Thursday, October 04, 2007

"புட்னிக்" எனும் பட்சிக்கு அகவை ஐம்பது



காலைச் சூரியனை
கையெடுத்துக் கும்பிட்டு..
மாலைச் சந்திரனை
வீழ்ந்து வணங்கி..
சுழன்றடிக்கும் சூறாவளிக்கு
பயந்து நடுங்கி...
மின்னலும் இடியும்
மரணத்தின் தூதென்று
ஓடி ஒளித்து..
தீயதும் சுடுவது
முன்வினைப் பயனென்றும்
பூமியது அதிர்ந்து பிளப்பது
பாவிகள் அழிவென்றும்
இயற்கைக்குள்
உள்ளதை விளங்காமல்
உளறிய கணங்களில்..
எதிர்வினை சொல்லி
பகுத்தறிவென்று
வாய் வீரம் பேசி
வீண் பொழுது கழித்திடாமல்
ஆயிரம் கதை கட்டி
அலைந்து கொண்டிராமல்..
மூளையைக் கசக்கி
விண்கலம் கட்டி
விண்ணுக்கு அனுப்பி
வீர சாதனை படைத்த
திருநாள் இன்று..!

"புட்னிக்" எனும் மனிதப்பட்சி
ரஷ்சிய மண்ணிருந்து
விண்ணேகி
அரை நூற்றாண்டும்
கடந்தாயிற்று.
மனித வரலாற்றின்
புது யுகம் இது..
புறப்படுங்கள்..
சுன்னாகம் சந்தியில்
இருந்து...
செவ்வாய் நோக்கி
செவ்வாய் தோசத்தை
சிதைத்து விட்டு வருவோம்.


சுடச் சுடச் சுட்டது யாழ் இணையத்தில் இருந்து.

No comments: