Thursday, December 20, 2007

ஈ வெ ராமசாமியும் கொள்கைகளும் திருகுதாளங்களும்.

ஈ வெ ராமசாமி (பெரியார் எனப்படுபவர்) வட இந்திய ஆரியரை எதிர்க்க திராவிடம் பேசினார் எங்கிறீர்கள்.. இன்று தமிழக திராவிட கழகங்கள் வட இந்திய ஆரியக் கட்சிகளுடன் ஒத்துழைத்து தமிழருக்கு எதிராகச் செயற்படவில்லையா..???! அதேபோன்றே ராமசாமி காந்திஜியிடம் அரசியல் நடத்த பேரமும் பேசியவர். இதுதான் திராவிட வாதத்தின் ஆரிய எதிர்ப்பின் தார்ப்பரியமா..???! இப்படி சொந்த மக்களையே ஏமாற்றி அடுத்தவருக்கு அடிபணிந்து பிழைப்பு நடத்த ஏன் ஒரு திராவிடக் கொள்கை. அது எனியும் நமக்கு அவசியம் தானா..??! தமிழன் என்ற இன உணர்வை ஊட்டவல்ல தமிழ் தேசிய எழுச்சிதான் இன்றைய உலகில் தமிழரின் இருப்புக்கு அவசியாமனது..!

சந்திரகாசனை (தந்தை செல்வாவின் உறவினர்) யாரும் ஈழத்தமிழ் பற்றாளர் என்று இனங்காண்பதில்லை. காரணம் அவரின் செயற்பாடுகள்.. நேரடியாக ஈழத்தமிழரின் போராட்டத்துக்கு எதிராக அமைந்திருப்பதால். நேரடியாக அன்றி எத்தனை பேர் ஈழத்தமிழர் போராட்டத்தை எதிர்க்கிறார்கள். அவர்களை எல்லாம் அவதானிக்கிறமா.. அப்படியானவர்களை இனங்காண்கிறமா.. இனங்காட்டத்தான் முடிகிறதா.. இல்லையே..??! அவ்வளவுக்கு ரகசியமாகவும் திரைமறைவிலும் மற்றவர்கள் எளிதில் உணராத படிக்கும் நடந்து கொள்கின்றனர்.

ஈ வெ ராமசாமி தனது பத்திரிகையில் ஒரு அறிக்கையை வெளியிட்டதும்.. அதை ஈழ ஆதரவு என்று காட்ட முனைகிறீர்கள். அதைவிட அவர் ஏதும் செய்யவில்லை. மா பொ சி போன்றவர்களை சத்தியசீலன் ( ஈழ விடுதலைப் போராட்ட முன்னோடிகளில் ஒருவர்) சந்திக்க முற்பட்ட போது அவர்கள் உங்களின் போராட்டத்தில் நியாயம் இருக்கிறது என்றாலும்.. எமது ஆதரவைக் கொண்டு என்ன செய்யலாம் என்று நினைக்கிறீர்கள் என்று கேட்டனர். காரணம் அவர்கள் உணர்ந்திருந்தார்கள் இந்திய மத்திய அரசின் பலமும் அதன் தமிழர் விரோதப் போக்கையும் தெளிவாக..! அதை அவர்கள் மறைக்காமல் செயற்பட்டனர். இன்று வரை அதுதான் நிலை. இந்தியா தனது நலனுக்கு வெளியில் எம்மை ஆதரிக்கவே இல்லை..!ஆனால் ராமசாமி என்ன செய்தார்.. எதையும் ஆழமாக சிந்திக்கத் தெரியாத ராமசாமி ஒரு அறிக்கையை வெளியிட்டு.. தனது அரசியலை கவனித்தாரே அன்றி அதன் பின் விளைவுகள்.. அதன் மூலம் தோன்ற இருக்கும் நெருக்கடிகள் என்பன குறித்து சிந்தித்தாரா..??!

எம் ஜி ஆர் போன்றவர் தலைவர்கள் செய்த உதவிகள் பற்றி இன்று (அண்மையில் இறக்க முன்னர்) அன்ரன் பாலசிங்கம் போன்றவர்கள் சொல்லித்தான் தெரிய வேண்டிய அளவுக்கு ரகசியமாக இருந்துள்ளன..! ஏன் அவர்கள் பகிரங்கமாக தங்கள் உதவிகளைச் செய்யவில்லை. காரணம் அவர்களுக்கு அவர்கள் இருந்த அரசியல் புறச்சூழல் பற்றிய தெளிவிருந்தது. ஆனால் ராமசாமிக்கு.. அப்படி எதுவுமே கிடையாது. கடவுள் சிலையை செருப்பால் அடித்தால் கடவுளைக் கைவிடுவான் என்பது சிலையில் கடவுளை காண்பவனைக் காட்டிலும் மோசமான நிலை..!மக்கள் மனங்களில் உள்ள ஒரு கொள்கை தொடர்பில் ஒரு மாற்றத்தை சரியான விளக்கங்களுக்கு அப்பால் வெறும் கேலித்தனமான செயற்பாட்டால் ஏற்படுத்த முடியாது. இந்த எளிமையான உண்மையைக் கூட புரியக் கூடிய அறிவு ஈ வெ ராமசாமியிடம் இருக்கவில்லை..!

இந்துமதத்துக்கும் மூடநம்பிக்கைக்கும் வெகுலாவகமா முடிச்சுப் போடிறீங்கள். ஆனால் மூடநம்பிக்கைகளில் அதிகம் ஈடுபட்டவர்கள்.. முனியையும்.. ஐயனாரையும்.. வைரவரையும் வணங்கிய பழங்குடி மக்கள் தான். அதனால் தான் அவ்வழிபாட்டு முறைகளையும் இந்து மதம் உள்வாங்கி அதற்கு ஆன்மீக விளக்கமளித்து மக்களிடம் மூடநம்பிக்கைகளைக் களைய முனைந்தது. காரணம் அவர்களின் மூடநம்பிக்கைக்கு மதமல்ல காரணம்..அறியாமையே. கல்வி அறிவற்ற தன்மையே. கல்வி அறிவால் இந்துமதம் (சைவம்) கொண்டுள்ள ஆன்மீக மெய்யியல் அறிவைப் புகட்ட முடிகின்ற போது மனிதன் தன்னிலை மட்டுமன்றி இந்தப் பிரபஞ்சத்தின் தன்மை குறித்தும் அறிகின்ற போது அவன் அறியாமை இருளில் இருந்து விடுபடுகின்ற போது மூடநம்பிக்கைகளும் பேராசைகளும் அவனை விட்டுக் கழன்று விடுகின்றன. அப்போது அவனிடம் தெளிவும் மனிதாபிமானமும் அன்பும் மிகும்..! அத்தோடு அறிவியல் அறிவும் வழங்கப்படும் போது அவன் சிறந்த சிந்தனைவாதியாக நவீன உலகின் படைப்பாளியாக புதிய புதிய கண்டுபிடிப்புக்களுக்கான முன்னோடியாக திகழ வழிபிறக்கும்..!

அதைவிடுத்து.. சிலைக்கு சோடா புட்டியால் அடித்தால் அறியாமை விலகாது. கடவுள் சிலைக்குப் போட்டியாக பதிலாக ராமசாமிக்கு 95 அடியில் சிலை வைத்தால் கல்வி அறிவு எழாது. மாறாக குரோதமும் கோபமுமே வளர்க்கப்படும். சாதி அழிக்கின்றன் என்ற சிலர் இங்கு எத்தனை தடவைகள் சாதிப் பெயர்களையும் சாதிகளையும் உச்சரித்திருப்பார்கள். காரணம் அவர்கள் ராமசாமி வாரிசுகளாகவே மாறிவிட்டதால். இதைத்தான் ராமசாமி என்ற கன்னடனும் செய்தது. பிராமணன் பிராமணன் என்று கொண்டே... அந்த ஒரு மக்கள் குழுமத்தின் மீது தனக்குள்ள வெறுப்பை என்னென்ன வழியில் வெளிக்காட்டி தன்னை பிரபல்யம் அடையச் செய்யலாமோ அதை செய்தார். அதன் மூலம் தமிழர்களைப் பிளவுபடுத்தி தமிழர்களின் அரசியல் தளத்தைப் பலவீனமாக்கி அதில் தான் எங்கு இலாபம் பெறலாம் என்று தான் ராமசாமி அதிகம் அக்கறை செய்தாரே தவிர.. தமிழக மக்களின் அறியாமையை விலக்கி.. அறிவை வளர்த்து ஒற்றுமையை ஓங்கச் செய்து.. மூடநம்பிக்கைகளை களையச் செய்ய முற்படவில்லை.

இந்துமதம் அறியாமையை வளர்க்கின்ற மதமல்ல. இந்து ஒரு கலாசாரமாக உலகில் மிளிர்கிறது. எத்தனையோ பல்கலைக்கழகங்களில் இந்துமதமும் இந்துக்கலாசாரமும் போதிக்கப்படுகின்றன. அந்தளவுக்கு அதற்குள் மெய்யியல் மற்றும் வரலாற்று அறிவியல் கலந்திருக்கிறது. ஆனால் ராமசாமியைப் போல கண்ணை மூடிக்கொண்டு ஒரு சமூகத்தின் மீதுள்ள வெறுப்பை உமிழ.. அறிவிலித்தனமான வாதங்களை முன் வைத்து மொத்த மதத்தையும் இழிவுபடுத்தும் வகையில் அதுவே மூடநம்பிக்கையின் மூலம் என்பது மோசமான நிலை..! ஆய்ந்து அறியும் தன்மையற்ற நிலை..!

மூடநம்பிக்கைக்கு மதம் அல்ல காரணம். மனித அறியாமையே காரணம். மனித அறியாமைக்குக் காரணம் கல்வி அறிவின்மை. கல்வி அறிவின்மைக்குக் காரணம் அரச சலுகைகளுடன் கூடிய கல்வியை அல்லது இலவசக் கல்வியைக் கூட சரிவர பெற இல்லாத ஆர்வமும் வழங்க முற்படாமையும்..! அடிப்படைக் கல்வி அறிவற்ற ராமசாமிக்குள்ளும்.. ஒரு அறியாமை இருந்திருக்கிறது என்பதை.. அவர் தன் கருத்துக்களைச் சொல்லிய விதத்தில் காண முடிகிறது.

ராமசாமியை திராவிடக் கட்சிகள் தான் "தந்தை" "பெரியார்" எங்கின்றனர். காந்திஜிக்கு வழங்கப்படும் மரியாதை இந்திய மண்ணில் ஏன் அண்டை மாநிலங்களில் கூட ராமசாமிக்கு கிடையாது. ஏன்..?? அவரின் சொந்த மாநிலமான கர்நாடகத்தில் அவருக்கு ஒரு சிலை இருக்கோ தெரியாது..! கர்நாடகத்தில் ஒரு கட்சி கூட "ராமசாமியின்" புகழ்பாட இல்லை..! திராவிடக் கொள்கை பேசி கன்னடன் என்று தன்னை இனங்காட்டி கன்னட விசுவாசத்தை வெளிப்படுத்திக் கூட ராமசாமி கன்னட தேசத்தில் மதிக்கப்படவில்லை. காரணம் என்ன..??! ராமசாமியின் கோமாளித்தனக் கொள்கைகளும் போலிப் பேச்சுக்களும்.. பேச்சுக்கும் செயலுக்கும் தொடர்பில்லாத கீழ்த்தரமான பண்பாடற்ற பழக்கங்களுமே..! இப்படியான ஒருவர் தமிழர்களுக்கு "தந்தை" "பெரியார்" என்று இனங்காட்டப்படுவது திராவிடக் கட்சிகளுக்கு அரசியல் நடத்த உதவலாம்.. தமிழர்கள் மத்தியில் உள்ள பிளவுகளை போக்க உதவாது.

ராமசாமியை பிராமண சமூகம் வெறுக்கக் காரணம் என்ன..??! பிராமண சமூகம் என்பதை தமிழர்கள் என்று இனங்காணாத அந்த நிலையே..! பிராமண சமூகம் சரி இதர சமூகங்களும் சரி சாதியச் சாயங்களால் பிளவுபடுத்தப்பட்டிருப்பினும்.. இனத்தால் மொழியால் கலாசாரத்தால் தேசத்தால் பண்பாட்டால் தமிழர்களே..! அந்த வகையில் அவர்கள் எல்லோரையும் ஒன்றிணைக்க ஏன் முற்படவில்லை. தமிழ் தேசியம் அதைச் செய்யும்..! திராவிடக் கொள்கைகள் நிச்சயம் அதற்கு இடமளிக்காது. காரணம் திராவிடம் சாதி இல்லை இல்லை என்று கொண்டே சாதியை வளர்த்ததும் அரச ஆட்சி மட்டத்துக்கு சாதியைக் கொண்டு வந்ததுமே அதனால் சாத்தியப்பட்டது.

மூடநம்பிக்கைகளை அகற்ற கல்வி அறிவை ஊட்டி அறிவை தெளிவை வளர்க்க வேண்டுமே தவிர அறியாமை உள்ள மக்களிடம் குரோதத்தை கோபத்தை வன்முறையைத் தூண்டி.. சொந்த இனத்தின் இன்னொரு சமூகத்தின் மீது கொலை வெறியை வெறுப்புணர்வை ஊட்டுவதல்ல சமூக அக்கறை.. சமூகப் புரட்சி..! அந்தவகையில் ராமசாமி அரசியலுக்காக தனது செல்வாக்குக்காக தமிழர்களை பிளவுபடுத்த கையில் எடுத்ததே பிராமண எதிர்ப்பும் பார்பர்னிய ஆரிய மாயைகளின் உச்சரிப்பும்..!

அறியாமையைப் போக்கி அறிவியலை வளர்த்து கல்வி அறிவுடன் ஆன்மீக அறிவையும் ஊட்டி மெய்யியல் அறிவையும் பெறும் ஒரு சமூகம் எப்போதும் தளம்பலற்ற.. உயர்சியை ஒற்றுமையை சந்திக்கும் என்பதற்கு யூதர்கள் நல்ல உதாரணம்.

தமிழர்கள் அதை உணர்வதும் ராமசாமி போன்ற சந்தர்ப்பவாத உளறல் கோமாளிகளின் கொள்கைகைகளை தூக்கி எறிஞ்சிட்டு.. தங்கள் அறியாமை திரை விலக்கி.. தங்கள் தனித்துவத்தை இழக்கச் செய்யும் திராவிட மாயைப் போர்வைக்குள் இருந்து வெளிவந்து தமிழ் தேசிய எழுச்சியுடன் தமிழ் தேசிய உணர்வுடன் கூடிய தமிழர்களாக உலகில் பரிணமிக்க சிந்திக்க வேண்டும்.

ஆரியரை எதிர்ப்போம் என்று கூறிக் கொண்டே ஆரியர்களாக தாங்கள் வரையறுப்பவர்களின் கொள்கைக்கும் பிழைப்புக்கும் முண்டுகொடுக்கும் திராவிட கழகங்களின் கொள்கைகள் தமிழின மொழி அழிப்பைப் பற்றிய அக்கறை அற்றவை என்பதை இன்று தமிழர்கள் நன்கே உணர்ந்துள்ளனர்..! இதுதான் ஈ வெ ராமசாமியின் கொள்கைகள் செய்த அறுவடை..!

தமிழகம் இந்திய தேசியத்தால் தனது தமிழ் தேசிய உணர்வை இழந்து நிற்க மூல காரணமே திராவிடக் கழகங்கள் என்றால் மிகையல்ல..! தெரிந்தோ தெரியாமலோ அவர்கள் தமது தவறுகளைத் தொடர்கின்றனர். இதற்கும் இந்து மதத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை..!

பாதையைப் பற்றிப் பேசனும் என்றால் எதற்கையா இராமரைப் பற்றிப் பேசுறீங்க...! இராமரே இல்லை என்பவர்கள் திரும்பத் திரும்ப அதை நிரூபிக்க வேண்டியதில்லை. தங்களின் அறிவார்த்த அணுகுமுறையைச் செய்ய வேண்டும். வெறுமனவே வார்த்தை ஜாலங்களால் அரசியல் செய்யலாம் அறிவியலை அணுக முடியாது. கப்பற் பாதை அமைப்புக்கு சாத்தியமான முன்னோடியாக அமையத்தக்க அடிப்படை அறிவியல் ஆய்வென்று கூறி ஒரு காத்திரமான ஆய்வை மேற்கொண்டு பாலம் இராமருடையதல்ல என்பதையும் நிறுவி, இதர பிற எதிர்ப்புக்களுக்காக முன்வைக்கப்படும் காரணங்களையும் முறியடிக்க வாய்ப்பிருந்தும்.. அறிவியல் இருந்தும்...அதை செய்ய நிரூபிக்க தமிழகப் பல்கலைக்கழகங்களுக்கு திராணி இல்லை. ஆனால் தமிழக முதல்வர் கேட்கிறார் இராமர் எந்த பல்கலைக்கழகத்தில் படித்தவர் என்று. காலங்காலமா இராமரே இல்லை என்று சொல்லுறவர் இப்படி வினவுவது எவ்வளவு அறிலித்தனமானது மட்டுமன்றி விசமத்தனமானதும் கூட..! இப்படிப்பட்ட மு... முக்கள் தான் தமிழரின் தலைவர்கள்..! இவர்கள் தாம் ராமசாமியின் வாரிசுகள்..! இவ்வாறான தலைவர்கள் உலகில் சுய சிந்தனைமிக்க, அறிவியற் சமூகமாக, சுயாதியபத்திய ஆட்சியுரிமையுள்ள, தமிழன் என்ற இன அடையாளம் தாங்கி மிளிர இடமளிப்பரா..??!

மின்னஞ்சல் வழி கிடைத்த கட்டுரை.

1 comment:

Anonymous said...

நடுநிலையான பார்வை.