண்கொடியாய்..!

காதல் நடக்கட்டும்
உண்மையாய்...
ஒருவன் ஒருத்திக்குள்
அதுவே...
புனிதம் என்றுமாகட்டும்..!

Sunday, February 05, 2006

சாதிகள் இல்லையடி பாப்பா.. உயர்வு தாழ்வு சொல்வது பாவம்.பாரினில் தமிழன்
தான் ஓர் இனம்..!
மனுக்குல உண்மைகள்
மறந்தும் சிலர்
பார்ப்பர்ணியம் உச்சரித்தே
சாதிக்கத் துடிக்கிறார்
இன்னும் தமிழருள் பிரிவினைகள்..!
பெரியார் ஓதாமல்
ஓதிவைத்தான் வேற்றுமைகள்
சிறுமைகள் காட்டி
மதத்தால் ஒதுக்கி
பேசியது என்னவோ
"வேண்டாம் பிரிவினை"..!
உதாரணம் சொல்ல
ஒரு அம்பேத்கார்
யாரவர்..??!
கேள்விகள் முளைக்க
விடைகள் வரும்
"ஒடுக்கப்பட்டவர்"
இப்படித்தான் இன்னும்
அடையாளம் காவுகிறார் தந்திரமாய்..!

இன்னது இல்லையென்று
அத்தனையும் உச்சரிச்சு
மறைமுகமாய் அனைத்தும் காட்டி
சாதிக்க நிற்கின்றார் சிலர்..!
போடும் கோஷம் என்னவோ
"வேண்டாம் ஒழிப்போம்"..!
கேவலம்...
வேஷங்கள் கலைக்கா
கோமாளிகள் தாமென்ற
உண்மை உணரவில்லை அவரும்..!

தமிழனவன் திராவிடன்
தென்னகம் அவன் வாழ்நிலம்
வஞ்சிக்க வந்த அந்நியம் கண்டு
ஆரியம் திராவிடம் வகுந்து
கொண்ட வீரம் தொலைத்து
மருண்டதேனோ..?!
பிரிவினைகள் பாகுபாடுகள்
தந்ததென்று
இன்னும் வரலாறு வரைவதேனோ..?!
மறந்திட வேண்டியவை
மறுபடி வரலாற்றில்
மதிக்கப்படவும் வேண்டுமோ...?!
பார் இன்னும்
பார்ப்பர்ணியம் உச்சரிக்கும்
கூட்டம் இருக்குது...
பெரியார் வழியில்
வந்த சிறுமைகள் அவை
வாய் கிழிய உச்சரிப்பது
இன்னும் என்னவோ
வேற்றுமை தான்..!

பேடிகள்
இந்தக் குள்ளநரிகள்
கையறுத்து
அழிப்போம் மீளப்பதியும்
தந்திரச் சான்றுகள்..!
திராவிட உலகில்
தமிழன் ஓர் மனித இனம்
அதுவே உண்மை...
சாதித்து நின்று
கரம் கோர்ப்போம் ஓரணியில்
மற்றதுகள் மறுப்போம்..!

வடிவங்கள் மாறினும்
புரட்சியாய் தோன்றிலும்
பலரும் போதிப்பது என்னவோ
ஏற்றமும் தாழ்வும்..!
வேண்டாம் அது
இக்குஞ்சுகள் போல
தமிழரும் மனிதராகி
சமத்துவம் காணுவோம்
நமக்குள்ளேயே...!
வேண்டாத உச்சரிப்புகள்
தவிர்ப்போம்...
மறந்தவை மரிக்கட்டும்..
நிரந்தரமாய்..!

Wednesday, February 01, 2006

உலகின் செல்வந்த நகரம்.கடந்த 14 ஆண்டுகளாக உலகின் செல்வந்தர் நகரமாக விளங்கிய ஜப்பானிய ரோக்கியோ நகரத்தை இரண்டாம் இடத்துக்கு நகர்த்தி விட்டு அந்த இடத்தை நோர்வேயின் தலைநகரம் ஒஸ்லோ பிடித்துக் கொண்டு விட்டது. உலகில் 130 நகரங்களில் இருந்து அவற்றில் நிலவும் வாழ்க்கைச் செலவினத்தின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் உலகின் முதல் 10 செல்வந்த நகரங்களும் கீழே தரப்படுகின்றன. 14 ஆண்டுகளுக்கு முதல் ஈரானிய தெகரான் நகரம் மிகச் செல்வந்த நகரம் என்ற இடத்தில் இருந்ததாம் இன்று அதுவே ஏழை நகரமாகியும் உள்ளது.

10 MOST EXPENSIVE CITIES

1st - Oslo, Norway
2nd - Tokyo, Japan
3rd - Reykjavik, Iceland
= 4th - Osaka, Japan
= 4th Paris, France
6th - Copenhagen, Denmark
7th - London, UK
8th - Zurich, Switzerland
9th - Geneva, Switzerland
10th - Helsinki, Finland


தகவல் ஆதாரம் இங்கு