Sunday, December 16, 2007

வேலி போடலையோ வேலி...

சீமைக் கிளுவைக்குள்
சீவியம் செய்தவள்
சீமைக்குப் புறப்பட்டாள்
சீறி எழுந்த
சிறீலங்கன் எயார் லைன்ஸில்..!

கூலி கொடுத்து
தாலி வாங்கி
வேலி போட்டனள்
நாணி நின்றவள்
கூனி நிற்பாள் என்று..!

மாதம் பத்து
சும்மா இருந்தவள்
சுமந்தனள்
சுமைகளோடு
சுதந்திரக் கனவு..!

தாலி பிரித்து
வேலி தாண்டி
நடப்பது பகற் கனவு
கண்டனள் ஏங்கினள்..
படிதாண்டிப் பத்தினியும்
பரத்தையானதில்..!

சீமையில்
சீதனம்
சீர் தனம்
சீ சீ.. என்பதில்
சிந்திக்க இருக்கு
சில சுயநலம்..
அதில்
அடங்கி இருக்கு
பலவீனம்..
பண வீக்கம்..!

சீமைச் சிறப்புக்குள்
சீரழியும் இயற்கைக்குள்
சீமைக்கிளுவைகள்
சீர் பெறுமா..??!
விடை தேட
ஆணும் பெண்ணும் எங்கே..??!
கலந்தடிக்கிறார்
போதையில் இங்கே..!


சுட்டுப் போட்டது யாழ்.கொம் இல் இருந்து.

No comments: