Wednesday, January 09, 2008

கிட்டு மாமா


விடுதலைப்புலிகளின் யாழ் மாவட்ட முன்னாள் தளபதி கேணல் கிட்டு.

வெடியோசை எழுந்தது
எங்கள் நெஞ்சோசை அழிந்தது
களத்தோடு களமாடி
கோட்டைக்குள் அடித்தெழுந்த
அந்தப் புயலும் ஓய்ந்தது...!
தங்க தமிழீழ வேங்கையது
வங்கக் கடல் நடுவே சரிந்தது...!

அசோகச் சக்கரத்தின்
அகோரத் தாண்டவம் - எங்கள்
மாமாவின் உடல் கிழித்தது...!
ஆதிக்க வெறி பிடித்த
அகிம்சா தேசமது
அவன் ஆன்மா குடித்துக் குதூகலித்தது...!
தமிழீழ அன்னையவள்
கொடிதனைச் சுமந்தவன்
ஆழி தன் அலையோடு
மீண்டிட்டான் தமிழ் மண்ணை...!

குரலோசை எழுந்தது - அது
அவன் புகழோசை சொன்னது
விடியலின் தாய் மகன்
விடிவெள்ளியான கதை
முடிவின்றிச் சொன்னது....!
தர்மம் வெல்லும் என்பது
காலத்தின் கோலம் என்றது
சரியாகி நின்றது
எங்கள் நெஞ்சங்கள் அவன் நினைவுகள்
அலையலையாய் சுமந்தது...!


- தேசப்பிரியன்

இணையத்தில் பெற்ற கவிதை. மூலம் இங்கு.

3 comments:

Anonymous said...

ஆகா அன்று எங்களின் இந்திய படையை நேருக்கு நேராக எதிர் கொள்ள துணிவில்லாமல் தற்கொலை செய்து கொண்ட கோழை தானே இந்த கிட்டு.

பங்கர் ராசா தொப்பை மாமா பிரபாகரனும் ஒரு நாள் இதே போல சாவான். அது விரைவில் நடக்கும்

kuruvikal said...

இந்தியப் படை ஈழத்தில் தோல்வி கண்டு ஓடிய பின் சர்வதேசக் கடற்பரப்பில்.. தனித்து ஒரு கப்பலில் வந்த போராளிகளை.. அதுவும் சமாதானம் பேசப் போக அனுமதிக்கிறோம் என்று சொல்லி அழைத்து விட்டுத்தான்.. வங்கக்கடலில் வைத்து கைது செய்ய முற்பட்ட போது கிட்டு மாமாவும் இதர போராளிகளும் தமிழீழ மக்களின் புலிப் புதல்வர்களின் இலட்சியப்படி எதிரியின் கரங்களில் சிக்காது தம்மைத் தாமே அழித்து வீரமரணத்தை அணைத்துக் கொண்டனர்.

ஈழக்களத்தில் தோற்று ஓடிய இந்தியப் படை.. நயவஞ்சகமாகக் கொன்றதே தவிர வீரப் போர் புரிந்தல்ல.

வீரப்போர் புரிந்ததென்றால் கார்கில் சண்டையில் கிளிங்டனிடம் போய் மண்டியிட்டு பாகிஸ்தான் படையினரை வென்றம் என்று அறிக்கை விட்டது போல் என்று நினைக்கிறீர்களா புலி வீரர்களை...!

Anonymous said...

தளபதி கிட்டு மீது கைக்குண்டு எறிந்த தேசத் துரோகி புளட்டை சேர்ந்த ரஹ்மான்யான் தற்போது கனடாவில் இருக்கிறான். மேலதிக தகவல்களுக்கு "கிட்டு கிறநைட்" என்று "கூகிள்" இல் தேடி பாருங்கள்