Friday, November 09, 2007

பெரியார் படக் காட்சி அறிவியலுக்கு விரோதமானது.

அண்மையில் பிரித்தானியா University of Utah நடத்திய ஆய்வில் இருந்து குறைந்தது மாதம் ஒரு முறை விரதம் அல்லது உண்ணா நோன்பிருப்பது இதய நோய்களை கட்டுப்படுத்த உதவும் என்ற தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

Fasting for one day a month 'cuts the risk of heart attack'

Skipping meals once a month could help stave off a heart attack, say scientists.

Fasting for at least 24 hours cuts the risk of coronary artery disease by up to 40 per cent, compared with those who eat every day, research shows.

Experts believe the break from food could help 're-set' the body's metabolism, enabling it to work more efficiently as a result.


மூலப் பிரதிக்கான இணைப்பு.

ஆனால் அண்மையில் வெளியிடப்பட்ட "பகுத்தறிவு" வாதி என்று பெயர் சூட்டப்பட்ட பெரியார் என்ற ஈ வெ ராமசாமி நாயக்கரின் வாழ்க்கைக் குறிப்புப் பற்றிய படத்தில் விரதங்கள் மூடநம்பிக்கைகள் என்ற பாங்கில் காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இதை எள்ளளவும் அறிவியல் பகுப்பாய்வுப் பார்வைக்கு உட்பட்ட காட்சியமைப்பாகக் காண முடியவில்லை. இந்த பகுத்தறிவுப் பரப்புரைக்கு மாறானதாக அறிவியல் ஆய்வு வெளிப்பட்டிருப்பதானது பகுத்தறிவென்று மக்களை அறிவியல் சிந்தனைக்கு அப்பால் இட்டுச் செல்லும் மூடத்தனமான செயலைச் செய்வதாகவே நோக்க வேண்டியுள்ளது.

இவ்வதானிப்புக் குறிப்பை தருவது சர்வதேச தமிழ் இளையோர் அமைப்பு.

9 comments:

Anonymous said...

பெரியார் என்ன விஞ்ஞானியா அறிவியல் பூர்வமாக கதைப்பதற்கும் சொல்லவும். அவர் சும்மா உளறினதுகள் அந்தக் காலத்தில கொஞ்சம் வித்தியாசமா இருந்தது கொஞ்சப் பேருக்கு வசதியாப் போச்சுது. நீங்களும் ஏதேனும் வித்தியாசமாச் சொல்லுங்கோ உங்களையும் தல என்று சொல்வார்கள். அறிவியல் எல்லாம் எதிர்பார்க்கக் கூடாது. :)

Anonymous said...

அடப்பாவி!
வடிக்கட்டுன முட்டாளுன்னு உங்கள மாதிரி ஆளுங்களை பார்த்துதான் சொல்லுவாங்களா?

பெரியார் எவ்வளவோ நல்ல செய்திகளை செய்தார் சொன்னார். அதை எல்லாத்தையும் விட்டுவிட்டு இதை மட்டும் தக்க வைத்து அழகு பார்க்கும் நீ ஒரு சரியான பன்னாடைன்னு நல்லாவே தெரியுது.

எப்படியாவது ஒழிஞ்சி போ!

நீ உருப்படவே மாட்டே!

Unknown said...

udambukku nallathunu unnaa viratham iruppathaiyaa periyaar vedamunu sonnaaru neenga samikku kadavuLukku enRu solli varathukku irandu moondru naal irunthaal udambu balaveenamaakividum unnaviratham irukkasollaravan ariviyalpoorvama irukka solla vendiyathu thaana udambula enargyye illathavan unnaaviratham iruntha seekkiram seththupoiduvaan ungalooda ariviyal araaichi unavu pazakkam vasikkum idam thatppaveppa nolai ellaavarraiyum poruththu maarum

kuruvikal said...

"அடப்பாவி!
வடிக்கட்டுன முட்டாளுன்னு உங்கள மாதிரி ஆளுங்களை பார்த்துதான் சொல்லுவாங்களா?

பெரியார் எவ்வளவோ நல்ல செய்திகளை செய்தார் சொன்னார். அதை எல்லாத்தையும் விட்டுவிட்டு இதை மட்டும் தக்க வைத்து அழகு பார்க்கும் நீ ஒரு சரியான பன்னாடைன்னு நல்லாவே தெரியுது.

எப்படியாவது ஒழிஞ்சி போ!

நீ உருப்படவே மாட்டே!"

இவைதான் ஈ வெ ராமசாமி விதைத்ததின் பிரதிபலங்களோ..??! :)

kuruvikal said...

"udambukku nallathunu unnaa viratham iruppathaiyaa periyaar vedamunu sonnaaru neenga samikku kadavuLukku enRu solli varathukku irandu moondru naal irunthaal udambu balaveenamaakividum unnaviratham irukkasollaravan ariviyalpoorvama irukka solla vendiyathu thaana udambula enargyye illathavan unnaaviratham iruntha seekkiram seththupoiduvaan ungalooda ariviyal araaichi unavu pazakkam vasikkum idam thatppaveppa"

இப்படி ஈ வெ ராமசாமி சொன்னாரா.. மூன்று நாளைக்கு விரதம் இருக்காதேங்க ஒரு நாளைக்கு மட்டும் இருங்க என்று.

குறிப்பிட்ட காட்சியில் விரதம் இருப்பதை இழித்துரைக்கும் வகையிலும் விரதம் இருப்பது மூடத்தனம் எனும் வகையிலும் கருத்துப்பரப்பட்டுள்ளது. பகுத்தறிவு என்ற பெயரில். இப்போ சமாளிப்புக்குகளை வீசி பெரியார் படத்தை தயாரிச்சவங்க பெரியார் பற்றி மிகைப்படுத்த அறிவியலைக் கவனத்தில கொள்ளாததை மறைப்பது அழகல்ல.

கடவுளின் பெயராலோ.. எதனாலோ... விரதம் இருப்பது நல்லது என்பது நிரூபணமாகிறது. இஸ்லாமியர்கள் கிறீஸ்தவர்கள் இந்துக்கள் என்று பொதுவா எல்லோருமே விரதங்களை அனுஷ்டிக்க வழிவகைகள் உள்ளன.எனவே இதில் ஒரு குறிப்பிட்ட கடவுளை மட்டும் வணங்கும் மக்கள் விரதம் அனுஸ்டிப்பத்தை மூடத்தனம் என்பது சுத்த அறிவிலித்தனமாகவே தென்படுகிறது. அதற்கு அறிவியலும் சான்றுபகர்கிறது.

Anonymous said...

"நான் உடல் நலத்திற்காக நோன்பிருக்கிறேன்" என்று கூறிக்கொண்ட யாரையாவது பெரியார் கிண்டல் செய்ததாக கேள்விப்பட்டதுண்டா?

நோன்பிருந்தால் கூரையைப் பிய்த்துக்கொண்டு தங்கம் விழுந்துவிடும் என்ற நிலையில் "அவன் அருள் வேண்டி !!" நோன்பிருக்கும் மடத்தனத்தை தான் பெரியார் எதிர்க்கிறார்.

இதேபோல் பெரியார் கேட்கும் அத்தனை கேள்விகளுக்கும் விளக்கம் சொல்லத் தயாரா????

kuruvikal said...

நோன்பிருந்தால் தங்கம் விழுகுதோ இல்லையோ உடல்நலம் ஆரோக்கியமாகும் என்பதை உங்கள் ஈ வெ ராமசாமி மக்களுக்குச் சொல்லி இருக்கலாமே. அதைவிட்டிட்டு ஏன் பதிலுக்கு தானும் மடத்தனமாப் பேசனும் மக்களை நோக்கி...! :)

Anonymous said...

நான் உடல் நலத்திற்காக நோன்பிருக்கிறேன்" என்று கூறிக்கொண்ட யாரையாவது பெரியார் கிண்டல் செய்ததாக கேள்விப்பட்டதுண்டா?

நோன்பிருந்தால் கூரையைப் பிய்த்துக்கொண்டு தங்கம் விழுந்துவிடும் என்ற நிலையில் "அவன் அருள் வேண்டி !!" நோன்பிருக்கும் மடத்தனத்தை தான் பெரியார் எதிர்க்கிறார்.

இதேபோல் பெரியார் கேட்கும் அத்தனை கேள்விகளுக்கும் விளக்கம் சொல்லத் தயாரா????
//

பெரியார் மூடநம்பிக்கைகளைத்தான் கடுமையாக எதிர்த்தார். அதை எதிர்க்க முடியாத இந்த பார்ப்பன பண்டாரங்கள்
//நீங்களும் ஏதேனும் வித்தியாசமாச் சொல்லுங்கோ உங்களையும் தல என்று சொல்வார்கள். அறிவியல் எல்லாம் எதிர்பார்க்கக் கூடாது. :)
// போன்றுதான் உளறுவார்கள்.

kuruvikal said...

ஈ வெ ராமசாமி எதிர்தார் எதிர்த்தார் எங்கிறீர்களே தவிர எதிர்த்தற்கு ஈடாக என்னத்தை பிரதியீடாக மக்கள் முன் வைத்தார்...??!
அந்தளவுக்கு சிந்திக்க அவரால் முடியல்ல. அவர் உள்ள ஒன்றை எதிர்ப்பது என்பதாக இருந்திருக்கிறாரே தவிர அறிவியல் சிந்தனை செய்து தான் எதிர்பதற்கு ஈடாக மக்களுக்கு உள்ள பிரதியீடு என்ன என்பதையிட்டுச் சிந்திக்கவே இல்லை.

மூடத்தனம் என்று விரதங்களை எதிர்ப்பதிலும் மக்கள் விரதங்களூடு பெற நினைக்கும் அநாவசியங்களைச் சுட்டிக்காட்டி இருக்கலாமே. மாறாக ஏன் விரதங்களை எதிர்க்க வேண்டும். அங்கு அறிவிலித்தனம் தானே மிகுந்திருக்கிறது என்பது வெளிப்படை..!