Thursday, December 20, 2007

ஈ வெ ராமசாமியும் கொள்கைகளும் திருகுதாளங்களும்.

ஈ வெ ராமசாமி (பெரியார் எனப்படுபவர்) வட இந்திய ஆரியரை எதிர்க்க திராவிடம் பேசினார் எங்கிறீர்கள்.. இன்று தமிழக திராவிட கழகங்கள் வட இந்திய ஆரியக் கட்சிகளுடன் ஒத்துழைத்து தமிழருக்கு எதிராகச் செயற்படவில்லையா..???! அதேபோன்றே ராமசாமி காந்திஜியிடம் அரசியல் நடத்த பேரமும் பேசியவர். இதுதான் திராவிட வாதத்தின் ஆரிய எதிர்ப்பின் தார்ப்பரியமா..???! இப்படி சொந்த மக்களையே ஏமாற்றி அடுத்தவருக்கு அடிபணிந்து பிழைப்பு நடத்த ஏன் ஒரு திராவிடக் கொள்கை. அது எனியும் நமக்கு அவசியம் தானா..??! தமிழன் என்ற இன உணர்வை ஊட்டவல்ல தமிழ் தேசிய எழுச்சிதான் இன்றைய உலகில் தமிழரின் இருப்புக்கு அவசியாமனது..!

சந்திரகாசனை (தந்தை செல்வாவின் உறவினர்) யாரும் ஈழத்தமிழ் பற்றாளர் என்று இனங்காண்பதில்லை. காரணம் அவரின் செயற்பாடுகள்.. நேரடியாக ஈழத்தமிழரின் போராட்டத்துக்கு எதிராக அமைந்திருப்பதால். நேரடியாக அன்றி எத்தனை பேர் ஈழத்தமிழர் போராட்டத்தை எதிர்க்கிறார்கள். அவர்களை எல்லாம் அவதானிக்கிறமா.. அப்படியானவர்களை இனங்காண்கிறமா.. இனங்காட்டத்தான் முடிகிறதா.. இல்லையே..??! அவ்வளவுக்கு ரகசியமாகவும் திரைமறைவிலும் மற்றவர்கள் எளிதில் உணராத படிக்கும் நடந்து கொள்கின்றனர்.

ஈ வெ ராமசாமி தனது பத்திரிகையில் ஒரு அறிக்கையை வெளியிட்டதும்.. அதை ஈழ ஆதரவு என்று காட்ட முனைகிறீர்கள். அதைவிட அவர் ஏதும் செய்யவில்லை. மா பொ சி போன்றவர்களை சத்தியசீலன் ( ஈழ விடுதலைப் போராட்ட முன்னோடிகளில் ஒருவர்) சந்திக்க முற்பட்ட போது அவர்கள் உங்களின் போராட்டத்தில் நியாயம் இருக்கிறது என்றாலும்.. எமது ஆதரவைக் கொண்டு என்ன செய்யலாம் என்று நினைக்கிறீர்கள் என்று கேட்டனர். காரணம் அவர்கள் உணர்ந்திருந்தார்கள் இந்திய மத்திய அரசின் பலமும் அதன் தமிழர் விரோதப் போக்கையும் தெளிவாக..! அதை அவர்கள் மறைக்காமல் செயற்பட்டனர். இன்று வரை அதுதான் நிலை. இந்தியா தனது நலனுக்கு வெளியில் எம்மை ஆதரிக்கவே இல்லை..!ஆனால் ராமசாமி என்ன செய்தார்.. எதையும் ஆழமாக சிந்திக்கத் தெரியாத ராமசாமி ஒரு அறிக்கையை வெளியிட்டு.. தனது அரசியலை கவனித்தாரே அன்றி அதன் பின் விளைவுகள்.. அதன் மூலம் தோன்ற இருக்கும் நெருக்கடிகள் என்பன குறித்து சிந்தித்தாரா..??!

எம் ஜி ஆர் போன்றவர் தலைவர்கள் செய்த உதவிகள் பற்றி இன்று (அண்மையில் இறக்க முன்னர்) அன்ரன் பாலசிங்கம் போன்றவர்கள் சொல்லித்தான் தெரிய வேண்டிய அளவுக்கு ரகசியமாக இருந்துள்ளன..! ஏன் அவர்கள் பகிரங்கமாக தங்கள் உதவிகளைச் செய்யவில்லை. காரணம் அவர்களுக்கு அவர்கள் இருந்த அரசியல் புறச்சூழல் பற்றிய தெளிவிருந்தது. ஆனால் ராமசாமிக்கு.. அப்படி எதுவுமே கிடையாது. கடவுள் சிலையை செருப்பால் அடித்தால் கடவுளைக் கைவிடுவான் என்பது சிலையில் கடவுளை காண்பவனைக் காட்டிலும் மோசமான நிலை..!மக்கள் மனங்களில் உள்ள ஒரு கொள்கை தொடர்பில் ஒரு மாற்றத்தை சரியான விளக்கங்களுக்கு அப்பால் வெறும் கேலித்தனமான செயற்பாட்டால் ஏற்படுத்த முடியாது. இந்த எளிமையான உண்மையைக் கூட புரியக் கூடிய அறிவு ஈ வெ ராமசாமியிடம் இருக்கவில்லை..!

இந்துமதத்துக்கும் மூடநம்பிக்கைக்கும் வெகுலாவகமா முடிச்சுப் போடிறீங்கள். ஆனால் மூடநம்பிக்கைகளில் அதிகம் ஈடுபட்டவர்கள்.. முனியையும்.. ஐயனாரையும்.. வைரவரையும் வணங்கிய பழங்குடி மக்கள் தான். அதனால் தான் அவ்வழிபாட்டு முறைகளையும் இந்து மதம் உள்வாங்கி அதற்கு ஆன்மீக விளக்கமளித்து மக்களிடம் மூடநம்பிக்கைகளைக் களைய முனைந்தது. காரணம் அவர்களின் மூடநம்பிக்கைக்கு மதமல்ல காரணம்..அறியாமையே. கல்வி அறிவற்ற தன்மையே. கல்வி அறிவால் இந்துமதம் (சைவம்) கொண்டுள்ள ஆன்மீக மெய்யியல் அறிவைப் புகட்ட முடிகின்ற போது மனிதன் தன்னிலை மட்டுமன்றி இந்தப் பிரபஞ்சத்தின் தன்மை குறித்தும் அறிகின்ற போது அவன் அறியாமை இருளில் இருந்து விடுபடுகின்ற போது மூடநம்பிக்கைகளும் பேராசைகளும் அவனை விட்டுக் கழன்று விடுகின்றன. அப்போது அவனிடம் தெளிவும் மனிதாபிமானமும் அன்பும் மிகும்..! அத்தோடு அறிவியல் அறிவும் வழங்கப்படும் போது அவன் சிறந்த சிந்தனைவாதியாக நவீன உலகின் படைப்பாளியாக புதிய புதிய கண்டுபிடிப்புக்களுக்கான முன்னோடியாக திகழ வழிபிறக்கும்..!

அதைவிடுத்து.. சிலைக்கு சோடா புட்டியால் அடித்தால் அறியாமை விலகாது. கடவுள் சிலைக்குப் போட்டியாக பதிலாக ராமசாமிக்கு 95 அடியில் சிலை வைத்தால் கல்வி அறிவு எழாது. மாறாக குரோதமும் கோபமுமே வளர்க்கப்படும். சாதி அழிக்கின்றன் என்ற சிலர் இங்கு எத்தனை தடவைகள் சாதிப் பெயர்களையும் சாதிகளையும் உச்சரித்திருப்பார்கள். காரணம் அவர்கள் ராமசாமி வாரிசுகளாகவே மாறிவிட்டதால். இதைத்தான் ராமசாமி என்ற கன்னடனும் செய்தது. பிராமணன் பிராமணன் என்று கொண்டே... அந்த ஒரு மக்கள் குழுமத்தின் மீது தனக்குள்ள வெறுப்பை என்னென்ன வழியில் வெளிக்காட்டி தன்னை பிரபல்யம் அடையச் செய்யலாமோ அதை செய்தார். அதன் மூலம் தமிழர்களைப் பிளவுபடுத்தி தமிழர்களின் அரசியல் தளத்தைப் பலவீனமாக்கி அதில் தான் எங்கு இலாபம் பெறலாம் என்று தான் ராமசாமி அதிகம் அக்கறை செய்தாரே தவிர.. தமிழக மக்களின் அறியாமையை விலக்கி.. அறிவை வளர்த்து ஒற்றுமையை ஓங்கச் செய்து.. மூடநம்பிக்கைகளை களையச் செய்ய முற்படவில்லை.

இந்துமதம் அறியாமையை வளர்க்கின்ற மதமல்ல. இந்து ஒரு கலாசாரமாக உலகில் மிளிர்கிறது. எத்தனையோ பல்கலைக்கழகங்களில் இந்துமதமும் இந்துக்கலாசாரமும் போதிக்கப்படுகின்றன. அந்தளவுக்கு அதற்குள் மெய்யியல் மற்றும் வரலாற்று அறிவியல் கலந்திருக்கிறது. ஆனால் ராமசாமியைப் போல கண்ணை மூடிக்கொண்டு ஒரு சமூகத்தின் மீதுள்ள வெறுப்பை உமிழ.. அறிவிலித்தனமான வாதங்களை முன் வைத்து மொத்த மதத்தையும் இழிவுபடுத்தும் வகையில் அதுவே மூடநம்பிக்கையின் மூலம் என்பது மோசமான நிலை..! ஆய்ந்து அறியும் தன்மையற்ற நிலை..!

மூடநம்பிக்கைக்கு மதம் அல்ல காரணம். மனித அறியாமையே காரணம். மனித அறியாமைக்குக் காரணம் கல்வி அறிவின்மை. கல்வி அறிவின்மைக்குக் காரணம் அரச சலுகைகளுடன் கூடிய கல்வியை அல்லது இலவசக் கல்வியைக் கூட சரிவர பெற இல்லாத ஆர்வமும் வழங்க முற்படாமையும்..! அடிப்படைக் கல்வி அறிவற்ற ராமசாமிக்குள்ளும்.. ஒரு அறியாமை இருந்திருக்கிறது என்பதை.. அவர் தன் கருத்துக்களைச் சொல்லிய விதத்தில் காண முடிகிறது.

ராமசாமியை திராவிடக் கட்சிகள் தான் "தந்தை" "பெரியார்" எங்கின்றனர். காந்திஜிக்கு வழங்கப்படும் மரியாதை இந்திய மண்ணில் ஏன் அண்டை மாநிலங்களில் கூட ராமசாமிக்கு கிடையாது. ஏன்..?? அவரின் சொந்த மாநிலமான கர்நாடகத்தில் அவருக்கு ஒரு சிலை இருக்கோ தெரியாது..! கர்நாடகத்தில் ஒரு கட்சி கூட "ராமசாமியின்" புகழ்பாட இல்லை..! திராவிடக் கொள்கை பேசி கன்னடன் என்று தன்னை இனங்காட்டி கன்னட விசுவாசத்தை வெளிப்படுத்திக் கூட ராமசாமி கன்னட தேசத்தில் மதிக்கப்படவில்லை. காரணம் என்ன..??! ராமசாமியின் கோமாளித்தனக் கொள்கைகளும் போலிப் பேச்சுக்களும்.. பேச்சுக்கும் செயலுக்கும் தொடர்பில்லாத கீழ்த்தரமான பண்பாடற்ற பழக்கங்களுமே..! இப்படியான ஒருவர் தமிழர்களுக்கு "தந்தை" "பெரியார்" என்று இனங்காட்டப்படுவது திராவிடக் கட்சிகளுக்கு அரசியல் நடத்த உதவலாம்.. தமிழர்கள் மத்தியில் உள்ள பிளவுகளை போக்க உதவாது.

ராமசாமியை பிராமண சமூகம் வெறுக்கக் காரணம் என்ன..??! பிராமண சமூகம் என்பதை தமிழர்கள் என்று இனங்காணாத அந்த நிலையே..! பிராமண சமூகம் சரி இதர சமூகங்களும் சரி சாதியச் சாயங்களால் பிளவுபடுத்தப்பட்டிருப்பினும்.. இனத்தால் மொழியால் கலாசாரத்தால் தேசத்தால் பண்பாட்டால் தமிழர்களே..! அந்த வகையில் அவர்கள் எல்லோரையும் ஒன்றிணைக்க ஏன் முற்படவில்லை. தமிழ் தேசியம் அதைச் செய்யும்..! திராவிடக் கொள்கைகள் நிச்சயம் அதற்கு இடமளிக்காது. காரணம் திராவிடம் சாதி இல்லை இல்லை என்று கொண்டே சாதியை வளர்த்ததும் அரச ஆட்சி மட்டத்துக்கு சாதியைக் கொண்டு வந்ததுமே அதனால் சாத்தியப்பட்டது.

மூடநம்பிக்கைகளை அகற்ற கல்வி அறிவை ஊட்டி அறிவை தெளிவை வளர்க்க வேண்டுமே தவிர அறியாமை உள்ள மக்களிடம் குரோதத்தை கோபத்தை வன்முறையைத் தூண்டி.. சொந்த இனத்தின் இன்னொரு சமூகத்தின் மீது கொலை வெறியை வெறுப்புணர்வை ஊட்டுவதல்ல சமூக அக்கறை.. சமூகப் புரட்சி..! அந்தவகையில் ராமசாமி அரசியலுக்காக தனது செல்வாக்குக்காக தமிழர்களை பிளவுபடுத்த கையில் எடுத்ததே பிராமண எதிர்ப்பும் பார்பர்னிய ஆரிய மாயைகளின் உச்சரிப்பும்..!

அறியாமையைப் போக்கி அறிவியலை வளர்த்து கல்வி அறிவுடன் ஆன்மீக அறிவையும் ஊட்டி மெய்யியல் அறிவையும் பெறும் ஒரு சமூகம் எப்போதும் தளம்பலற்ற.. உயர்சியை ஒற்றுமையை சந்திக்கும் என்பதற்கு யூதர்கள் நல்ல உதாரணம்.

தமிழர்கள் அதை உணர்வதும் ராமசாமி போன்ற சந்தர்ப்பவாத உளறல் கோமாளிகளின் கொள்கைகைகளை தூக்கி எறிஞ்சிட்டு.. தங்கள் அறியாமை திரை விலக்கி.. தங்கள் தனித்துவத்தை இழக்கச் செய்யும் திராவிட மாயைப் போர்வைக்குள் இருந்து வெளிவந்து தமிழ் தேசிய எழுச்சியுடன் தமிழ் தேசிய உணர்வுடன் கூடிய தமிழர்களாக உலகில் பரிணமிக்க சிந்திக்க வேண்டும்.

ஆரியரை எதிர்ப்போம் என்று கூறிக் கொண்டே ஆரியர்களாக தாங்கள் வரையறுப்பவர்களின் கொள்கைக்கும் பிழைப்புக்கும் முண்டுகொடுக்கும் திராவிட கழகங்களின் கொள்கைகள் தமிழின மொழி அழிப்பைப் பற்றிய அக்கறை அற்றவை என்பதை இன்று தமிழர்கள் நன்கே உணர்ந்துள்ளனர்..! இதுதான் ஈ வெ ராமசாமியின் கொள்கைகள் செய்த அறுவடை..!

தமிழகம் இந்திய தேசியத்தால் தனது தமிழ் தேசிய உணர்வை இழந்து நிற்க மூல காரணமே திராவிடக் கழகங்கள் என்றால் மிகையல்ல..! தெரிந்தோ தெரியாமலோ அவர்கள் தமது தவறுகளைத் தொடர்கின்றனர். இதற்கும் இந்து மதத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை..!

பாதையைப் பற்றிப் பேசனும் என்றால் எதற்கையா இராமரைப் பற்றிப் பேசுறீங்க...! இராமரே இல்லை என்பவர்கள் திரும்பத் திரும்ப அதை நிரூபிக்க வேண்டியதில்லை. தங்களின் அறிவார்த்த அணுகுமுறையைச் செய்ய வேண்டும். வெறுமனவே வார்த்தை ஜாலங்களால் அரசியல் செய்யலாம் அறிவியலை அணுக முடியாது. கப்பற் பாதை அமைப்புக்கு சாத்தியமான முன்னோடியாக அமையத்தக்க அடிப்படை அறிவியல் ஆய்வென்று கூறி ஒரு காத்திரமான ஆய்வை மேற்கொண்டு பாலம் இராமருடையதல்ல என்பதையும் நிறுவி, இதர பிற எதிர்ப்புக்களுக்காக முன்வைக்கப்படும் காரணங்களையும் முறியடிக்க வாய்ப்பிருந்தும்.. அறிவியல் இருந்தும்...அதை செய்ய நிரூபிக்க தமிழகப் பல்கலைக்கழகங்களுக்கு திராணி இல்லை. ஆனால் தமிழக முதல்வர் கேட்கிறார் இராமர் எந்த பல்கலைக்கழகத்தில் படித்தவர் என்று. காலங்காலமா இராமரே இல்லை என்று சொல்லுறவர் இப்படி வினவுவது எவ்வளவு அறிலித்தனமானது மட்டுமன்றி விசமத்தனமானதும் கூட..! இப்படிப்பட்ட மு... முக்கள் தான் தமிழரின் தலைவர்கள்..! இவர்கள் தாம் ராமசாமியின் வாரிசுகள்..! இவ்வாறான தலைவர்கள் உலகில் சுய சிந்தனைமிக்க, அறிவியற் சமூகமாக, சுயாதியபத்திய ஆட்சியுரிமையுள்ள, தமிழன் என்ற இன அடையாளம் தாங்கி மிளிர இடமளிப்பரா..??!

மின்னஞ்சல் வழி கிடைத்த கட்டுரை.

Sunday, December 16, 2007

வேலி போடலையோ வேலி...

சீமைக் கிளுவைக்குள்
சீவியம் செய்தவள்
சீமைக்குப் புறப்பட்டாள்
சீறி எழுந்த
சிறீலங்கன் எயார் லைன்ஸில்..!

கூலி கொடுத்து
தாலி வாங்கி
வேலி போட்டனள்
நாணி நின்றவள்
கூனி நிற்பாள் என்று..!

மாதம் பத்து
சும்மா இருந்தவள்
சுமந்தனள்
சுமைகளோடு
சுதந்திரக் கனவு..!

தாலி பிரித்து
வேலி தாண்டி
நடப்பது பகற் கனவு
கண்டனள் ஏங்கினள்..
படிதாண்டிப் பத்தினியும்
பரத்தையானதில்..!

சீமையில்
சீதனம்
சீர் தனம்
சீ சீ.. என்பதில்
சிந்திக்க இருக்கு
சில சுயநலம்..
அதில்
அடங்கி இருக்கு
பலவீனம்..
பண வீக்கம்..!

சீமைச் சிறப்புக்குள்
சீரழியும் இயற்கைக்குள்
சீமைக்கிளுவைகள்
சீர் பெறுமா..??!
விடை தேட
ஆணும் பெண்ணும் எங்கே..??!
கலந்தடிக்கிறார்
போதையில் இங்கே..!


சுட்டுப் போட்டது யாழ்.கொம் இல் இருந்து.

Monday, November 26, 2007

தமிழீழ அன்னையவள் சேயினை வாழ்த்துவம் வாரீர்.செந்தனல் பொங்கும் விழிகள்..
செருமி நிமிரும்
அவன் நெஞ்சின் உறுதி..!
செம்மை தம் வாழ்வு
செந்தமிழ் மண்ணின் விடுதலை
சேயவன் சிந்தனை..!
செல்லம் அவன்
எங்கள் ஈழத்தாயின்
மூத்த மகன்..!
அண்ணன் பிரபாகரன்
வாழிய என்றும்
மக்களின் மனங்களில்
வெற்றி எனும் முரசம் முழங்க..!


பட உதவி: பதிவு.கொம்

Wednesday, November 21, 2007

வீர தீபம் கார்த்திகை 27தீவினில் ஒரு தீபம்
அது வீர தீபம்
உடல்தனை உருக்கி
உயிரினை அளித்து
மூட்டிய தீபம்

கார்த்திகை மாதம்
மலர்ந்திடும் மலரும்
காட்டினில் சிறுத்தையும்
வளவினில் செம்பகமும்
வீதியில் வாகையும்
வணங்கிடும் தீபம்
அது வீர தீபம்

மக்களின் மனங்களில்
மலர்ந்திடும் நினைவுகள்
சொரிந்திடும் விழினீரில்
உருகியே தாழ்ந்திடும் தீபம்
அது வீர தீபம்

விடியலின் ஒளிதேட
இருளோடு கலந்திட்ட
தமிழீழ மைந்தரவர்
ஏற்றிய தீபம்
அது வீர தீபம்

காற்றோடு சாயினும்
மழையோடு மாழினும்
தமிழீழ மண்ணிலது
அணையாத தீபம்
அது வீர தீபம்

வேங்கைகள் உயிரது
வேள்வியில் கலந்திட்ட
வேளையில் பிறந்திட்ட
மாவீர தீபம்
அது வீர தீபம்

அழியாத நினைவோடு
நெஞ்சினில் வாழ்ந்திடும்
வீரர்கள் உருவினில்
ஏற்றிடும் தீபம்
அது வீர தீபம்

வையகம் உள்ளவரை
ஒளிர்ந்திடும் தீபம்
கார்த்திகை மாசத்து
மாவீரர் தீபம்
அது எங்கள் வீரர் தீபம்.

கரங்கள் கூப்பியே
நினைவுகள் ஒருக்கியே
காற்றும் மெளனிக்க
காவியம் படைந்த
நாயகர் நினைவோடு
விழி சொரியும் பூ வைத்து
ஏற்றுவோம்
காத்திகை தீபம்
அது வீர தீபம்

விடியலில் என்றும்
ஒளிரட்டும்
விடி வெள்ளியாய்
கார்த்திகை 27 இல்
கடமை மறவாது
ஏற்றும் தீபம்
அது வீர தீபம்.


Friday, November 09, 2007

பெரியார் படக் காட்சி அறிவியலுக்கு விரோதமானது.

அண்மையில் பிரித்தானியா University of Utah நடத்திய ஆய்வில் இருந்து குறைந்தது மாதம் ஒரு முறை விரதம் அல்லது உண்ணா நோன்பிருப்பது இதய நோய்களை கட்டுப்படுத்த உதவும் என்ற தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

Fasting for one day a month 'cuts the risk of heart attack'

Skipping meals once a month could help stave off a heart attack, say scientists.

Fasting for at least 24 hours cuts the risk of coronary artery disease by up to 40 per cent, compared with those who eat every day, research shows.

Experts believe the break from food could help 're-set' the body's metabolism, enabling it to work more efficiently as a result.


மூலப் பிரதிக்கான இணைப்பு.

ஆனால் அண்மையில் வெளியிடப்பட்ட "பகுத்தறிவு" வாதி என்று பெயர் சூட்டப்பட்ட பெரியார் என்ற ஈ வெ ராமசாமி நாயக்கரின் வாழ்க்கைக் குறிப்புப் பற்றிய படத்தில் விரதங்கள் மூடநம்பிக்கைகள் என்ற பாங்கில் காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இதை எள்ளளவும் அறிவியல் பகுப்பாய்வுப் பார்வைக்கு உட்பட்ட காட்சியமைப்பாகக் காண முடியவில்லை. இந்த பகுத்தறிவுப் பரப்புரைக்கு மாறானதாக அறிவியல் ஆய்வு வெளிப்பட்டிருப்பதானது பகுத்தறிவென்று மக்களை அறிவியல் சிந்தனைக்கு அப்பால் இட்டுச் செல்லும் மூடத்தனமான செயலைச் செய்வதாகவே நோக்க வேண்டியுள்ளது.

இவ்வதானிப்புக் குறிப்பை தருவது சர்வதேச தமிழ் இளையோர் அமைப்பு.

Saturday, November 03, 2007

வெந்தனல் மீது வேங்கை போனது....வெந்தனல் மீதினில்
புலி போனது
செந்தனலானது விழிகள்
சுந்தரத் தமிழீழமதில்
சிங்களம் ஆடுது போர்வெறி..!

சரித்திரம் படைத்திடும்
இது தமிழ் இனம்
சிங்களச் சேனைகள்
சிதறிடும் வேளையில்
சிரிப்பின் செல்வனே
தமிழ்ச்செல்வா
நீ இன்னும் சிரிப்பாய்..!

மில்லர்
திலீபனுடன்
ஆயிரம் ஆயிரம் வேங்கைகள்
உன்னுடன்
விடியலின் வேளையில்
தமிழீழ தேசத்தின்
ஒளிர்வதில்
தங்க மேனிகளாய்
மிளிர்வீர்கள்...!

தமிழ் பிஞ்சுகள்
நெஞ்சுகள் சுமந்திடும்
நினைவுகள்
தாங்கிடும்
வேங்கைகள் உங்கள்
வீர நினைவுகள்.

மரணத்தின் பின்னொரு
வாழ்வது காண்பீர்
தாயக விடுதலையின்
புனித பயணத்தில்
பாதையில் வித்தான
மாவீரர்களே...!

உறங்குங்கள் இன்று
தமிழர் வீர வரலாறு
காவியமாகிடும்
வேளையில்
மீண்டும்
துயில் எழுப்புகிறோம்
வீர பரணி பாடியே..!


Thursday, November 01, 2007

ஈழத்தமிழரை பலவீனப்படுத்த புகுத்தப்படும் தலித்தியம்.

ஈழத்தில்.. ஈழப்போராட்டம் ஆரம்பமாகிய பின்... தலித்தியம் என்ற அடிப்படையின் கீழ் சமூகப்பிரிவினைகள், இந்தியாவில் உள்ளது போன்று, ஆழப்படுத்தப்பட்டு அரச நிர்வாக அலகில் செல்வாக்குச் செய்யும் அளவுக்கு என்று எதுவும் கிடையாது.

ஆனால் புலம்பெயர்ந்த சில தமிழின தேச விரோத சக்திகள் அந்நிய அருவருடிகளின் காசுக்கும் தங்களின் சுய இலாபத்துக்கும், புகழுக்கும் என்று ஈழத்தமிழ்மக்களைப் பிரித்தாளும் தந்திரோபாயத்துக்கு விலை போய் ஈழத்தில் தலித்தியம் என்பது உள்ளதாகக் காட்டி அல்லது நிறுவி.. அதற்கு உரிமைக்குரல் எழுப்ப முனைகின்றனர்.

ஈழத்தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டமானது வெறுமனவே சிங்கள பெளத்த பேரினவாத ஆதிக்கத்துக்குள் இருந்தான விடுதலை என்பதற்கும் மேலாக அனைத்து வித சமூக விடுதலையையும் ஒருங்கிணைத்து கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நகர்ந்து வந்துள்ள காலக்கட்டங்களில் கூட எழாத தலித்தியவாதம் இன்று புலம்பெயர்ந்து சொகுசு வாழ்க்கை வாழும் சிலரால் புகழுக்காகவும் பிற தீய சக்திகளின் தேவைக்காவும் முன்னிறுத்தப்படுவது குறித்து ஈழத்தமிழ் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

இந்த சக்திகளுக்கு பிபிசி தமிழில் உள்ள சில இந்திய தலித்தியவாத சுவாசத்தில் குளிர்காய்பவர்களும் பிரச்சார அனுசரணையாளர்களாக இருந்து பாரீசில் நடந்த ஒரு குட்டி மாநாட்டுக்கு பெரிய தோற்றம் கொடுக்கும் வேலையை முடுக்கிவிட்டுள்ளனர்.

ஈழத்தில் சிங்கள பேரினவாத ஆதிக்கத்தை மூடிமறைத்து தமிழர்களின் அடிமைத்தனத்தை மறைத்து அரசியல் செய்ய முனைந்த முன்னாள் தமிழ் அரசியல்வாதிகள், சாதி மற்றும் பிரதேச வாதங்களை முன்னிலைப்படுத்தி மக்களை பிரித்தாண்டு தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டனர்.

ஆனால் அந்தக் குள்ள நரி அரசியல்வாதிகள் ஈழப்போராட்ட சக்திகளின் உருவாக்கத்துக்குப் பின்னர் இருந்த இடம் தெரியாமல் அந்நிய தேசங்களுக்கு ஓடிப்போயினர்.

மீண்டும் கருணா போன்ற சந்தர்ப்பவாத தமிழினத் துரோகிகள் பிரதேசவாதத்தைக் கையில் எடுத்து தமிழீழ தேசத்தை இரு கூறாக்கி தமிழர்களின் பாரம்பரிய நிலத்தொடர்ச்சியை சிதைக்க முனையும் சர்வதேச மற்றும் சிங்கள பேரினவாத சக்திகளுக்கு உதவி தங்கள் சொகுசு வாழ்க்கையை தீர்மானிக்க முற்பட்டுள்ள இந்தச் சந்தர்ப்பத்தில்..

தலித்தியம் என்ற போர்வையில் தலித் மக்கள் என்று தமிழ் மக்களுக்குள்ளேயே பிரிவினைகளை தோற்றுவித்து ஆழப்படுத்தி தமிழ் தேசியத்தின் வழி ஒற்றுமைப்பட்டுள்ள ஈழத்தமிழ்மக்களை தலித்து சாதி என்ற சமூகப் போலிகளால் கூறுபோட்டு பிரித்தாண்டு தமிழ் தேசிய இருப்பை இந்தியாவில் சீரழித்தது போன்று ஈழத்திலும் சீரழிக்க சில அந்நிய சக்திகளும் சிங்களப் பேரினவாத சக்திகளும் முனைப்புக்காட்டி வருவதை இன்று அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

ஈழத்தைப் பொறுத்தவரையும் புலம்பெயர் தேசங்களைப் பொறுத்தவரையும் மனித அடிப்படைத் தேவைகளான கல்வி சுகாதாரம் இருப்பிடம் உணவு போன்றவற்றிற்கு எந்த சமூகப்பாகுபாடும் காட்டப்படுவதில்லை. தகமை அடிப்படையில் தொழில் வழங்குதல் என்பது சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு அப்பால் அனைவருக்கும் அனைத்தும் என்ற நிலையை வழங்கியுள்ளது. ஈழத்தில் இலவசக் கல்வி மூலம் எல்லா மக்களுக்கு கல்வி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. கல்வி அறிவுமிக்க சமூகம் ஒன்றில் தலித்தியம் என்ற பிரிவினை நோக்கம் கொண்ட தமிழ் மக்களைப் பலவீனப்படுத்தக் கூடிய நச்சுக் காரணி ஒன்றை உள்நுழைப்பதையிட்டு மக்கள் விழிப்புடன் இருப்பதுடன் தமிழ் தேசியத்தை, இந்தியாவில் திராவிட வாதம், இந்திய தேசிய வாதம் மூலம் சீரழித்தது போன்று ஈழத்திலும் பிரதேசவாதம் தலித்தியவாதம் என்ற சமூகப் பிரிவினைவாதங்களை உள்நுழைத்து சீரழிக்க முனைவதற்கு இடமளிக்கக் கூடாது.

அதுமட்டுமன்றி இந்த தலித்தியவாதத்தை ஈவெ ராமசாமி அடியார்களாக தங்களை இனங்காட்டிக் கொள்ள விரும்பும் சில தமிழீழ தேச விரோத சக்திகள்... ஈழத்தமிழர் மத்தியில் பிரிவினையை விரும்பும் சக்திகள் "தலித்திய உரிமை வேண்டுதல்" என்ற கவர்ச்சிகர தலைப்பின் கீழ் ஈழத்து தமிழ் மக்களுக்குள் சமூகப் பிரிவினைகளை ஆழப்படுத்தி அதனை தங்கள் சுய இலாபத்துக்காகப் பயன்படுத்த முனைகின்றனர்.

தலித்தியம் என்பதன் மூலம் புலம்பெயர்ந்துள்ள எமது எதிர்கால சந்ததிக்குள்ளும் சாதியப் பிரிவினை என்ற நச்சு விதையை ஊன்றிவிட முனைகின்றனர். தமது வெட்டிப் புகழுக்காக ஈ வெ ராமசாமியை தலையில் தூக்கி வைத்து ஆடும் இந்தக் கும்பல்கள் தமிழகத்தில் உள்ளது போன்று ஈழத்திலும் சாதிய அடிப்படையில் மக்களைக் கூறுபோட்டு அந்நிய சக்திகளுக்கும் அவர்களின் தேவைக்கும் ஏற்ப, தமிழ் தேசிய அடிப்படையில் அமைந்த தமிழீழ விடுதலைப் போராட்டத்தை பலவீனப்படுத்த புலம்பெயர் தமிழ் மக்களின் தமிழீழ விடுதலைப் போராட்ட உணர்வை.. ஆதரவுத்தளத்தை கூறுபோட அல்லது பலவீனப்படுத்த வழிவகைகளை செய்ய முற்படுகின்றனர்.

இந்த சக்திகள் தொடர்பில் மக்கள் மிக அவதானமாக இருப்பதுடன், ஈழத்தில் தமிழ் மக்கள் தமிழ் தேசியத்தின் மூலம் பிரதேச சாதி மத சமூக பொருளாதார வேறுபாடுகளுக்கு அப்பால் ஒன்றிணைந்திருப்பதையும் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு தமது பங்களிப்பை தமிழர்கள் என்ற வகையில் தமது தேசத்துக்காக தொடர்ந்து வழங்கி வருவதையும் முழு உலகுக்கும் என்றும் தமது ஒற்றுமையின் மூலம் எடுத்துக்காட்ட முனைய வேண்டும்.

தமிழீழ விடுதலைப்புலிகளை தமிழ் மக்களிடமிருந்து பிரித்துக்காட்டி அவர்களை தனிமைப்படுத்தி தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை அழித்தொழிக்க முனையும் சர்வதேச வல்லாதிக்க சக்திகளும் பிராந்திய வல்லாதிக்க சக்திகளும் சிங்களப் பேரினவாதிகளும் இப்படியான சமூகப் பிரிவினைகளைத் தூண்டும் கும்பல்களை "சமூக உரிமைக் காப்புப் பணி" என்ற வகைக்குள் அடக்கி அதற்கு மனிதாபிமானச் சாயம் பூசி ஆதரவளித்து வருகின்றதை பாரிஸ் தலித்திய மாநாட்டுக்கு பிபிசி தமிழ் அளித்த முக்கியத்துவம் எடுத்துக்காட்டுகிறது.

தமிழ் மக்கள் பெரும் தியாகங்கள் மூலம் கடந்த 3 தசாப்தங்களாக முன்னெடுத்து வரும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முக்கிய கட்டத்தில் இன்று நின்று கொண்டிருக்கும் இச்சூழ்நிலையில் இவ்வகைச் சூழ்ச்சிகளை மதிநுட்பத்தால் புரிந்து கொண்டு இவற்றில் இருந்து தம்மை விடுவித்துக் கொண்டு இந்த போலி வேசக்கார அருவருடிகளின் செயல்கள் தொடர்பில் வழிப்புணர்வுடன் இருந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தை சிதைக்க முனையும் ஒட்டு மொத்த சக்திகளுக்கும் பதிலடி வழங்க தம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

எமது இனத்துக்கான விடுதலையை உணர்ந்த எமக்கு எமது சமூகத்துக்கான உரிமைகள் தொடர்பில் இவர்கள் பாடம் எடுக்க வேண்டிய தேவை இல்லை என்பதை இப்படியான சக்திகளின் செயற்பாடுகளை முற்றாகப் புறக்கணிப்பதன் மூலம் அவர்களுக்கும் உணர்த்தி இவர்களை உலகுக்கும் இதர தேசங்களில் வாழும் தமிழ் மக்களுக்கு சரிவர அடையாளம் காட்ட வேண்டும். தலித்தியம் பேசி தமிழ் மக்களை கூறு போட முனையும் எல்லா சக்திகளுக்கும் இது ஒரு படிப்பினையாக அமைய வேண்டும். அதற்கான கடமை தமிழ் மக்களின் கையில் இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதை உணர்ந்து செயற்படுவீர்களாக.

யாழ் இணையம்.

Thursday, October 11, 2007

"நிர்வாணம்" என்பது எப்போதுமே ஆபாசமா..??!

ஆபாசம் என்றால் என்ன..??!

நிர்வாணம் என்றால் என்ன..??!

ஆபாசம் என்பது மனிதனில் கீழ்த்தரப் பாலுணர்வை தூண்டுதல் என்பதற்குள் மட்டும் அடங்கி நிற்கிறதா.. அல்லது மனித சிந்தனையில் மனிதனுக்கு உபயோகமற்ற சிந்தனைத் தூண்டலை ஆபாசம் என்பதுவா சரியானது..??!

ஆபாசம் என்பதன்.. கருதுநிலை சூழ்நிலைக்கு, சமூகங்களுக்கு, கலாசார மட்டங்களுக்கு மற்றும் நாகரிகப் பண்புகளுக்கு ஏற்ப மனிதனால் வரையறுத்துக் காட்டப்பட்ட அளவுகளில் மாறுபடுகின்றது என்பதை உணர்கிறோமா..??!

ஆபாசம் என்று வருகின்ற போது நிர்வாணம் என்பதும் ஓடி வந்துவிடுகிறது. நிர்வாணம் என்றால் என்ன.??! அது எப்படி எப்போ ஆபாசம் என்றாகிறது..??!

நிர்வாணம் என்ற பதம் உடலை மையப்படுத்தி அதிகம் பாவிக்கப்படினும் ஆபாசம் என்று வருகின்ற போது உடல் சார்ந்த நிர்வாணமே கருத்தில் அதிகம் கொள்ளப்படுகிறது.

ஆனால் நிர்வாணம் என்ற சொல்லுருவாக்கத்தின் பின்னணியில் உள்ள கருத்தாழம் சரி வர நோக்கப்படுகிறதா..??!

உடலை மூடி வைத்துவிட்டு திறந்து விடுதல் ஒரு வகை நிர்வாணமாகக் காட்டப்படுகிறது. சில ஞானிகளோ அறிவை சூழ்ந்துள்ள அறியாமையை நீக்குதல் நிர்வாணம் எங்கின்றனர். இன்னும் சிலரோ.. துறவின் எல்லை அல்லது தியானத்தின் எல்லை அல்லது உச்ச ஞானத்தின் நிலையடைதல் என்பதை நிர்வாணம் என்பதாகப் பொருள் கொள்கின்றனர். உதாரணம் "புத்தர் பரிநிர்வாணம் அடைந்தார்" இதில் புத்தன் ஆடை களைந்தான் என்பது அர்த்தமா அல்லது அவன் அறியாமை களைந்து வாழ்வின் முழு அர்த்தத்தையும் புரிந்து மெஞ்ஞான அறிவின் உச்சத்தை அடைந்தான் என்பதா சரியானது..??!

ஆபாசம்.. என்று வருகின்ற போது கூட ஆடைகளற்ற உடல் ஆபாசம் என்பது எப்போதும் சரியானதா..???!

உடலை ஆடைகளால் மூடுவதும் மனிதன்.. திறப்பதும் மனிதன்.. அப்படி இருக்க இந்த ஆபாசம்.. நிர்வாணம் என்பவை எப்படி உடல் சார்ந்த சிந்தனைகளாக எழுகின்றன..??! எழுந்தன...??!

ஆபாசம் என்பதும் நிர்வாணம் என்பதும் சிந்தனை சார்ந்து உள்ள ஒன்றாகவே நான் கருதுகின்றேன். எமது சிந்தனையின் தன்மை போக்கு தேவை என்பன தான் ஆபாசம் என்பதையும் நிர்வாணம் என்பதையும் நிர்ணயிக்கிறது.

ஒரு பெண் அரைகுறையாக ஆடை அணிகிறாள் என்பதில் ஆபாசத்தை வரையறுப்பது மனிதனின் சிந்தனையே அன்றி அவளது ஆடைகள் அல்ல. அந்த அரைகுறை என்பதை விலக்கிவிட்டு உடல் என்ற ஒன்று சார்ந்து எமது சிந்தனை சர்வ சாதாரணமாக எழும் எனின் அதில் ஆபாசம் புலப்படாது. எந்த மனிதனுக்காவது தனது உடலைத் தான் பார்க்கும் போது ஆபாசம் தெரிகிறதா..??! அதேன் பிறர் உடலை பார்க்கும் போது அல்லது பிறர் தன்னுடலை பார்க்கின்றனர் எனும் போது மட்டும் ஆபாசம் நிர்வாணம் என்ற சிந்தனைகள் வெளிப்பட ஆரம்பிக்கின்றன.

ஆபாசம் என்ற இந்த சொல்லாடலும் அதன் பின்னால் உருவாகும் கருத்துருவாக்கமும்.. மனிதனின் சிந்தனை செயல் என்பனவற்றின் போக்கை தீர்மானிப்பதால் இதை நான் ஒரு பேசும் பொருளாக்கி இங்கு தருகின்றேன்.

இன்னொன்று ஆபாசம் என்பது மனிதனின் அந்தரங்க உறுப்புகள் சார்ந்து எழுவது.

பாலுணர்வு என்பது பிரதானமாக மூன்று வகையில் தூண்டப்படும். ஒன்று பார்வை மூலம். இரண்டு தொடுகை மூலம். மூன்று உடல் இரசாயனம் மூலம்.

பாலுணர்வுத் தூண்டல் என்பதின் பின்னணியில் தான் ஆபாசம் வரையறுக்கப்படுகிறதா..??! நிர்வாணம் என்பது வரையறுக்கப்படுகிறதா..??! அப்படி என்றால் பாலுணர்வுத் தூண்டலுக்கு ஆளாகாத நிர்வாணம் என்பது ஆபாசம் இல்லை என்றல்லவா வர வேண்டும்.. அப்படித்தானே நோக்க வேண்டும்.

பாலுணர்வுத் தூண்டல் ஆபாசம் நிர்வாணம் அரை நிர்வாணம் என்பதெல்லாம் ஏன் பெண்களை அவர்களின் உடற்கூறுகளை சார்ந்து இக்கருத்துருவாக்கங்கள் எழுகின்றன..??! பெண்ணை ஒரு மனிதன் என்று நிர்வாண நிலையில் வைத்து நோக்கும் போது எப்போதும் ஆபாசம் தோன்றுமா..???! பாலுணர்வு தூண்டல் மட்டும் தான் தோன்றுமா..??! அப்படிப் பாலுணர்வு தோன்றுதல் கூட ஆபாசம் என்றாகுமா..??! பாலுணர்வுத் தூண்டல் அடுத்தவரை பாதிக்காதவரை.. அது எப்படி ஆபத்தானது என்றாகும்..??!

ஆபாசம் என்பது பெண்களுக்குள் மட்டும் தானா நிலைத்திருக்கிறது.. பெண்ணின் துணைப்பால் உறுப்புகள் தானா ஆபாசமானவை..??!

உயிரியலின் படி துணைப்பால் உறுப்புகள் உணர்ச்சித் தூண்டல் உள்ளவை என்பதை ஏற்றுக் கொள்கிறேம். ஆனால் ஆபாசம்.. நிர்வாணம் என்பது அவற்றுள் அடக்கப்படவில்லை.

ஆபாசம் நிர்வாணம் என்பதெல்லாம் எமக்கு காட்டப்படும் வடிவத்தில் தான் பாலுணர்வை தூண்ட செய்யப்படுகின்றதே தவிர.. நிர்வாணம் ஆபாசம் என்பவை இயல்பான வெளிப்பாட்டின் மாறுபட்ட மனிதக் கருத்துருவாக்கத்தின் தாக்கம் என்றே நான் கருதுகின்றேன். மனிதன் வரையறுத்துக் கொண்டவற்றால் தான் உடல் ஆபாசமானதே தவிர உடல் ஆபசத்தோடு தோன்றவில்லை. இயற்கை ஆபசத்தோடு தோன்றவில்லை. நிர்வாணம் என்பது மனித கருத்துருவாக்கம் என்பதுதான் யதார்த்தம். அதை சமூகத்தில் பல்வேறு வரைவிலக்கணங்களோடு பல் வேறு சூழலுக்கும் ஏற்ப பாவிக்கின்றனர். அதுவே மனித சிந்தனைக்கு தகுதியிடலையும் செய்யப் பாவிக்கப்படுகிறது.

ஆக ஆபாசம் என்பது நிர்வாணம் என்பது.. எப்போ குறை.. குற்றமாகிறது.. ஒரு மனிதனின் சிந்தனைக்கு அது காட்டப்பட்ட பரிமானத்தில் தான். ஒவ்வொருவருக்குள்ளும் ஆபாசம் என்ற கருத்துருவாக்கத்தின் பரிமானம் மாறுபட இது வாய்ப்பளிக்கிறதல்லவா. அப்படி இருக்கும் நிலையில் எது குற்றமற்ற நிர்வாணம் எது குற்றமற்ற ஆபாசம்.. எது குற்றமான ஆபாசம்.. குற்றமற்ற நிர்வாணம் என்று காட்டுதலுக்கும் தேவை உண்டல்லவா..??!

அண்மையில் ஒரு பிரதான தமிழ் இணையத்தளம் ஒன்றில் "புதுமைப் பெண்" என்ற தலைப்பின் கீழ் இந்தப் படம் இணைக்கப்பட்டிருந்தது.ஆதாரம்: இங்கு அழுத்தி பிரதான இணைப்பைப் பார்க்கவும்.

இதைப் பார்த்த எனது நண்பன் சொன்னான் இதென்ன ஆபாசமா இருக்குது. இப்படி இருக்கிறதா புதுமைத்தனம். இதில் என்ன புதுமைத்தனம் என்று..??! ஆபாசமாகத் தோன்றல் புதுமைத்தனமா..??! என்று பதிலுக்கு வினவினான்.

எனக்கும் அது நியாயமான கேள்வியாகத்தான் தோன்றியது. ஆடைகளற்ற நிலை என்பது புதுமையல்ல. காரணம் ஆதி மனிதனும் ஆடைகளின்றியே இருந்தான். ஆடைகளால் உடலை மூடுதல் என்ற நிலை தோன்றிய பின்னர் அல்லது அப்படி ஒரு சிந்தனை உருவாக்கத்தை மனிதன் உயர்ந்தது என்று வரையறுத்துக் கொண்டதன் பின்னர் ஆடைகளைக் களைந்து உடலை இயற்கைத்தனமாகக் காட்டல் என்பது புதுமை என்று எண்ணுகின்றனரோ.. அங்கும் மனிதன், தான் பழைய நிலைக்கு மீளுதலை புதிய சிந்தனையாகக் காட்டுறான் அல்லது காட்ட முயல்கின்றான். இயற்கை காட்டவில்லை. அது குறுகிய காலத்தில் பெரிய மாற்றத்தைக் காட்டவில்லை..! என்று விளக்கமளித்தேன்.

அதன் போது எழுந்த எனது இந்த சந்தேகம் இன்னும் இருக்கவே செய்கிறது. அவனில் இப்படத்தை பார்த்ததும் தோன்றியுள்ள கருத்துருவாக்கம் என்னில் இல்லை. நான் இதை ஆபாசமாக நோக்கவில்லை. ஆபாசம் என்று சொல்வதிலும் நிர்வாணம் என்று வரையறுக்கப்பட்ட ஒரு வடிவத்தில் அது உள்ளதை ஏற்றுக் கொள்கிறேன் என்றேன். அவன் இல்லை அப்படி இருக்காது நீ உண்மையை சொல்ல மறுக்கிறாய் எங்கிறான். இங்குதான் தோன்றியது இந்த சொல்லாடல்களுக்குள் பொதிந்திருக்கும் மனித இயற்றுகைகளின் செல்வாக்கும் மனித சிந்தனையை அவை செய்யும் ஆதிக்கமும் என்பதாகக் கருதி உங்கள் முன் இவ்விடயத்தைக் கொண்டு வருகின்றேன்.

ஆனால் பெண்கள் சார்ந்துதான் ஆபாசம் நிர்வாணம் என்ற சிந்தனையோட்டம் இருக்கிறது என்ற நிலைப்பாட்டை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. அப்படிக் காட்டுவதில் புதுமைத்தனமும் இல்லை.

இவ்வோவியம் தொடர்பில் உள்ள விமர்சனங்களையும் சேர்த்து உங்கள் கருத்துக்களை முன் வைக்கலாம்.

இவை தொடர்பில் உங்கள் பார்வைகள் என்ன.. சிந்தனையோட்டங்கள் என்ன..??!

குறிப்பு: 1. தயவுசெய்து குறித்த படத்தை கீழ்த்தரமான பாலியல் கண்ணோடு நோக்காதீர்கள். அது ஒரு ஓவியம். ஓவியனின் சிந்தனைக்கு உருக்கொடுத்த நிகழ்வு. மதிப்பளியுங்கள். அதில் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்திருக்கும்.

2. உங்கள் சிந்தனையில் எழும் வளமான கருத்துக்களை மட்டும் சொல்லுங்கள். நாகரிகமற்ற சொல்லாடல்களைத் தவிருங்கள்.

Tuesday, October 09, 2007

பெரியார் ஒரு தமிழின விரோதி - ஆதாரங்களுக்கு ஆதாரம்

தமிழ் படித்தால் நடைப்பிணமாய் இருக்கலாம் - தமிழ் வெறுப்பு

...தமிழ் மக்கள் என்னும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் என்னும் தமிழானது, முன்னேற்றம் என்னும் உடல் தேறுவதற்கோ வளர்வதற்கோ பயன்பட்டு இருக்கின்றதா? பயன்படுமா? "தாய்ப்பால் சிறந்தது' என்பதில் தாய்ப்பாலில் சக்தியும், சத்தும் இருந்தால்தான் அது சிறந்ததாகும். இங்கு தமிழ் என்னும் தாயே சத்தற்றவள் என்பதோடு, நோயாளியாகவும் இருக்கும்போது அந்தப் பாலைக் குடிக்கும் பிள்ளை உருப்படியாக முடியுமா? தாய்க்கு நல்ல உணவு இருந்தால்தானே அவளுக்கு பாலும் ஊறும்; அந்தப் பாலுக்கும் சக்தி இருக்கும்! தமிழில் நல்ல உணவு எங்கே இருக்கிறது?

இப்படிப்பட்ட இந்தத் தாய்ப் பாலைக் குடித்து வளர்ந்த பிள்ளைகள், இந்நாட்டிலேயே நடைப்பிணமாய் இருப்பதைத் தவிர, அதுவும் மற்றவன் கை காலில் நடப்பதைத் தவிர, உழைப்புக்கு – காரியத்துக்குப் பயன்படும்படியான, தன் காலால் தாராளமாய் நடக்கும்படியான பிள்ளை ஒற்றைப் பிள்ளை தமிழ்நாட்டில் இருக்கின்றதா என்பதை அன்பர்கள் காட்டட்டுமே என்றுதான் பரிவோடு கேட்கிறேன்.

இன்றைய தினம் கூட மேற்கண்ட தமிழ்த் தாயின் பாலை நேரே அருந்தி வளர்ந்த பிள்ளைகள், இங்கிலீஷ் புட்டிப் பாலை அருந்தி இருப்பார்களேயானால், இந்த அன்பர்கள் உட்பட எவ்வளவோ சக்தியும், திறமையும் உடையவர்களாக ஆகி, இவர்கள் வாழ்க்கை நிலையே வேறாக, அதாவது அவர்கள் நல்ல பயன் அடைபவர்களாக ஆகி இருப்பார்கள் என்பதோடு, மற்றவர்களுக்கும் பயன்படும்படியான நல்ல உரம் உள்ள உழைப்பாளிகளாகி இருப்பார்கள் என்று உறுதியோடு கூறுகிறேன்.

பெரியார் "தாய்ப் பால் பைத்தியம்' என்ற நூலிலிருந்து.
-----------------

பெண் விடுதலை - திருமணத்தை அடியொற்றி வந்த பெண் விடுதலை

...பெண்கள், பிள்ளைபெறும் தொல்லையிலிருந்து விடுதலையாக வேண்டும் என்கிற மார்க்கத்தைத் தவிர, வேறு எந்த வகையிலும் அவர்களுக்கு விடுதலை இல்லை என்கின்ற முடிவு நமக்கு கல்லுப் போன்ற உறுதியுடையதாய் இருக்கிறது.

தவிர, "பெண்கள் பிள்ளை பெறுவதை நிறுத்தி விட்டால், உலகம் விருத்தியாகாது; மானிட வர்க்கம் விருத்தியாகாது' என்று தர்ம நியாயம் பேச சிலர் வருவார்கள். உலகம் விருத்தியாகா விட்டால் பெண்களுக்கு என்ன நஷ்டம்? மானிடவர்க்கம் பெருகா விட்டால் பெண்களுக்கு என்ன ஆபத்து ஏற்பட்டு விடக்கூடும்? அல்லது இந்த தர்ம நியாயம் பேசுபவர்களுக்குத்தான் என்ன நஷ்டம் உண்டாகி விடும் என்பது நமக்குப் புரியவில்லை.

"குடியரசு' (12.8.28)
-----------

வெளிநாட்டான் அறிவு இனிப்பு; மொழி கசப்பா ? - அறிவியலையும் ஆங்கிலத்தையும் கலந்தடித்து ஆங்கிலத்தை முதன்மைப்படுத்தல்

சர்வத்தையும் விஞ்ஞான மயமாக மேல்நாட்டு முறைகளைக் கொண்டு ஆக்கி, சர்வத்திலும் மேல்நாட்டானை (புதிய முறைகளை)ப் பின்பற்றி, வளர்ச்சி அடையவே முயற்சிக்கிறோம். திட்டம் போடுகிறோம். இந்தக் காரியங்களுக்கு தமிழர் முத்தமிழர் சங்கங்களையே நம்பி என்ன காரியத்திற்கு, ஆங்கிலக் கருத்தோ,
இங்கிலீஷ் சொல்லோ, ஆங்கிலேயனிடம் பயிற்சியோ இல்லாமல் இங்கிலீஷை பகிஷ்கரித்து விட்டு என்ன சாதித்துக் கொள்ள முடியும்?
----------

பலரும் அறிந்த சொல்லைப் புறக்கணிப்பானேன் ? - தமிழ் மொழி கலைச் சொற்களை கண்டறியத் தூண்டாது ஆங்கிலச் சொற் பாவனையை தமிழில் திணித்தல்.

சாதாரணமாக பிரயாணத்திற்குப் பயன்படும் ரயில், கார், லாரி, பஸ், சைக்கிள் என்ற பெயர்களை எதற்காக மாற்ற வேண்டும்? இந்தியாவில் உள்ள பல நூற்றுக்கணக்கான மொழி பேசும் மக்களும், இந்தப் பெயர்களை அப்படியேதான் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

பெரியாரின் கருத்துகள், "அறிவு விருந்து' என்ற நூலிலிருந்து.
------------

தொல்காப்பியன் மாபெரும் துரோகி தமிழ் இலக்கண கர்த்தாக்களில் ஒருவரான தொல்காப்பியர் மீதான தமிழ் இலக்கண வரம்புக்கு அவசியமில்லாத வசைபாடல்.

தொல்காப்பியன் ஆரியக் கூலி. ஆரிய தர்மத்தையே தமிழ் இலக்கணமாகச் செய்து விட்ட மாபெரும் துரோகி. திருவள்ளுவன் அக்காலத்திற்கு ஏற்ற வகையில் ஆரிய கருத்துக்கு ஆதரவு கொடுக்கும் வகையில், பகுத்தறிவைப் பற்றி கவலைப்படாமல் நீதி கூறும் வகையில், தனது மத உணர்ச்சியோடு ஏதோ கூறிச் சென்றார்.
-------------

வேறு மொழி ஏற்பதால் கேடு என்ன? - பிறமொழித் திணிப்பு.

தமிழை ஒதுக்கி விடுவதால் உனக்கு நட்டம் என்ன? வேறு மொழியை ஏற்றுக்
கொள்ளுவதால் உனக்குப் பாதகம் என்ன? தமிழிலிருக்கும் பெருமை என்ன? நான் சொல்லும் ஆங்கிலத்தில் இருக்கும் சிறுமை என்ன? நமது நாட்டுக்கு கமால் பாட்சா ஆட்சி போன்ற ஒரு வீரனும் யோக்கியனுமான ஒருவன் ஆட்சி இல்லை என்பதால், பல முண்டங்கள் பல விதமாய் பேசி முடிக்கிறதே அல்லாமல், இன்று தமிழைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் யாருக்கு என்ன வந்தது என்று கேட்கிறேன்.
-------------

தமிழ் காட்டுமிராண்டி பாஷை - மொழியின் தொன்மையை வைத்தே அதைப் பழித்தல். அப்ப உலகில் உள்ள பழைய மொழிகள் எல்லாம்.. மனிதர்களின் பகுத்தறிவின் விளைவில்லையா..??! வெறும் காட்டுக் கூச்சலா..??!

இந்த தமிழ் மொழியானது காட்டுமிராண்டி மொழி என்று நான் ஏன் சொல்கிறேன்? எதனால் சொல்கிறேன்? என்று இன்று கோபித்துக் கொள்ளும் யோக்கியர்கள் ஒருவர் கூட சிந்தித்துப் பேசுவதில்லை. "வாய் இருக்கிறது எதையாவது பேசி வயிறை வளர்ப்போம்' என்பதைத் தவிர, அறிவையோ, மானத்தையோ, ஒழுக்கத்தையோ பற்றி சிறிது கூட சிந்திக்காமலே பேசி வருகிறார்கள்.

இப்படிப்பட்ட இவர்கள் போக்குப்படியே சிந்தித்தாலும், "தமிழ் மொழி 3000 - 4000 ஆண்டுகளுக்கு முந்தி ஏற்பட்ட மொழி' என்பதை, தமிழின் பெருமைக்கு ஒரு சாதனமாய்க் கொண்டு பேசுகிறார்கள். நானும் தமிழ் காட்டு மிராண்டி மொழி என்பதற்கு அதைத் தானே முக்கிய காரணமாய்ச் சொல்கிறேன். அன்று இருந்த மக்களின் நிலை என்ன? அவன் சிவனாகட்டும், அகஸ்தியனாகட்டும், பாணிணியாகட்டும், மற்றும் எவன்தான் ஆகட்டும், இவன்களைப் பற்றி தெரிந்து கொள்ள உனக்கு புத்தியில்லா விட்டால், நீ தமிழைப் பற்றி பேசும் தகுதி உடையவனாவாயா?
------------

ஒரே புருஷன் என்ற கட்டாயம் கூடாது - ஒருவனுக்கு ஒருத்தி என்ற எண்ணக் கோட்பாட்டை எதிர்த்து ஆணும் பெண்ணும் விலங்குகள் போல கலவி செய்து சமூகம் உறவுகள் என்ற நிலையறுந்து வாழும் நிலையைத் தூண்டல்.

...இந்தக் காதல் காரணத்தினாலேயே ஒரு புருஷன் ஒரே மனைவியுடனும், ஒரு மனைவி, ஒரே புருஷனுடனும் மாத்திரம் இருக்க வேண்டியதென்றும் கற்பித்து, அந்தப்படி கட்டாயப்படுத்தியும் வரப்படுகிறது. இதன் பலாபலன் எப்படியிருந்தாலும் இந்தப்படி சொல்கின்றவர்களை எல்லாம் உலகனுபவமும், மக்கள் தன்மையின் அனுபவ ஞானம் இல்லாதவர்கள் என்றோ, அல்லது இயற்கைத் தன்மையையும் உண்மையையும் அறியாதவர்கள் என்றோ, அல்லது உண்மை யறிந்தும் வேறு ஏதாவதொரு காரியத்திற்காக வேண்டி, வேண்டுமென்றே மறைக்கின்றவர்கள் என்றோதான் கருத வேண்டியிருக்கிறது.

...இவையெல்லாம் ஒரு மனிதன் தனக்கு இஷ்டமான ஒரு ஓட்டலில் சாப்பிடுவது போலவும், தனக்குப் பிடித்த பலகாரக் கடையில் பலகாரம் வாங்குவது போலவும் அவனுடைய தனி இஷ்டத்தையும், மனோபாவத்தையும், திருப்தியையும் மாத்திரமே சேர்ந்ததென்றும், இவற்றுள் மற்றவர்கள் பிரவேசிப்பது அதிகப்பிரசங்கித்தனமும், அனாவசியமாய் ஆதிக்கம் செலுத்துவதுமாகும் என்றுதான் சொல்ல வேண்டும்.
-----------

எல்லாமே தமிழ்தான் ! - தமிழின் தனித்துவத்தை பிறமொழிகளோடு தமிழை கலப்படைய செய்து அழிக்கும் கருத்து. பிறமொழிக்காரர்களை தமிழுக்கு எதிராக தூண்டி விடுதல்.

தமிழன், தெலுங்கன், கன்னடியன், மலையாளி இவர்கள் பேசுவதெல்லாம் தமிழ்தான். இவர்கள் பேசுவது வெவ்வேறு மொழியென்று கூறுபவன் தமிழ் மகனல்லன்; தமிழை அறியாதவன்; ஆரியத்திற்குச் சோரம் போனவன். நம்மைக் காட்டிக் கொடுத்து ஆரிய ஆதிக்கத்திற்கு ஆக்கந்தேட முயற்சிப்பவன்.

- "மொழியாராச்சி' நூலிலிருந்து
------------

திருக்குறளைக் கண்டிக்கிறேன் ! - உலகப் பொதுமறையே தமிழில் இருந்ததற்காக குற்றமாக்கப்படுகிறது. அதன் உட்பொருள் அறியாத முட்டாளா ஈ வெ ராமசாமி.

...குழந்தைகள் எல்லாம் வீட்டிலேயே இங்கிலீஷில் பேச வேணும். அது நல்ல நாகரீகத்தையும் கொண்டு வரது. ஏன் "குறளை' எடுத்துக்குங்க. நான் மட்டும்தான் குறளைக் கண்டிக்கிறேன். குறளோடு நின்னுட்டா வளர்ச்சியே குன்றி விடுமேன்னுதான். குறள் இரண்டாயிரம் வருஷத்துக்கு முந்தினது. பெண்ணை ஆணுக்கு அடிமையாக்கி விட்டது.

- பெரியார் பேட்டியிலிருந்து
------------

தேர்தலுக்காக ! - திராவிட நாட்டை வலியுறுத்தும் வகையில் பேசல்.மா பொ சி போன்றவர்கள் தனித் தமிழ்நாட்டை வேண்டினர். அண்ணாவும் அக்கருத்துக்களை அப்போது ஏற்றுக்கொண்டவர். அவர் ஈ வெ ராமசாமியில் திராவிடக் கொள்கையின் பாதிப்பால் தான் திராவிட நாடாக்கிக் கேட்டாரா அல்லது பிறமொழி மக்களை கொண்டிருக்கும் தமிழக நிலப்பரப்பை தமிழகத்தோடே தக்க வைக்கக் கேட்டாரா என்பது முக்கியம். ஆனால் ஈ வெ ராமசாமிக்கு தனித் தமிழ்நாடு என்று பேசிய மா பொ சி போன்றவர்கள் கடும் எதிரிகளாகத் தெரிந்தனர். அவர்களை ராமசாமி திட்டித் திரிந்தார்.

காங்கிரஸ் ஆட்சி பலத்தால், திராவிட நாடு பிரிவினை கேட்பவர்கள் தேர்தலுக்கு நிற்க முடியாது' என்று விதி செய்து கொண்டவுடன், தி.மு.க. "நாங்கள் திராவிட நாடு பிரச்சனையை விட்டு விட்டோம்' என்று சொல்லி, தேர்தலுக்கு நின்று வெற்றி பெற்று இன்று ஆட்சிக்கும் வந்து விட்டார்கள். தேர்தலுக்கு அது ஒரு தடைப் பிரச்சனையாக ஆகி விட்டதால், அவர்கள் அதைப் பற்றி பேச்சு மூச்சு கூட விடக் கூடாத நிலையில் இருக்கிறார்கள். மத்திய அரசாங்கம் காங்கிரஸார் கையில் இருப்பதால், அவர்களுக்கு பயந்து கொண்டு அடிக்கடி தி.மு.க.வினர் காலாகாலம் பார்க்காமல் "நாங்கள் திராவிட நாடு பிரச்சனையை கைவிட்டு விட்டோம்; விட்டு விட்டோம்; விட்டே விட்டோம்' என்று சொல்ல வேண்டிய அவசியத்திற்கு வந்து விட்டார்கள்.

- "விடுதலை' (30.3.67)
---------------

11.4.1947 தேதியிட்ட விடுதலையில் ஈவேரா எழுதியது: - தமிழரசு, தமிழாட்சி தமிழ்மாகாணம் என்ற எதனையும் தமிழர்களுக்கு அங்கீகரிக்காத நிலை. ஆனால் திராவிட நாட்டில் தமிழர்கள் திராவிடராக வாழ வேண்டும் இந்திய தேசியத்தோடு இணையந்திருக்கக் கூடாது என்ற ஈ வெ ராவின் முரண்பாடான நிலைப்பாடு. தமிழர்கள் தங்கள் தமிழ் தேசிய அடையாளத்தோடு மிளிரக் கூடாது. ஆனால் திராவிட அடையாளத்தோடு கன்னட சகோதர்களை அண்டி வாழலாம் என்ற திராவிட ஆதிக்கத்தை தமிழர்கள் மீது திணித்தல்.

'தமிழ்நாட்டைத் தனியாகப் பிரிக்க வேண்டும் என்பதும், தமிழரசு, தமிழர்ஆட்சி, தமிழ் மாகாணம் என்றும் பேசப்படுவனயெல்லாம் நம்முடைய சக்தியைக் குலைப்பதற்காகவும், குறைப்பதற்காகவும் செய்யப் படுகின்ற காரியங்கள் என்பதை நீங்கள் உணர வேண்டும்.
-------------

அண்ணாதுரை பற்றி பெரியார் ! - அண்ணா பற்றி.

அண்ணாதுரை ஏன் போனார்? திராவிடர் கழகத்தில் இருந்தால் பணம் சம்பாதிக்க முடியாது; பெரிய நிலைக்கு வர முடியாது என்று கருதினார். வெளியேறினார். சௌக்கியமாக பணம் சம்பாதித்துக் கொண்டு வாழ்கிறார். அதைப் பார்த்து ஆத்திரப்பட்டுத்தானே, நாமும் பணம் சம்பாதிக்க வேண்டும்; எத்தனை நாளைக்கு இப்படியே இருப்பது என்று கருதித்தானே, இன்றைய துரோகிகளும் வெளியேறுகின்றார்கள்?
---------------

கன்னடக்காரன் ! - தன்னைக் கன்னடன் என்று பறைசாற்றல். தமிழர்கள் மத்தியில் தமிழைப் பற்றியும் தமிழரைப் பற்றியும் குறை சொன்னபடி.. தன்னை கன்னடன் என்று இனங்காட்டி மொழிதல்

ஏன் என்னையே தமிழன் இல்லேன்னு சொல்றாங்களே. என் தாய்மொழி கன்னடம் என்பதாலே சொல்றாங்க. பெரும்பாலானவங்க என்னை தெலுங்கர் - நாயுடு என்றே நினைக்கிறாங்க. நான் கன்னடக்காரன்.
---------------
ஹிந்தி இருக்கட்டும் - ஹிந்தியின் இருப்பைக் காத்தல்.

இந்தி வேண்டவே வேண்டாம் என்பதல்ல எங்கள் கொள்கை; அதைக் கட்டாயப்படுத்தக் கூடாது என்று நாங்கள் சொல்லுகிறோம்... சில காரியத்திற்காக இந்தியை கட்டாயமாக்க வேண்டுமானாலும் கட்டாயமாக்குங்கள்; ஆனால் குழந்தைகளுக்கு வேண்டாம். பெரியவர்களுக்கு, கல்லூரி மாணவர்களுக்கு வேண்டுமானால் இருக்கட்டும் என்றுதான் நாங்கள் கூறுகிறோம்.

- "விடுதலை' (7.10.48)
--------------

முட்டாள்தனம் ! - தமிழ் தேசியம் போன்ற கொள்கைகளுக்கு எதிராக தாய் மொழி.. தாய் நிலம் என்பதை முட்டாள் என்பது.

இந்த அதிசய காலத்தில் "எனது தாய்மொழி, எனது தாய்நாடு இதற்காக எனது உயிரை விடுவேன்' என்று முட்டாள் தனமாகப் பிடிவாதம் பிடித்தால், நாம் எப்போது முன்னேறுவது? உலகம் நாளுக்கு நாள் நமக்கு நெருக்கமாக வந்து கொண்டிருப்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா?

"விடுதலை' (14.11.1972)
--------------

தொடரும்.......

Monday, October 08, 2007

பெரியார் ஒரு தமிழ் இன விரோதி - ஆதாரங்கள் 10

1. தமிழைக் காட்டு மிராண்டி மொழி என்றவர் ஈ வெ ராமசாமி என்ற கன்னட தேசத்தைச் சேர்ந்த பெரியார். தமிழ் மொழியைத் திட்டியதைத் தவிர அதன் வளர்ச்சிக்கு அவசியமான எந்தச் சீர்திருத்தங்களையும் முன்மொழியாமை மற்றும் அதற்காக பாடுபட முன் வராமை. (தனது பத்திரிகை விளம்பரத்துக்காக தமிழன்பர்கள் கூடி எடுத்த தமிழ் எழுத்துச் சீர்த்திருத்தம் என்பதை மொழி வளர்ச்சி என்ற நோக்கற்று தனது பத்திரிகை வளர்ச்சிக்காக பயன்படுத்தியதோடு மட்டும் தூங்கிவிட்டமை இதற்கு நல்ல உதாரணம்.)

2. தமிழர்கள் பகுத்தறிவற்றவர்கள் என்று உலகில் எல்லா மனிதருக்கும் உள்ள பகுத்தறிவைக் கூட பெரியார் தமிழர்களுக்கு வழங்க மறுத்தமை.

(இக்கூற்றிக்களின் மூலம் தமிழ் மொழியின் தமிழர்களின் தொன்மையை அழித்து ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மற்றும் பிற மாநில மொழி ஆதிக்கங்களினை அனுமதித்து தமிழர்களின் மொழி அடையாளத்தை சிதைக்க முனைந்தவர்.தமிழகத்தில் தமிழ் வழக்கொழிதலைத் தூண்டியவர்.)

3. தமிழ் இனத்தின் தமிழ் தேசிய இருப்பை தமிழர்களின் தனித்துவத்தை திராவிடப் போர்வை கொண்டு அழிக்க முனைந்தமை.

4. தனித் தமிழ்நாட்டுக் கோரிக்கையை ஆதரிக்காத தன்மை, அவர் இந்திய உபகண்டத்தில் தமிழ்களுக்கு என்ற ஒரு நில இருப்பை அங்கீகரிக்கவில்லை என்பதைக் காட்டி நிற்கிறது. இது தமிழர்களின் பாரம்பரிய நில இருப்பை அவர்களின் சிந்தனையில் இருந்தே அழிப்பதற்கு சமனானது.

5. தன் கூட்டத்தில் இருந்து கொள்கை முரண்பட்டு விலகிய அண்ணாவை பண ஆசை பிடித்த ஒருவன் என்று விமர்சித்தமை. அரசியல் ரீதியாகக் கூட தமிழர்கள் திராவிடத்துக்குள் பதுங்கி இருக்க வேண்டும் என்று விரும்பியவர். அண்ணா தமிழர்களுக்கு என்று தனிநாடு கேட்பதைக் கூட எதிர்த்து நின்றவர். தமிழகத்தில் தமிழ் மொழியின் முதன்மைத் தன்மையை சிதைக்க முனைந்த ஹிந்தி திணிப்பை எதிர்க்க மறுத்தமை.

6. பெண்களின் கர்ப்பம் அவர்களின் முன்னேற்றத்துக்குத் தடையென்று கூறி.. பெண்கள் திருமணம் செய்யக் கூடாது என்று கூறி தமிழர்களின் இன விருத்திக்கு சாவு மணி அடிக்க முனைந்தமை.

7. தமிழ் மக்களின் உயர்ந்த கலாசார பண்பாட்டு விழுமியங்களைச் சீரழிக்கும் வகையில் ஒருவனுக்கு - ஒருத்தி என்ற எண்ணக் கோட்பாட்டை சிதைக்கவல்ல கருத்துக்களை "பெண் விடுதலை" என்று காட்டியபடி தமிழர்கள் மத்தியில் சமூக விரோத, மனித இன விரோத கருத்துக்களை விதைத்து.. விலங்குத்தனமான, எழுந்தமானமான ஆண் - பெண் பாலியல் புணர்வை வழியுறுத்தி.. தமிழ் சமூகத்தின் இருப்பையே கொடிய பால்வினை நோய்களைப் பரப்பி.. அழிக்க முயன்றமை.

8. தமிழ் மொழியின் தொன்மை.. இலக்கணக் கட்டமைப்பை சீரழிக்கும் வகையில் இலக்கியங்கள் மீதும்.. தமிழ் இலக்கண, இலக்கிய கர்த்தாக்கள் மீதும் பார்பர்ன.. இந்துத்துவ.. சாதிய சாயங்களைப் பூசியமை.

9. பிராமணர்கள் மீது எதிர்ப்பென்று தமிழர்களிடையே பிராமண வர்க்க இருப்பையும்.. ஏனையவர்களை அவர்களுக்கு எதிராகவும் தூண்டி சமூக வன்முறைத்தனமான நிலையை தமிழகத்தில் உருவாக்கிக் கொண்டமை. அதன் தொடர்ச்சியாக மறைமுகமாக சாதிய இருப்பை தமிழகத்தில் தக்க வைத்தமை. அதைக் கொண்டு தமிழகத்தில் சமூகப் பிரிவினையைத் தூண்டி தமிழர்களைப் பிரித்தாண்டு.. சாதிய அரசியலுக்கு வித்திட்டமை. தமிழர்களிடையே தமிழின ஒற்றுமையை இல்லாமல் செய்தமை.

10. தனது திராவிடக் கொள்கையின் கீழ் தமிழகத்தின் தோற்றம்.. இருப்பு என்பதை.. இல்லாமல் செய்து தமிழர்களை திராவிடர்களாக்கி.. அவர்களின் தமிழ் தேசிய அடையாளங்களை திராவிட அடையாளங்களாகக் காட்டி.. தமிழினத்தினதும் அதன் தேசியத்தினதும் இருப்பை.. அழிக்கும் வகையில் சமூகத்தில் மேற்குலக சமூக விரோத சிந்தனைகளை பகுத்தறிவு என்ற பெயரில்..கட்டவிழ்த்து விட்டமை.

உண்மையாக தமிழர்களுக்கும்.. ஒட்டுமொத்த மனித இனத்துக்குக்கும் அவசியமான அறிவியலை தமிழகத்தில் வளர்க்கவோ இனங்காட்டவோ முனையாமை.

இந்துக் கடவுள் எதிர்ப்பு என்ற பெயரில் ஏனைய மத ஆதிக்கங்களினால் சிதைந்து கொண்டிருந்த தமிழழிவை ஊக்குவித்து.. சைவத்தால் வளர்ந்து கொண்டிருந்த தமிழ் மொழியின் வளர்ச்சியை இல்லாமல் செய்ய முற்பட்டமை.


"தமிழ் தேசிய விரோதி ஈ வெ ராவை இனங்காண்போம்" என்ற விழிப்புணர்வை முன்வைத்து.. சர்வதேச தமிழ் இளையோர் அமைப்பின் சார்பாக இப்பதிவு இடப்படுகிறது

தோப்பிருந்து ஒரு காவியம்குருவி ஒன்று தான் வாழ
தேடியது ஒரு தோப்பு
வந்தது மாந்தோப்பு
வரவினில் கண்டது
ஓர் மலர்
மலரிடை மலர்ந்தது
வாழ்வெனும் வசந்தம்
மலரதும் குருவியதும்
படைக்குது ஒரு காவியம்
அது...
மாநிலத்தில் மானிடர் தாம்
கண்டிடாத புனித காவியம்.

தோப்பருகே ஒரு குடிசை
அங்கும் வாழுது
ஒரு கூட்டம்..!
வஞ்சகமும் பொறாமையும்
அவர்தம் மனங்களில்
கறுவும் மனதை அடக்க முடியா
கலங்கி நிற்குது அவர் சித்தம்..!
கற்பனையில் கூட
அடுத்தவன் வீழ்ச்சியில்
அகம் மகிழவே துடிக்குது..!
பாவம் அவர்
அறிவிருந்தும்
அறியாமையில்...!

தோப்பிருந்த குருவியது
மனமிரங்கி
மலருடனிணைந்து
பாவப்பட்டவர் மீது
ரட்சிக்கிறது
மானிடா....
மனமதில் அமைதி கொள்
வாழ்வதில் சிறப்பாய்
மாற்றானை உன்னில் தரிசி
உன்னை மாற்றான் மதிப்பான்..!
அன்றி...
வாழ்வில் நீயே
உன்னை மிதிப்பாய்
உன் நினைவுகள்
ஓர் நாள்
உன் நிஜம் அழிக்கும்...!


மீள்பதிப்பு தமிழமுதத்தில். இங்கு அழுத்திப் பார்க்கவும்.

சொன்னாலும் சொல்லாட்டிலும் இது தாண்டா இப்ப "காதல்"நியூயோர்க் ஜம்பரில் (NYjumper)
லண்டன் ஸ்ரைலில் (style)
அரைப் பென்ரர் (pender) தெரிய
டெலிம் (denim) போட்டு..
பி.எஸ் 3 (ps3) வாங்க
பிளாசா (plaza) போனேன்..!

அங்கே..
பிற்சா கட் (pizza hut)
பிற்சாவோடு (pizza)
ஸ்ரைலா நிற்கையில்
லப் ரொப் (laptop) அடக்கமாய்
நீ இருந்தாய்.

திறி டி விசனில் (3D vision)
உன்னைக் காண
ஐ.ஆர் (IR) கொண்டு
ஸ்கான் (scan) செய்தேன்
எக்ஸ் பொக்ஸ் கேம் (XBox game)போல
திறில்லாய் (thrill) இருந்தாய்..!

உடனே..
புளூருத் (bluetooth) சிக்னலாய்
என்னைத் தந்தேன்
பதிலுக்கு..
மொபைல் போன் (mobile phone) கமராவாய் (camera)
நீ என்னைப் பார்த்தாய்.

அதுதான் சாட்டென்று..
ஐபொட்(iPod) ஒன்று வாங்கியே
அருகில் வந்தேன்
எம்பி 4 (MB4)இல் இசை தேட
எம்பி 3 (MB3)போல இசைந்தாய் என்னோடு.

ஜி பி எஸ் நவிகேற்றராய் (GPS navigator)
நீ வந்ததால்
காதல் கை வேயில் (highway)
ரவுண்டெபவுட் (roundabout) தேடி
அலையும் நிலை களைந்தேன்.

டிஜிற்றல் (digital) கமராவாய்..
நீ அருகில்
காணும் காட்சிகளோ
பல மெகா பிக்சல் (Megapixel)அளவுகளில்...!

என்ன மாயமோ
நானறியேன்
திடீரென..
பென்ரியம் 4 (pentium 4)
காட்டிஸ்க் (hard disc) போல
ஸ்ரக்கானாய் (stuck)...
டீபக் (debug) செய்து
சீர் செய்ய
ஸ்ரெயிட்னர் (straightener) போல
சூடானாய்.

கூலா..(cool)
மக்கில் (mcdonalds)
கோலா (cola) ஒன்று வாங்கி
ஸ்ரோவால் (straw) தந்தேன்
லிப்ஸ்டிக் (lipstick) கரையும் என்றே.!

சடார் என்று
கன்னத்தில் ஒரு கிஸ் (kiss) தந்தாய்...
யூரோ ஸ்ரார் (euro star) வேகத்தில்
காட் (heart) அடிக்க..
வின்ரர் ஜக்கட் (winter jacket) போல
இறுக்கி
இதமாய் ஒட்டிக் கொண்டாய்.

அப்படியே..
சென்றல் (central) லண்டன் வரை
கக் (hug) செய்து கொண்டே
வார்கிங் (walking) போய்..
கை பார்க் கோர்னரில் (highpark corner)
பெஞ்சில் (bench) இருக்க
ஈசி ஜெட் (easyJet) போகும்
சத்தத்தில்
மெய்மறந்து கேட்டாய்..
நியுசிலண்ட் (New zealand) ரூர் (tour) போவமா என்று.

சுப்பர் கொம்பியூட்டர் (super computer)
புறசெசர் (Processor) வேகத்தில்
கணக்குப் போட்டே
கிரடிட் ஸ்கோர் (credit-card score)
சரி பார்த்தே..
கூகிளில் (google) தேடி
வேர்ஜினில் (virgin) ரிக்கற் (ticket) பதிவு செய்தேன்.

கில்ரன் கொட்டலில் (Hilton hotel)
லக்சறி றூமும் (luxury room)
ஒன்லைனில் புக் (online book)செய்தேன்.

இடையில்..
எஸ் எம் எஸ் (SMS)
எம் எஸ் என் (MSN)..
சற்றிங் (chatting) மூலம்
நாளும் சொல்லி
மேர்சிட்ஸ் பென்சில் (Mercedes benz) எயார்போட் (airport) போனோம்.

பட்....
ஜெள்ளுடன் (gel) ஒருத்தன்
சிமாட்டா (smart) வர
கொலிபூட் ஸ்ரார் (hollywood star) என்று
செல்போன் (cellphone) போலச்
சிரித்தவளாய்
பிளையிங் கிஸ் (flying kiss) அடித்தபடி
கேம்போயாய் (gameboy) அடைக்கலமானாய்
அவன் கையில்..!

என் மனசோ...
கடைசி கேமில் (game) கோட்டை விடும்...
இந்தியன்
கிரிக்கெட் ரீம் (team) போல
அப்செட் (upset) ஆக..
பக்கத்தி பாரில் (bar)
ஜக்டானியல் (jackdaniel) ஒரு பெக் (bec) தள்ளிட்டு
ஜோன் பிளேயர (John Player)
ஊதியபடி..
பென்ஸை (benz) முறுக்கியவன்
டெல்ரா ரொக்கட் (delta rocket) வேகத்தில்
லக்சறி பிளட்டில் (luxury flat)
என் றூமில் (room)
சோபாவை (sofa)
கட்டியணைத்தபடி
பி.எஸ் 3 யோடு
ஐக்கியமானேன்...

அடுத்ததிற்கு..
தூண்டில் போட
லப் டொப்பில்..
பேஸ் புக்கையும் (facebook)..
திறந்தபடி..!

Thursday, October 04, 2007

"புட்னிக்" எனும் பட்சிக்கு அகவை ஐம்பதுகாலைச் சூரியனை
கையெடுத்துக் கும்பிட்டு..
மாலைச் சந்திரனை
வீழ்ந்து வணங்கி..
சுழன்றடிக்கும் சூறாவளிக்கு
பயந்து நடுங்கி...
மின்னலும் இடியும்
மரணத்தின் தூதென்று
ஓடி ஒளித்து..
தீயதும் சுடுவது
முன்வினைப் பயனென்றும்
பூமியது அதிர்ந்து பிளப்பது
பாவிகள் அழிவென்றும்
இயற்கைக்குள்
உள்ளதை விளங்காமல்
உளறிய கணங்களில்..
எதிர்வினை சொல்லி
பகுத்தறிவென்று
வாய் வீரம் பேசி
வீண் பொழுது கழித்திடாமல்
ஆயிரம் கதை கட்டி
அலைந்து கொண்டிராமல்..
மூளையைக் கசக்கி
விண்கலம் கட்டி
விண்ணுக்கு அனுப்பி
வீர சாதனை படைத்த
திருநாள் இன்று..!

"புட்னிக்" எனும் மனிதப்பட்சி
ரஷ்சிய மண்ணிருந்து
விண்ணேகி
அரை நூற்றாண்டும்
கடந்தாயிற்று.
மனித வரலாற்றின்
புது யுகம் இது..
புறப்படுங்கள்..
சுன்னாகம் சந்தியில்
இருந்து...
செவ்வாய் நோக்கி
செவ்வாய் தோசத்தை
சிதைத்து விட்டு வருவோம்.


சுடச் சுடச் சுட்டது யாழ் இணையத்தில் இருந்து.

Tuesday, September 25, 2007

முற்றத்து முகங்கள்

முற்றத்து முகங்கள்

எழுதியவர்: தேசப்பிரியன்
ஞாயிற்றுக்கிழமை, 01 ஆடி 2007


அம்மா.. அம்மா.. என்று கத்தியபடி தனது லேடிஸ் சைக்கிளை முற்றத்தில் அவசர அவசரமாக போட்டுவிட்டு வீட்டுக்குள் ஓடினாள் சுமதி...!

என்னடி.. ஏல் (A/L) சோதனை மறுமொழி பார்க்கப் போனா.. என்னடியாச்சுது என்று குசினியில் வேலையோடு இருந்த சுமதியின் அம்மா கமலம்.. மகளின் குரலைக் கேட்டுவிட்டு... பதறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தார்..!

நான் பெயிலாகிட்டன் அம்மா என்று.. முகத்தில் சோகம் ததும்ப.. ஓடிச் சென்று தாயை அணைத்தபடி அவரின் உடலில் முகத்தைப் புதைத்தபடி செயற்கையாய் அழுது கொண்டே சொன்னாள் சுமதி.

என்னடி பெயிலாகிட்டியா.. போச்சு.. என்ர மானம் போச்சுது.. லண்டனில இருக்கிற என்ர மனிசனுக்கு என்ன பதில் சொல்லப் போறன்.. பக்கத்தி வீட்டு சுரேஸ் போன முறை எல்லாப் பாடத்திலும் ஏ(A) எடுத்தவன்.. அவன்ர அம்மா எவ்வளவு புளுகு புளுகிக் கொண்டு ராசாத்தி போல இருக்கிறாள்.. இப்ப என்னைப் பார்த்து ஊரே நக்கலடிக்கப் போகுது.. வெளிநாட்டில உள்ள சொந்த பந்தங்களுக்கு என்ன பதில் சொல்லுவன்.. வெளில தலை காட்டேலாமல் பண்ணிப் போட்டியேடி...என்று புலம்பியபடி அணைப்பில் இருந்த மகளை தள்ளிவிட்டார் கமலம்..!

தாயின் புலம்பலை, கவலையை, கண்ணீரை அவதானித்த சுமதி.. லூசு அம்மா.. அழாத...இந்தளவுதான் நீ என் மேல வைச்ச நம்பிக்கையா.. எனக்கு 3 ஏ.. எல்லாப் பாடத்திலும் ஏ அம்மா. டிஸ்ரிக் ராங் 3. யாழ்ப்பாண மெடிக்கல் பக்கல்ரி (Medical faculty) கிடைக்கும்.. நீ விரும்பினது போல உன்ர மகள் டொக்டர் ஆகும் காலம் கன தூரத்தில இல்லையம்மா..!

போடி.. ஒரு நிமிசம் என்ர இருதயமே நிண்டு போச்சுது. உனக்கு விளையாட்டு.. நீ சோதனைக்குப் படிக்க நித்திரை முழிச்சதை விட நான் தான்டி உனக்காக அதிகம் முழிச்சிருப்பன்.. எனக்கெல்லோ தெரியும் உன்னோட பட்ட பாடு. அதுவும் இந்தச் செல்லடிக்க பொம்பரடிக்க.. பங்கரும் புத்தகமுமா நீ பட்ட பாடுகள்.. எல்லாத்துக்கும் நல்ல முடிவா அந்தச் செல்வச்சந்நிதியான் ஒரு நல்ல முடிவைக் காட்டிட்டான். எனிப் படிச்சுப் பெரிய டொக்டர் ஆகி.. எங்கட மக்களுக்கு சேவை செய்யனும் என்ன.. என்று தள்ளிவிட்ட மகளை இழுத்து இறுக அணைத்து முத்தமிட்டு தலையைத் தடவிக் கொடுத்தார் கமலம்.

சிறிது நேரத்திலேயே... தாயின் அன்புப் பிடிக்குள் இருந்து வெளி வந்த சுமதி.. குசினிக்குள் சென்று ஒரு குவளை தண்ணியைக் குடிச்சிட்டு.. அம்மா இவள் கோமதிக்கு என்ன றிசல்ட் என்று பார்த்திட்டு வரட்டே என்றாள்.

சரி போயிட்டு கெதியா வா.. உங்கால அப்போத வண்டு (ஆளில்லா வேவு விமானம்) சுத்திட்டுப் போனது.. போய் வாறது கவனமடி. பொம்பர் வந்தா சைக்கிளைப் போட்டிட்டு விழுந்து படு என்ன..

ஓம் அம்மா.. என்று சொல்லிக்கொண்டே புறப்பட்டாள் சுமதி வீட்டை விட்டு.

கமலமும் மகள் சுமதியும் யாழ்ப்பாண இடம்பெயர்வோடு வன்னிக்கு இடம்பெயர்ந்து இப்ப 10 ஆண்டுகள் கழிந்துவிட்ட போதிலும் வன்னி மண்ணை விட்டு போக மனசே இல்லாமல் தங்கிவிட்ட சில தமிழர்களில் அவர்களும் அடங்கிவிட்டனர். தகப்பன் லண்டனில அந்த நாட்டு பிரஜா உரிமை பெற்றிருந்தும் அங்க வரச் சொல்லி அடம்பிடிச்சும்.. ஊரில படிச்சு டொக்டர் ஆகனும் என்ற வைராக்கியத்தில் பல இடர்களின் மத்தியிலும் படிச்சு சித்தி பெற்றவர் வரிசையில் சுமதியும் அடங்கி இருந்தாள்.

கோமதி.. கோமதி.. என்னாச்சடி.. றிசல்ட் பார்த்தியா.. என்று கோமதியின் வீட்டு வாசலில் இருந்தே கூவிக் கொண்டு அவளின் வீட்டிற்குள் நுழைந்தாள் சுமதி.

வாடி சுமதி...வா.. பாத்திட்டண்டி.. ஏ 2சி யடி.. மெடிசின் கிடைக்கிறது கஸ்டம்..! உனக்கு எப்படிடி றிசல்ட்.

எனக்கு 3ஏ யடி. மெடிசின் கிடைக்கும்.

வாழ்த்துக்கள் சுமதி. நான் இப்பதான் கனடாவில இருக்கிற அப்பாட்ட என்ர றிசல்ட்டைச் சொன்னன். அவர் "கவலைப்படாத நான் இங்கினை ஒரு படிச்ச பொடியனாப் பார்த்துப் பேசி கலியாணம் கட்டி வைச்சு உன்னைக் கனடா கூப்பிடுற வழியைப் பாக்கிறன்" என்று சொன்னார். நானும் சம்மதிச்சிட்டண்டி. எத்தனை நாளைக்குத்தான் இங்க இருந்து கஸ்டப்படுறது. ஊரில உள்ளதுகள் எல்லாம் தினமும் வெளிநாட்டுக்குப் போயிட்டே இருக்குதுகள். யாரும் திரும்பி வரப்போறதில்லை. நாங்க மட்டும் இங்க இருந்து என்ன ஆகப் போகுது..!

என்னடி கோமதி இப்படிச் சொல்லுறா. மெடிசின் கிடைக்கல்ல என்ற விரக்தியில பேசிறியா..?!

இல்லை சுமதி. எனக்கு இங்க இருக்கவே பிடிக்கல்ல. தினமும் செல்லடி பொம்பரடி..யுத்தம்.. சண்டை.. பொருளாதாரக் கஸ்டம்..! கனடா போனா எவ்வளவு வசதிகள் வாய்ப்புக்கள். அப்படியே கலியாணத்தையும் கட்டிக் கொண்டு "செற்றில்" ஆகிடலாமடி. அங்க இருந்து எந்தக் கஸ்டமும் இல்லாம இங்கத்தை விசயங்களை வைச்சு.. ஆமி, பொம்பர் பயமே இல்லாம பொழுதுபோக்கா வருசக் கணக்கா கதை பேசிட்டே இருக்கலாமடி. ஒளிவீச்சில இங்க நடக்கிறதுகளை வாங்கிப் போட்டு பார்த்துக்கலாம். பேசாம நீயும் உங்கட அப்பாவோட கதைச்சு லண்டன் போற வழியப் பார். உன்ர றிசல்டுக்கு அங்க போயும் படிக்கலாம் தானே மெடிசின். படிச்சிட்டு அங்கேயே அப்படியே ஒரு அழகான டொக்டராப் பார்த்துக் கலியாணம் கட்டிக் கொண்டு செற்றிலாகிற வழியைப் பாரடி..!

நீ சொல்லுறதும் சரிதாண்டி கோமதி. உங்க யாழ்ப்பாணத்தில இருந்தா 7 - 8 வருசம் மிணக்கட வேணும்..மெடிசின் படிக்க என்று சொல்லினம். நாட்டு நிலையும் எப்படிப் போகுமோ தெரியல்ல. அம்மா தாண்டி இங்க படிச்சு ஊர் மக்களுக்கு சேவை செய்யனும் என்றா..அப்பாக்கு எங்களை லண்டன் எடுக்கிறதுக்குத் தான் சரியான விருப்பம். அவருக்கு அங்க சொந்தக்கடை வீடு வாசல் என்றிருக்குது.

உங்கட அம்மாக்கு லூசடி. நீ தான் அம்மாக்கு எடுத்துச் சொல்லி.. கெதியா இங்க இருந்து கிளம்பிற வழியைப் பார்க்கனும். நான் இன்னும் ஓரிரு மாசம் தான் இங்க இருப்பன். அதுக்கப்புறம் கனடா தாண்டி... என்றவள் கலியாணம் முடிச்சு பிள்ளை குட்டியோட உன்னையும் உன்ர மனிசனோட லண்டனில பார்க்கிறன் என்று பகிடி கலந்து பொடி வைத்து கூறிக் கொண்டாள் கோமதி.

என்ன எனக்கு மனிசனோ.. நான் இப்ப கலியாணம் எல்லாம் கட்டிறதா இல்ல. பெரிசா படிக்கனும் என்றதுதான் இப்ப என்ர நிலை கோமதி. கலியாணம் பொம்பிளையளுக்கு சுமையாகிட்டு வருகுதடி இந்தக் காலத்தில. பார்ப்பம்.. படிச்ச முடிச்சிட்டு அவசியம் என்றா செய்யுறது இல்லை என்றா லண்டனில மக்களுக்கு சேவை செய்ய என்னை அர்ப்பணிப்பன் அன்னை திரேசா போல.

அது தாண்டி சொல்லுறன் இப்பவே லண்டன் போற வழியைப் பார் என்று.

அம்மாட்டைச் சொல்லி அப்பா மூலம் நானும் இங்க இருந்து கிளம்பிற வழியைப் பார்க்கப் போறன் கோமதி. சில வேளை உனக்கு முதல் நான் கிளம்பிடுவன்ரி வன்னியை விட்டு லண்டனுக்கு.

சரி அதுகள் கிடக்கட்டும்.. அதுகளைப் பற்றி அப்புறமா.. எங்கட அம்மாக்களோட விரிவா..கலந்து பேசி ஒரு முடிவெடுப்பம்..இப்போதைக்கு.. இவள் சுரதா வீட்ட போய் றிசல்ட் கேட்டிட்டு வருவம்.. வாறியேடி..!

பொறு.. அம்மாட்ட சொல்லிட்டு வாறன். அப்படியே சுரதா வீட்டையும் போட்டு ஸ்கூலடிக்கும் போயிட்டு வருவம்.

அம்மா நான் சுமதி கூட சுரதா வீட்டடிக்குப் போயிட்டு வாறன்.. கெதியா வந்திடுவனனை.. என்று கத்தி விட்டு

கோமதி சுமதியுடன் சுரதா வீடு நோக்கி பயணிக்கலானாள்.

சுரதா விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்பிள்ளை. தகப்பன் விசுவமடுவில் நெற்காணிகள் வைத்து விவசாயம் செய்பவர். தாய் அதே பகுதியில் ஒரு கிராமியப் பாடசாலையில் ஆசிரியையாகக் கடமையாற்றுபவர். வீட்டுக்கு ஒரே பிள்ளை அவள்.

போற வழியிலேயே தூரத்தில் தங்களை நோக்கிய பாதையில் சுரதா வருவதை அவதானித்துவிட்ட தோழிகள் இருவரும்..தங்கள் சைக்கிளை நிறுத்திவிட்டு...அவசரமாக சைக்கிளில் வந்து கொண்டிருந்த சுரதாவின் வரவை நோக்கி சிறிது காத்திருந்தனர்.

சுரதா அருகில் வந்ததும்..என்னடி சுரதா என்ன றிசல்ட்டடி.. எங்கையடி பறக்கிறா...என்று கத்தினாள் சுமதி

3 ஏ யடி. டிஸ்ரிக் ராங் 1... இப்ப எனக்கு முக்கிய வேலை ஒன்றிருக்கு என்று சொல்லிக்கொண்டே சைக்கிளை நிறுத்தாமல் பறந்து கொண்டிருந்தாள் சுரதா.

என்னடி வேலை.. அப்படி அவசரமா... பாஸ் ஒபீஸ் போய் கொழும்புக்குப் போக பாஸ் எடுக்கப் போறியோ.. என்று தன் சந்தேகத்தை அவசரக் கேள்வியாக்கித் தொடுத்தாள் கோமதி.

இல்லையடி.. வவுனியா பக்கம் அடிபாடாம். காயப்பட்ட அக்காமாரும் அண்ணாமாரும் கொண்டு வரப்படுகினமாம். அதுதான் முதலுதவி செய்யப் போறன். பிறகு கதைப்பம் என்ன.. என்று சைக்கிளை நிறுத்தாமலே பதிலளித்தபடி.. நேரத்தை தாமதிக்காமல் அவசர அவசரமாக வைத்தியசாலை நோக்கி விரைந்து பறந்து கொண்டிருந்தாள் சுரதா... தீர்க்கமான முடிவோடு. அன்றே அவள் தன்னை தமிழீழ மருத்துவப் பிரிவில் மாணவியாகவும் இணைத்துக் கொண்டாள்.

நன்றி: வன்னித்தென்றல்

மூலப் பிரதிக்கு இங்கு அழுத்தவும்.

Monday, September 24, 2007

தியாகி திலீபனின் தியாகத்தின் 20ம் ஆண்டு நினைவாக..!

தியாகி திலீபன் தமிழீழ தமிழ்மக்களின் 5 அம்சக்கோரிக்கைகளை இந்திய மத்திய ராஜீவ் காந்தி அரசிடம் முன்வைத்து.. இந்திய அமைதிப்படை ஆக்கிரமிப்புப் படையாக ஈழத்தில் நிலை கொண்டிருந்த போது.. 16-09-1987 அன்றில் இருந்து 26-09-1987 அன்று வரை.. உண்ணா நோன்பிருந்து தமிழ் மக்களுக்காக உயிர்நீத்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இவர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவனும்.. யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கு தெரிவாகி இருந்த மாணவருமாக விளங்கியவர்.

இன்று.. உலகின் நவீன காந்தியாகவும் இவர் தமிழ் மக்களால் பார்க்கப்படுகிறார்.
திலீபன் அவர்களுக்காக பாடப்பட்ட நினைவுப் பாடல்.திலீபன் முன் வைத்த 5 அம்சக்கோரிக்கைகளும் ஆங்கில வடிவில் இக்கானொளியில் உண்டு.

அவரின் வீரமரணத் திகதி தவறுதலாகப் 26-August-1987 என்று இக்கானொளியில் உள்ளது. அதைத் திருத்தி 26-September-1987 என்று வாசியுங்கள்.

மேலும் தியாகி திலீபன் அவர்களின் இறுதிப் பயணத்தின் 12 நாட்களும் நடந்த நிகழ்வுகள் பற்றிய விபரங்கள் கானொளி வடிவில் யாழ் இணையத்தில் உள்ளது. இங்கு அழுத்தி அதைப் பார்வையிடலாம்.

Friday, May 18, 2007

புரியாத புதிர் புரிந்த போது..!

என்ன இப்பதான் 8 மணியா..?! உங்களுக்காக 1 மணித்தியாலமா காத்திருக்கிறன். ஆடிப்பாடி வாறீங்கள். கெதியா வாறதுக்கு என்ன.. என்று ஜெகனோடு சினந்து கொண்டாள் ஜனனி.

இஞ்ச பாருங்கோ ஜனனி.. உங்களைக் காக்க வைக்கனும் என்றது என்ர விருப்பமில்ல. நீங்க எனக்காக தனிய காத்திருப்பீங்கள் என்று நினைச்சிட்டுத்தான் கெதியாப் புறப்பட்டு வந்தன். வாற வழியில நான் வந்த பஸ் பழுதாகி நின்றிட்டுது. பிறகு அடுத்த பஸ் வரும் வரை காத்திருந்து அதில வாறன். அதுதான் நேரம் எடுத்திட்டுது. மன்னிச்சுக்கோங்கோ தாயே... என்று பணிந்தான் அவள் கோபத்தின் முன்.

சரி சரி.. வாங்க ரீ குடிப்பம். களைப்பா இருக்கிறீங்க.. முகமெல்லாம் வாடிப்போயிருக்கு என்று கோபந்தணிந்து பணிவோடு கேட்டாள் ஜனனி.

ஜனனி தாதியாக வைத்தியசாலை ஒன்றில் வேலை செய்கிறாள். ஜெகனும் அங்குதான் கணணிப்பொறியலாளராக வேலை செய்கிறான். ஜனனி சமீபத்தில் தான் பணியில் சேர்ந்திருந்தாள். இருந்தாலும் ஜனனியின் அன்பில் அழகில் தன்னையும் மனசையும் பறிகொடுத்த ஜெகன் அதன் பின் அவளின் அன்புக் காதலனாக அவள் அருகிருப்பிலும் அதன் நினைவுடனுமே தனது வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறான்.

ஜனனியும் ஜெகனும் வைத்தியசாலை உணவு விடுதியில் "ரீ" ஓடர் செய்துவிட்டு கதை பேசிக்கொண்டிருக்கும் போது ஜெகனின் குறுகிய கால நண்பன் பிருந்தன் அங்கு வந்தான். "காய்" ஜெகன்... எப்படி இருக்கீங்க... வழமையான குசலம் விசாரிக்கும் வினாக்களோடு ஆரம்பித்தவன் ஜனனியையும் பார்த்து... நீங்க எப்படி இருக்கிறீங்கள் என்று அவளையும் நலம் விசாரித்துக் கொண்டு அவர்கள் இருவருக்கும் நடுவில் இருந்த கதிரையில் அமர்ந்து கொண்டான்.

ஜெகனும் ஜனனியும் தங்கள் பங்குக்கு நாங்கள் நலமாக இருக்கிறம்.. உங்கள் பாடுகள் எப்படி என்று கேட்க..

நானும் நலம்.. ஜெகன், ஜனனி என்ன சாப்பிடுறீங்கள்... என்று மறுபடி பேச்சை தொடர்ந்த பிருந்தன், நான் ரீயும் பனிசும் எடுக்கப் போறன் என்றான்.

நாங்கள் ரீக்கு ஓடர் கொடுத்திட்டம் பிருந்தன் நீங்கள் உங்களுக்கு ஓடர் கொடுங்கோ என்றாள் ஜனனி.

ஓடர் கொடுத்தவை உடனடியாக வந்து சேர... மூவரும் ரீ அருந்திக் கொண்டிருக்கும் போது.. பிருந்தன் சொன்னான் ஜெகன் நீங்கள் லண்டனுக்கு வேலை விசா எடுத்துப் போகலாமே. உங்கள் துறையில நல்ல தொழில் வாய்ப்பிருக்கே அங்க என்று. அதற்கு ஜெகன் இப்ப எல்லாம் அந்த ஐடியா இல்லை. பார்ப்பம் எங்க திருமணம் முடிய ஜோசிப்பம் என்று காத்திரமாகச் சொன்னான்.

என்ன கல்யாணமா.. அப்படி ஒரு கனவும் இருக்கா என்றாள் ஜனனி ஜெகனைப் பார்த்து சிரித்தப்படி.

என்ன ஜனனி இப்படிச் சொல்லிட்டீங்கள். ஜெகன் பலத்த எதிர்பார்ப்போட உங்களை காதலிக்கிறார் என்று நினைக்கிறன் என்றான் பதிலுக்கு பிருந்தன்.

அவருக்கு உள்ள எதிர்பார்ப்புக்களை மட்டும் நிறை வேற்றிறதுதான் என் காதலா.. பிருந்தன். நீங்கள் என்ன சொல்லவாறீங்கள் என்றது தான் எனக்குப் புரியல்ல என்று மீண்டும் வலிந்து சிரிப்பை வரைவழைத்தபடி சொன்னாள் ஜனனி.

இருவர் சம்பாசணையையும் கவனித்துக் கொண்டிருந்த ஜெகன் ஆரம்பத்தில் ஜனனி பகிடியாகச் சொல்வதாக எண்ணினாலும் ஜனனியின் பேச்சில் இருந்த குழப்பத்தைக் கவனிச்சிட்டு.. என்ன ஜனனி இப்படிச் சொல்லுறீங்க. காதல் என்பது வாழ்க்கைல ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கிறதுக்கு உள்ள சந்தர்ப்பம் மட்டுமில்ல ஒருத்தரில ஒருத்தர் தங்கி இருக்கிறதும் தானே என்று சொன்னான்.

அதற்கு ஜனனி உடனடியாகவே.. நான் உங்களிலையோ அல்லது யாரிலையுமோ தங்கி இருக்கனும் என்ற நிலையில இல்லை. யாரும் என்னில தங்கி இருக்கிறதும் எனக்கு சரிப்பட்டு வராது.

காதல் என்றதுக்கு நீங்கள் கொடுக்கிற விளக்கம் தான் எனக்குள்ளையும் வரணும் என்று நீங்க எதிர்பார்க்கக் கூடாது. எனக்குள்ள அது வேறையா இருக்கும். என்னைப் பொறுத்தவரை காதல் முதல் அப்புறம் கலியாணம் என்றதெல்லாம் சரிப்பட்டு வராது. நான் என் சுதந்திரத்தோட எதையும் எப்பவும் செய்யனும் என்ற நினைக்கிறவள். என்னை யாரும் கட்டுப்படுத்தவோ கட்டாயப்படுத்தவோ அல்லது என்னை முடிவெடுக்க நிர்ப்பந்திக்கவோ செய்யுறது எனக்குப் பிடிக்கிறதில்ல என்று காட்டமாக ஜெகன் எதிர்பார்க்காத தொனியில் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டே பதில் சொன்னாள் ஜனனி.

இல்ல ஜனனி.. நான் என்ன சொல்லவாறன் என்றால்.. என்று அவளைச் சமாளிக்க முனைந்த ஜெகனை.. நீங்கள் ஒன்றும் சொல்ல வேணாம் என்று கையில் வைத்திருந்த ரீயை மேசையில் வைத்துவிட்டு கோபத்தோடு வெளியேறினாள் ஜனனி.

சாறி ஜெகன்.. ஜனனி இப்படி கோவிப்பா என்று எதிர்பார்க்கல்ல. என் நண்பர்கள் சிலர் வேலை விசா எடுத்து லண்டன் போனதை அறிஞ்சு தான் கேட்டன்.. என்று ஜனனியின் செயலுக்கு தானும் ஒரு காரணமோ என்று எண்ணி ஜெகனிடம் மன்னிப்புக் கேட்டான் பிருந்தன்.

ஐயோ பிருந்தன்.. நீங்கள் நல்ல விசயத்தைத்தானே கேட்டிங்கள். அதில ஒரு தப்பும் இல்ல. ஆனா ஜனனிட செயற்பாடுதான் எனக்கும் புதிசா இருக்குது என்று கூறி.. நான் அப்புறம் சந்திக்கிறன் என்று சொல்லிவிட்டு குடித்த ரீயையும் பாதில வைச்சிட்டு குழப்பத்தோடு விடைபெற்றான் ஜெகன்.

அதன் பின்னர் ஜனனி ஜெகனுடன் சந்திக்கிறதை கதைக்கிறதை தவிர்க்க முனைந்தாள். ஜெகன் வலிந்து பேச முனைந்தும் ஓரிரண்டு பேச்சோடு ஜனனி நிறுத்தி.. ஜெகனோடு கதைக்கிறதையும் சந்திப்பதையும் தவிர்க்கவும் அவனைப் புறக்கணிக்கவும் செய்தாள்.

ஒரு நாள் போன் பண்ணி ஜெகனை உணவு விடுதிக்கு அழைத்த ஜனனி.. உங்களோட கொஞ்சம் கதைக்க வேணும் என்றாள்.

கொஞ்சம் என்ன ஜனனி... உங்களோட கதைக்க முடியாத கணங்கள் எவ்வளவு கனதியா இருக்குது தெரியுமா மனசுக்கு.. ரெம்பவே கதைக்க ஆசையா இருக்குது.. மனசு விட்டு பழையபடி அன்பா கதைப்பம் என்றான் ஜெகன் பலத்த எதிர்பார்ப்போடு.

அதற்கு சிறிது நேரம் மெளனத்தை பதிலளிந்த ஜனனி.. பின்னர் தானே மெளனத்தைக் கலைத்து இந்தத் தேவையில்லாத கதையெல்லாம் சினிமா டைலக் மாதிரி எங்கிட்ட வேணாம்..

உங்கட நிலைப்பாடும் என்ற நிலைப்பாடும் ஒத்துவாறதா தெரியல்ல எனக்கு. விரும்பினா நீங்க வேறை யாரையும் பார்த்துக் கலியாணம் செய்து கொண்டு உங்க எதிர்பார்ப்பு பூர்த்தியாகிறது போல வாழ்ந்திடுங்க. என்னை என் வழில போக விடுங்க என்றாள்.

ஜனனியிடம் எதிர்பார்க்காத அந்த வார்த்தைகள் இடியாக விழுந்தன ஜெகனின் காதில். அவளின் பேச்சில் திகைத்துப் போனவன் கலங்கிய கண்களுடன்.. என்ன சொல்லுறீங்க ஜனனி, என் மனசை நோகடிக்கிறது என்று தெரியாமல் தானா பேசுறீங்க என்றான்.

நான் யாரையும் நோகடிக்க வேணும் என்று சொல்லேல்ல. எனக்குப் பிடிக்காததை நான் சுதந்திரமாச் சொல்லுறன் என்றாள். இதுதான் என்ர நிலைப்பாடு. இதில இருந்து நான் மாறப்போறதில்ல. எனக்கு உங்களோட காதலும் வேணாம் ஒன்றும் வேணாம் என்றாள் உணர்ச்சிவசப்பட்டவளாய்.

ஜனனி கோவப்படாம உணர்சிவசப்படாம... உங்களை பற்றி மட்டும் சிந்திக்காம என்னைப் பற்றியும் சிந்திச்சு நீங்க கதைக்கிறதா எனக்குப்படேல்ல. நீங்க மனசில எதையோ வைச்சிட்டு என்னை நோகடிக்கிறதாத்தான் படுகுது என்றான் ஜெகன்.

அப்படிப்படுகுதில்ல.. எதுக்கு அப்புறம் எதுக்கு என்னை தேடி வாறீங்க. தொந்தரவு பண்ணுறீங்க. நீங்களும் நிம்மதியா இல்லாம எனக்கும் நிம்மதியில்லாத ஒரு வாழ்க்கையா இருக்குது இது என்றாள் அவனிலேயே குற்றம் கண்டபடி.

என்னாச்சு ஜனனி உங்களுக்கு.. நாம காதலிச்சது பொய்யா அல்லது பழகியது பொய்யா.. அல்லது வாழ்வதே பொய்யா என்றான் ஜெகன்.

இதைக் கேட்டவள் சற்று அமைதியாகிவிட்டு.. எல்லாம் பொய் தான். அதுதான் சொல்லுறனில்ல நீங்க உங்களுக்குப் பிடிச்சமாதிரி ஒரு பொண்ணைப் பார்த்து கலியாணம் கட்டிட்டுப் போங்க என்று. ஏன் என்னை தொந்தரவு பண்ணுறீங்க.

நான் தொந்தரவு செய்தனா.. அப்படி என்ன தொந்தரவு செய்தேன் ஜனனி. செய்ததைச் சொல்லுங்க நான் என்னை முடிஞ்சளவு உங்களுக்கு ஏற்றாப்போல மாற்றிக்கிறன். உண்மையாவே என்னை மாற்றிக்கிறன். நீங்கள் தான் எனக்கு எல்லாம் என்று அப்பாவியாக அவள் முன் மண்டியிட்டான் ஜெகன்.

எனக்காக யாரும் தங்களை மாற்றிக்கிறது எனக்குப் பிடிக்கிறதில்ல. நானும் யாருக்காகவும் என்னை மாற்றிக்கமாட்டன். எனக்காக யாரும் காத்திருக்கவும் தேவையில்ல. என்ர சூழ்நிலைக்கு ஏற்பதான் நான் முடிவெடுப்பன் என்று முகத்தில் அடிப்பதுபோல வார்த்தைகளால் அடித்தாள் ஜனனி.

ஜனனி.. நீங்க ஏதோ குழப்பத்தோட இருக்கிறீங்க என்று நினைக்கிறன். மேலும் மேலும் பேசி உங்கட வெறுப்பை சம்பாதிக்க விரும்பல்ல. நேற்று வரை என்னைக் காதலிச்ச ஜனனியா இப்ப பேசுறது என்று எனக்கே சந்தேகமா இருக்குது. நீங்கள் எதையும் பேசுங்கோ உங்களுக்கு என்னைப் பேச உரிமை இருக்குது. ஆனா உங்களைத் தவிர எனக்கு ஒரு வாழ்க்கை இல்லை. அதுதான் என் தெளிவான நிலைப்பாடு என்றான் ஜெகன் உறுதியோடு.

அப்படியா சங்கதி.. நீங்க இப்படி புலம்பிக் கொண்டு இருப்பீங்க என்றதுக்காக நானும் இருப்பன் என்று நினைக்காதீங்க. நான் சந்தர்ப்பம் கிடைச்சா இன்னொருவரை மணக்கவும்.. ஏன் காதலிக்கவும் அவர் கூட வாழவும் தயங்கமாட்டன். எனக்கு தேவையென்று படுறதை நான் யாருக்கும் எதுக்கும் பயப்பிடாமல் செய்வன் என்றாள் ஜனனியும் பதிலுக்கு.

அது உங்கட விருப்பம். எங்கட காதலை உதறித்தள்ளுறதும் என்னை வருத்திறதும் தான் உங்களுக்கு சந்தோசமென்றால் அதை தாராளமாச் செய்யுங்க. அப்படியாவது உங்களை சந்தோசப்படுத்தின திருப்தில என் வாழ்க்கை என்னோட தனிமையில போயிட்டு இருக்கும் என்று தெளிவாகச் சொன்னான் ஜெகன்.

அதற்கு மெளனத்தைப் பதிலாக்கி.. எனக்கு ரைம் ஆச்சுது என்று கூறி விடைபெற்றாள் ஜனனி..!

அதன் பின் அவளைக் காண்பதே அரிதாகி விட வேதனைகளோடு தனிமையில் வாழ்க்கையை ஓட்டிய ஜெகன்.. சில ஆண்டுகள் கழித்து ஒரு நாள் அவளை அவள் குழந்தையோடு கொழும்பின் பிரதான நவீன சந்தையில் கண்டான். அப்போது ஜனனி வெளிநாட்டில் இருந்து வந்த மணமகன் ஒருவரின் மனைவியாக அழகிய பெண் குழந்தை ஒன்றுக்கு தாயாகி தாயக மண்ணில் சுற்றுலாவுக்காக வந்திருந்தாள்.

அவளைக் கண்டதும் இதயம் இழகி கண்கள் பனிக்க.. கண்களால் மட்டும் பேச முடிந்த சோகத்தை வெளிக்காட்டி.. தூர நின்றே அவதானித்து விட்டு.. அவள் கண்களில் படாமல்.. அவன் நினைவுகளை அவள் கிளறிடாமல் இருக்க தன்னை அவள் கண்களில் இருந்து மறைத்து அவ்விடத்தை விட்டே நகர்ந்தான்... அன்று அவள் போட்ட புதிருக்கு விடை கண்டவனாய்..ஜெகன்..!

ஆக்கம் தேசப்பிரியன்.