Thursday, November 01, 2007

ஈழத்தமிழரை பலவீனப்படுத்த புகுத்தப்படும் தலித்தியம்.

ஈழத்தில்.. ஈழப்போராட்டம் ஆரம்பமாகிய பின்... தலித்தியம் என்ற அடிப்படையின் கீழ் சமூகப்பிரிவினைகள், இந்தியாவில் உள்ளது போன்று, ஆழப்படுத்தப்பட்டு அரச நிர்வாக அலகில் செல்வாக்குச் செய்யும் அளவுக்கு என்று எதுவும் கிடையாது.

ஆனால் புலம்பெயர்ந்த சில தமிழின தேச விரோத சக்திகள் அந்நிய அருவருடிகளின் காசுக்கும் தங்களின் சுய இலாபத்துக்கும், புகழுக்கும் என்று ஈழத்தமிழ்மக்களைப் பிரித்தாளும் தந்திரோபாயத்துக்கு விலை போய் ஈழத்தில் தலித்தியம் என்பது உள்ளதாகக் காட்டி அல்லது நிறுவி.. அதற்கு உரிமைக்குரல் எழுப்ப முனைகின்றனர்.

ஈழத்தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டமானது வெறுமனவே சிங்கள பெளத்த பேரினவாத ஆதிக்கத்துக்குள் இருந்தான விடுதலை என்பதற்கும் மேலாக அனைத்து வித சமூக விடுதலையையும் ஒருங்கிணைத்து கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நகர்ந்து வந்துள்ள காலக்கட்டங்களில் கூட எழாத தலித்தியவாதம் இன்று புலம்பெயர்ந்து சொகுசு வாழ்க்கை வாழும் சிலரால் புகழுக்காகவும் பிற தீய சக்திகளின் தேவைக்காவும் முன்னிறுத்தப்படுவது குறித்து ஈழத்தமிழ் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

இந்த சக்திகளுக்கு பிபிசி தமிழில் உள்ள சில இந்திய தலித்தியவாத சுவாசத்தில் குளிர்காய்பவர்களும் பிரச்சார அனுசரணையாளர்களாக இருந்து பாரீசில் நடந்த ஒரு குட்டி மாநாட்டுக்கு பெரிய தோற்றம் கொடுக்கும் வேலையை முடுக்கிவிட்டுள்ளனர்.

ஈழத்தில் சிங்கள பேரினவாத ஆதிக்கத்தை மூடிமறைத்து தமிழர்களின் அடிமைத்தனத்தை மறைத்து அரசியல் செய்ய முனைந்த முன்னாள் தமிழ் அரசியல்வாதிகள், சாதி மற்றும் பிரதேச வாதங்களை முன்னிலைப்படுத்தி மக்களை பிரித்தாண்டு தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டனர்.

ஆனால் அந்தக் குள்ள நரி அரசியல்வாதிகள் ஈழப்போராட்ட சக்திகளின் உருவாக்கத்துக்குப் பின்னர் இருந்த இடம் தெரியாமல் அந்நிய தேசங்களுக்கு ஓடிப்போயினர்.

மீண்டும் கருணா போன்ற சந்தர்ப்பவாத தமிழினத் துரோகிகள் பிரதேசவாதத்தைக் கையில் எடுத்து தமிழீழ தேசத்தை இரு கூறாக்கி தமிழர்களின் பாரம்பரிய நிலத்தொடர்ச்சியை சிதைக்க முனையும் சர்வதேச மற்றும் சிங்கள பேரினவாத சக்திகளுக்கு உதவி தங்கள் சொகுசு வாழ்க்கையை தீர்மானிக்க முற்பட்டுள்ள இந்தச் சந்தர்ப்பத்தில்..

தலித்தியம் என்ற போர்வையில் தலித் மக்கள் என்று தமிழ் மக்களுக்குள்ளேயே பிரிவினைகளை தோற்றுவித்து ஆழப்படுத்தி தமிழ் தேசியத்தின் வழி ஒற்றுமைப்பட்டுள்ள ஈழத்தமிழ்மக்களை தலித்து சாதி என்ற சமூகப் போலிகளால் கூறுபோட்டு பிரித்தாண்டு தமிழ் தேசிய இருப்பை இந்தியாவில் சீரழித்தது போன்று ஈழத்திலும் சீரழிக்க சில அந்நிய சக்திகளும் சிங்களப் பேரினவாத சக்திகளும் முனைப்புக்காட்டி வருவதை இன்று அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

ஈழத்தைப் பொறுத்தவரையும் புலம்பெயர் தேசங்களைப் பொறுத்தவரையும் மனித அடிப்படைத் தேவைகளான கல்வி சுகாதாரம் இருப்பிடம் உணவு போன்றவற்றிற்கு எந்த சமூகப்பாகுபாடும் காட்டப்படுவதில்லை. தகமை அடிப்படையில் தொழில் வழங்குதல் என்பது சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு அப்பால் அனைவருக்கும் அனைத்தும் என்ற நிலையை வழங்கியுள்ளது. ஈழத்தில் இலவசக் கல்வி மூலம் எல்லா மக்களுக்கு கல்வி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. கல்வி அறிவுமிக்க சமூகம் ஒன்றில் தலித்தியம் என்ற பிரிவினை நோக்கம் கொண்ட தமிழ் மக்களைப் பலவீனப்படுத்தக் கூடிய நச்சுக் காரணி ஒன்றை உள்நுழைப்பதையிட்டு மக்கள் விழிப்புடன் இருப்பதுடன் தமிழ் தேசியத்தை, இந்தியாவில் திராவிட வாதம், இந்திய தேசிய வாதம் மூலம் சீரழித்தது போன்று ஈழத்திலும் பிரதேசவாதம் தலித்தியவாதம் என்ற சமூகப் பிரிவினைவாதங்களை உள்நுழைத்து சீரழிக்க முனைவதற்கு இடமளிக்கக் கூடாது.

அதுமட்டுமன்றி இந்த தலித்தியவாதத்தை ஈவெ ராமசாமி அடியார்களாக தங்களை இனங்காட்டிக் கொள்ள விரும்பும் சில தமிழீழ தேச விரோத சக்திகள்... ஈழத்தமிழர் மத்தியில் பிரிவினையை விரும்பும் சக்திகள் "தலித்திய உரிமை வேண்டுதல்" என்ற கவர்ச்சிகர தலைப்பின் கீழ் ஈழத்து தமிழ் மக்களுக்குள் சமூகப் பிரிவினைகளை ஆழப்படுத்தி அதனை தங்கள் சுய இலாபத்துக்காகப் பயன்படுத்த முனைகின்றனர்.

தலித்தியம் என்பதன் மூலம் புலம்பெயர்ந்துள்ள எமது எதிர்கால சந்ததிக்குள்ளும் சாதியப் பிரிவினை என்ற நச்சு விதையை ஊன்றிவிட முனைகின்றனர். தமது வெட்டிப் புகழுக்காக ஈ வெ ராமசாமியை தலையில் தூக்கி வைத்து ஆடும் இந்தக் கும்பல்கள் தமிழகத்தில் உள்ளது போன்று ஈழத்திலும் சாதிய அடிப்படையில் மக்களைக் கூறுபோட்டு அந்நிய சக்திகளுக்கும் அவர்களின் தேவைக்கும் ஏற்ப, தமிழ் தேசிய அடிப்படையில் அமைந்த தமிழீழ விடுதலைப் போராட்டத்தை பலவீனப்படுத்த புலம்பெயர் தமிழ் மக்களின் தமிழீழ விடுதலைப் போராட்ட உணர்வை.. ஆதரவுத்தளத்தை கூறுபோட அல்லது பலவீனப்படுத்த வழிவகைகளை செய்ய முற்படுகின்றனர்.

இந்த சக்திகள் தொடர்பில் மக்கள் மிக அவதானமாக இருப்பதுடன், ஈழத்தில் தமிழ் மக்கள் தமிழ் தேசியத்தின் மூலம் பிரதேச சாதி மத சமூக பொருளாதார வேறுபாடுகளுக்கு அப்பால் ஒன்றிணைந்திருப்பதையும் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு தமது பங்களிப்பை தமிழர்கள் என்ற வகையில் தமது தேசத்துக்காக தொடர்ந்து வழங்கி வருவதையும் முழு உலகுக்கும் என்றும் தமது ஒற்றுமையின் மூலம் எடுத்துக்காட்ட முனைய வேண்டும்.

தமிழீழ விடுதலைப்புலிகளை தமிழ் மக்களிடமிருந்து பிரித்துக்காட்டி அவர்களை தனிமைப்படுத்தி தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை அழித்தொழிக்க முனையும் சர்வதேச வல்லாதிக்க சக்திகளும் பிராந்திய வல்லாதிக்க சக்திகளும் சிங்களப் பேரினவாதிகளும் இப்படியான சமூகப் பிரிவினைகளைத் தூண்டும் கும்பல்களை "சமூக உரிமைக் காப்புப் பணி" என்ற வகைக்குள் அடக்கி அதற்கு மனிதாபிமானச் சாயம் பூசி ஆதரவளித்து வருகின்றதை பாரிஸ் தலித்திய மாநாட்டுக்கு பிபிசி தமிழ் அளித்த முக்கியத்துவம் எடுத்துக்காட்டுகிறது.

தமிழ் மக்கள் பெரும் தியாகங்கள் மூலம் கடந்த 3 தசாப்தங்களாக முன்னெடுத்து வரும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முக்கிய கட்டத்தில் இன்று நின்று கொண்டிருக்கும் இச்சூழ்நிலையில் இவ்வகைச் சூழ்ச்சிகளை மதிநுட்பத்தால் புரிந்து கொண்டு இவற்றில் இருந்து தம்மை விடுவித்துக் கொண்டு இந்த போலி வேசக்கார அருவருடிகளின் செயல்கள் தொடர்பில் வழிப்புணர்வுடன் இருந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தை சிதைக்க முனையும் ஒட்டு மொத்த சக்திகளுக்கும் பதிலடி வழங்க தம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

எமது இனத்துக்கான விடுதலையை உணர்ந்த எமக்கு எமது சமூகத்துக்கான உரிமைகள் தொடர்பில் இவர்கள் பாடம் எடுக்க வேண்டிய தேவை இல்லை என்பதை இப்படியான சக்திகளின் செயற்பாடுகளை முற்றாகப் புறக்கணிப்பதன் மூலம் அவர்களுக்கும் உணர்த்தி இவர்களை உலகுக்கும் இதர தேசங்களில் வாழும் தமிழ் மக்களுக்கு சரிவர அடையாளம் காட்ட வேண்டும். தலித்தியம் பேசி தமிழ் மக்களை கூறு போட முனையும் எல்லா சக்திகளுக்கும் இது ஒரு படிப்பினையாக அமைய வேண்டும். அதற்கான கடமை தமிழ் மக்களின் கையில் இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதை உணர்ந்து செயற்படுவீர்களாக.

யாழ் இணையம்.

7 comments:

Anonymous said...

சிந்திக்கத் தூண்டும் நல்ல ஒரு பதிவு.

Anonymous said...

உங்கள் கூற்றுபடி பார்த்தால், சமூகத்தில் இதுவரை ஒரு ஆதிக்க வர்க்கத்தினரால் வஞ்சிக்கப்பட்டு வந்த மக்கள் தங்களது வேதனைகளை வெளிக்காட்டிக்கொள்ள கூடாதா?

அகதிகள் என்கிற முறையில், இவர்களுக்கு இப்போது பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம், தன்னிச்சையாக எங்கும் நடமாடும் சுதந்திரம் கிடைத்திருக்கிற இவ்வேளைகளில் தங்களது சொந்த பிரச்சினைகளுக்கு தாங்களே முடிவுகள் தேடுவது தவறா?

உதாரணத்திற்கு,

பெண்கள் தங்களுக்கு ஆண்களால் நடத்தப்படும் கொடுமைகளுக்கு முடிவு கட்ட எண்ணி, இவர்கள் தாங்களாகவே தங்களது பிரச்சினைகள வெளி உலகுக்கு கொண்டுவந்தால், குடும்ப பாரிம்பரியம் கௌரவம் ஆகியவைகளை உடைத்தெறிகிறார்கள் என சொல்வதா?

ஒரு குடும்பத்தில், வரதட்சினை கொடுமைகளை தாங்க முடியாமல் பெண் ஒருவர் போலீசுக்கு போய் புகார் கொடுத்தால், இவர் தனது குடும்பத்திற்கு துரோகம் செய்கிறார் என கூறுவதா?

இந்தியாவில், அனைத்து சமுதாயத்தாலும் ஏற்றுக்க்கொள்ளப்பட்ட இந்து மத கடவுள் வழிபாடுகளை தமிழ்நாட்டில் திராவிட கழகத்தினர் ஊதாசீனப்படுத்தி அவைகளை அவமரியாதை செய்தும் வருகிறார்கள். இதனால், இவர்கள் இந்தியாவிற்கே துரோகம் செய்கிறார்கள் என கூறுவதா?

இதை எல்லாம் வைத்து பார்க்கும் போது, உண்மைகளை அவைகள் சுடுவதாக இருந்தாலும் நேருக்கு நேர் எதிர்கொண்டு, சுமுகமான தீர்வுகளுக்கு வழி தேடவேண்டும்.

பூனைகள் மாதிரி கண்களை மூடிக்கொண்டு உலகமே இருண்டுவிட்டது போன்ற கபோதி அரசியலை கைவிடவேண்டும்.

தலித் பிரச்சினைகள் இல்லை என்று சொல்வதினால் மட்டும் அவைகள் இல்லாமல் போய்விடாது. இன்றில்லாமல், என்றாவதாக இருந்தாலும் ஒருநாள் கட்டாயம் உண்மைகள் வெளிவந்தே தீரும்.

எதையும் மறைக்க முற்படக்கூடாது.

ஆபத்தில் இருப்பவர்கள் ஆதரவு தேடுவது இயற்கையே. அவர்களை குறை கூறுவது சரியல்ல.

Anonymous said...

தலித்துக்கள் என தங்களை அடையாளப்படுத்தி கொள்ளும் ஈழத்து பின்படுத்தியவர்களை துரோகிகள் என அடையாளப்படுத்தி அவர்களை பூண்டோடும் கூண்டோடும் அழிப்பதற்கான நல்ல ஆரம்பம்.

நடக்கட்டும் நாச வேலைகள்.

இனிதே ஆரம்பமாகட்டும் இன படுகொலைகள்!

:-(

Anonymous said...

ஈழத்து ஆதிக்க வெறியர்களுக்கு சிங்கள மற்றும் இந்திய, பாக்கிஸ்தான அரசாங்களினால் மட்டும் தொந்தரவுகள் என்கிற நிலைகள் தாண்டி இப்போது, தங்களது உறவுகளினாலேயே உள்ளிருந்தே துரோகங்கள் நடந்தேறி வருகின்றன என்பதை நினைத்து அனைத்து தமிழர்களும் ஒரு ஐந்து நிமிடம் கண்ணீர் விடுவோம்!!!

ஹா!ஹா!ஹா!
சிரிப்பு)
(கீழே உழுந்து பிரண்டும் வயிறு வலிக்க சிரிப்பு!!!)

நிறுத்துங்கள் உங்கள் நாடகத்தை, ஆத்திக்க வெறியர்களே!

திரை கிழிந்துவிட்டது. அழுக்கு மூட்டைகளை பண்ணாட்டு மேடைகளில் போட்டு துவைக்க வந்தபோது, உங்கள் அனைத்து சாயங்களும் வெளுத்துவிட்டது.

பொய்யர்களே, வேண்டாம் இந்த வெளிவேசம்!!!

kuruvikal said...

உலகெங்கும் அடக்குமுறைகள் பல வடிவங்களில் இருக்கின்றன. புலம்பெயர் தேசங்களில் உள்ள அடக்குமுறைகளின் வடிவங்களை நீங்கள் உணரமுடியாத படிக்கு அதன் மீது உங்கள் காதல் இருக்கிறது.

காரணம் நீங்கள் உழைக்காமலே அடுத்தவனின் வரியில் வாழ்க்கை நடத்த சுரண்டித்தர அரசுகள் தயாராக இருக்கின்றன.

அதிகம் பேசமுதல் அடக்குமுறைக்கு வரைவிலக்கணம் தேடுங்கள். அதற்கு முதல் தலித்தியம் என்ற போலி உச்சரிப்புகளூடு மனிதர்களைப் பிளவுபடுத்தி இன சுத்திகரிப்புக்கு உதவும் அநாகரிகமான மனித மிலேச்சத்தனத்தை அரங்கேற்றுவதை விட்டுவிடுங்கள்.

சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கான காரணங்கள் என்ன..??!

அதை முதலில் பட்டியற்படுத்துங்கள். அதற்கு தலித்தியம் என்ற பெயர் சூட்டல் அவசியமன்று.

1. பாரம்பரிய தொழில் இருப்பு.

2. கல்வியில் நாட்டமின்மை. இலவசக் கல்வியைக் கூட பயன்படுத்த முடியாத அறிவியல் போக்கு மனிதர்களிடையே..??!

3. பொருளாதார நிலைப் பின்னடைவு.

4. தலித்தியம் என்பது என்னவோ மனிதப் பரம்பரை அலகின் வெளிப்பாடு என்ற நினைவில் வாழுதல்.

5. தாழ்வுமனப்பான்மை.

மூடத்தனமான விளக்கங்களோடு இனத்துக்குள் பிளவுகளைத் தூண்டும் கருத்துக்களை குப்பையில் போட்டுவிட்டு சமூகத்தில் உள்ள பிரச்சனைகளுக்கான சமூகவியல் காரணிகள் என்ன என்று அறிவியல் கொண்டு தேட முனையுங்கள்.

தலித்தியம் கொண்டு உலகில் எந்த வளர்ந்த நாடும் மக்களின் சமூக நிலை வேறுபாடுகளைக் களைய முற்பட்டத்தில்லை. மேற்குலக நாடுகளிலும் வறுமை, கல்வி அறிவில் பிந்தங்கிய நிலை பிரபுத்துவ நிலையால் எழுந்த அடிமை நிலை நீடிப்பின் பிரதிபலிப்புக்கள் என்று பல சமூக நிலை வேறுபாடுகள் உள்ள போதும் அவற்றை தலித்தியம் என்று அடையாளப்படுத்திக் கொண்டு சமூகப் பிரிவினைக்கு வித்திடாமல்.. மக்கள் எல்லோரையும் ஒரே குடையின் கீழ் மனித உரிமைகளின் கீழ் ஒற்றுமைப்படுத்தி சமூக ஒற்றுமை மூலம் தேசத்தின் இருப்பை பலத்தை அதிகரித்து சமூக ஏற்றத்தாழ்வுகளை அகற்ற முனைகின்றனர்.

ஆனால் நீங்களோ.. தலித்தியம் என்பது என்னவோ பரம்பரை அலகால் வந்த மனிதக் குறைபாடு என்பது போல மனிதர்களை மனிதர்களுக்குள் தாழ்த்தி வகைப்படுத்தும் தாழ்வு மனப்பான்மை எனும் மனச்சிக்கலுக்குள் சுழன்று கொண்டு தமிழினத்தின் மனோவலிமையை சிதைக்க நினைப்பதும் அதற்கென கங்கணம் கட்டி நிற்பதும் நவீன உலகில் அங்கீகரிக்க முடியாதது.

அறிவியல் பெருகிவிட்ட இந்த உலகில் அறிவியல் மயமாகிவிட்ட சமூகவியலுக்குள் நுழையுங்கள்.

எனியும் தலித்தியம் சாதியம் பற்றிப் பேசினீனர்கள் உங்களை எல்லாம் மனநோய் மருத்துவ மனைக்கு அனுப்புதலே சிறப்பான செயலாக இருக்கும்.

காரணம் உங்கள் மனங்களுக்குள் ஆழப்பதிந்துள்ள தலித்துக்கள் நாங்கள் என்பது போன்ற தாழ்வுச் சிக்கலில் இருந்து உங்களை விடுவித்து உங்களுக்கு நீங்கள் மனிதர்கள் என்று இனங்காட்ட வேண்டி இருக்கிறது என்பதால்.

நீங்கள் புகலிடத்தில் அனுபவிப்பது மனித உரிமைகளையும் அதற்கான பாதுகாப்புக்களையுமே அன்றி தலித்திய உரிமைகளை அல்ல என்பதை தெளிவாக உணர்ந்து கொள்ள முனையுங்கள். ஐநா சாசனங்களில் தலித்திய உரிமை என்ற ஒன்று எங்கும் கிடையாது. மனித உரிமைகளை அனுபவிக்கும் நீங்கள் மனிதர்களே அன்றி தலித்துக்கள் என்று இனங்காணப்படவில்லை உலகில் எங்கும். யாரும் எந்த சாதியின் பெயராலும் உலகில் மனித உரிமைகளை அனுபவிக்கவில்லை. அப்படி அனுபவிக்கவும் முடியாது.

நன்றி அனோனிமஸ் உங்கள் கருத்தைக் கொண்டு உங்கள் உளப்பான்மையை விளங்க வைத்திருக்கிறீர்கள்.

இந்த ஆக்கம் யாழ் இணையத்தில் வந்திருப்பினும் எனது கருத்து நிலையை ஒட்டியமைந்திருப்பதால் எனது கருத்தையும் பதிந்தேன்.

நன்றிகள்.

Anonymous said...

//சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கான காரணங்கள் என்ன..??!

அதை முதலில் பட்டியற்படுத்துங்கள். அதற்கு தமிழன் என்ற பெயர் சூட்டல் அவசியமன்று.

1. பாரம்பரிய தொழில் இருப்பு.

2. கல்வியில் நாட்டமின்மை. இலவசக் கல்வியைக் கூட பயன்படுத்த முடியாத அறிவியல் போக்கு மனிதர்களிடையே..??!

3. பொருளாதார நிலைப் பின்னடைவு.

4. தமிழினம் என்பது என்னவோ மனிதப் பரம்பரை அலகின் வெளிப்பாடு என்ற நினைவில் வாழுதல்.

5. தாழ்வுமனப்பான்மை.//

இவை அத்தனையும் சிங்களவர்கள் உங்களை பார்த்து சொன்னால், நீங்கள் என்ன சொல்வீர்கள்?

மனித குலங்களில் காலம் காலமாக இதுபோன்ற ஏற்றத் தாழ்வுகள், போராட்டங்கள், அடிமைத்தனங்கள், அடாவடி செயல்கள், ஆதிக்க சக்திகளின் வெறியாட்டங்கள், நசுக்கப்பட்டவர்களின் அவல நிலை வாழ்வுகள் போன்ற பலவகையான போராட்டங்கள் இருந்ததும், இருப்பதும் இனியும் வர இருக்கப்போவதும் இயற்கையே. இதை மறைக்க முற்படுவது சுத்தமான மடத்தனம். பிரச்சினைகளை மறைக்க முற்படுவது அவைகளை வளர்க்க வசதி செய்வதாகும்.

kuruvikal said...

அனோனிமஸ் அவர்களே ஒரு இனத்துவ அடையாளமிக்க மக்கள் இனத்துக்கும் அடையாளங்கற்ற போலியான சமூகப்பிரிவினைக்கும் இடையேயுள்ள வேறுபாடு புரியாத நீங்கள் எல்லாம் இணையத்தில் அடுத்தவரை நோக்கி மடத்தனம் பேச அருகதை அற்றவர்கள். கொஞ்சம் பருந்து சிந்திக்க முயலுங்கள். உங்களின் தாழ்வுச் சிக்கல்கள் விடைபெறும் போது தலித்திய கோசத்தின் போலித்தன்மை உணர்வீர்கள்.