Thursday, October 11, 2007

"நிர்வாணம்" என்பது எப்போதுமே ஆபாசமா..??!

ஆபாசம் என்றால் என்ன..??!

நிர்வாணம் என்றால் என்ன..??!

ஆபாசம் என்பது மனிதனில் கீழ்த்தரப் பாலுணர்வை தூண்டுதல் என்பதற்குள் மட்டும் அடங்கி நிற்கிறதா.. அல்லது மனித சிந்தனையில் மனிதனுக்கு உபயோகமற்ற சிந்தனைத் தூண்டலை ஆபாசம் என்பதுவா சரியானது..??!

ஆபாசம் என்பதன்.. கருதுநிலை சூழ்நிலைக்கு, சமூகங்களுக்கு, கலாசார மட்டங்களுக்கு மற்றும் நாகரிகப் பண்புகளுக்கு ஏற்ப மனிதனால் வரையறுத்துக் காட்டப்பட்ட அளவுகளில் மாறுபடுகின்றது என்பதை உணர்கிறோமா..??!

ஆபாசம் என்று வருகின்ற போது நிர்வாணம் என்பதும் ஓடி வந்துவிடுகிறது. நிர்வாணம் என்றால் என்ன.??! அது எப்படி எப்போ ஆபாசம் என்றாகிறது..??!

நிர்வாணம் என்ற பதம் உடலை மையப்படுத்தி அதிகம் பாவிக்கப்படினும் ஆபாசம் என்று வருகின்ற போது உடல் சார்ந்த நிர்வாணமே கருத்தில் அதிகம் கொள்ளப்படுகிறது.

ஆனால் நிர்வாணம் என்ற சொல்லுருவாக்கத்தின் பின்னணியில் உள்ள கருத்தாழம் சரி வர நோக்கப்படுகிறதா..??!

உடலை மூடி வைத்துவிட்டு திறந்து விடுதல் ஒரு வகை நிர்வாணமாகக் காட்டப்படுகிறது. சில ஞானிகளோ அறிவை சூழ்ந்துள்ள அறியாமையை நீக்குதல் நிர்வாணம் எங்கின்றனர். இன்னும் சிலரோ.. துறவின் எல்லை அல்லது தியானத்தின் எல்லை அல்லது உச்ச ஞானத்தின் நிலையடைதல் என்பதை நிர்வாணம் என்பதாகப் பொருள் கொள்கின்றனர். உதாரணம் "புத்தர் பரிநிர்வாணம் அடைந்தார்" இதில் புத்தன் ஆடை களைந்தான் என்பது அர்த்தமா அல்லது அவன் அறியாமை களைந்து வாழ்வின் முழு அர்த்தத்தையும் புரிந்து மெஞ்ஞான அறிவின் உச்சத்தை அடைந்தான் என்பதா சரியானது..??!

ஆபாசம்.. என்று வருகின்ற போது கூட ஆடைகளற்ற உடல் ஆபாசம் என்பது எப்போதும் சரியானதா..???!

உடலை ஆடைகளால் மூடுவதும் மனிதன்.. திறப்பதும் மனிதன்.. அப்படி இருக்க இந்த ஆபாசம்.. நிர்வாணம் என்பவை எப்படி உடல் சார்ந்த சிந்தனைகளாக எழுகின்றன..??! எழுந்தன...??!

ஆபாசம் என்பதும் நிர்வாணம் என்பதும் சிந்தனை சார்ந்து உள்ள ஒன்றாகவே நான் கருதுகின்றேன். எமது சிந்தனையின் தன்மை போக்கு தேவை என்பன தான் ஆபாசம் என்பதையும் நிர்வாணம் என்பதையும் நிர்ணயிக்கிறது.

ஒரு பெண் அரைகுறையாக ஆடை அணிகிறாள் என்பதில் ஆபாசத்தை வரையறுப்பது மனிதனின் சிந்தனையே அன்றி அவளது ஆடைகள் அல்ல. அந்த அரைகுறை என்பதை விலக்கிவிட்டு உடல் என்ற ஒன்று சார்ந்து எமது சிந்தனை சர்வ சாதாரணமாக எழும் எனின் அதில் ஆபாசம் புலப்படாது. எந்த மனிதனுக்காவது தனது உடலைத் தான் பார்க்கும் போது ஆபாசம் தெரிகிறதா..??! அதேன் பிறர் உடலை பார்க்கும் போது அல்லது பிறர் தன்னுடலை பார்க்கின்றனர் எனும் போது மட்டும் ஆபாசம் நிர்வாணம் என்ற சிந்தனைகள் வெளிப்பட ஆரம்பிக்கின்றன.

ஆபாசம் என்ற இந்த சொல்லாடலும் அதன் பின்னால் உருவாகும் கருத்துருவாக்கமும்.. மனிதனின் சிந்தனை செயல் என்பனவற்றின் போக்கை தீர்மானிப்பதால் இதை நான் ஒரு பேசும் பொருளாக்கி இங்கு தருகின்றேன்.

இன்னொன்று ஆபாசம் என்பது மனிதனின் அந்தரங்க உறுப்புகள் சார்ந்து எழுவது.

பாலுணர்வு என்பது பிரதானமாக மூன்று வகையில் தூண்டப்படும். ஒன்று பார்வை மூலம். இரண்டு தொடுகை மூலம். மூன்று உடல் இரசாயனம் மூலம்.

பாலுணர்வுத் தூண்டல் என்பதின் பின்னணியில் தான் ஆபாசம் வரையறுக்கப்படுகிறதா..??! நிர்வாணம் என்பது வரையறுக்கப்படுகிறதா..??! அப்படி என்றால் பாலுணர்வுத் தூண்டலுக்கு ஆளாகாத நிர்வாணம் என்பது ஆபாசம் இல்லை என்றல்லவா வர வேண்டும்.. அப்படித்தானே நோக்க வேண்டும்.

பாலுணர்வுத் தூண்டல் ஆபாசம் நிர்வாணம் அரை நிர்வாணம் என்பதெல்லாம் ஏன் பெண்களை அவர்களின் உடற்கூறுகளை சார்ந்து இக்கருத்துருவாக்கங்கள் எழுகின்றன..??! பெண்ணை ஒரு மனிதன் என்று நிர்வாண நிலையில் வைத்து நோக்கும் போது எப்போதும் ஆபாசம் தோன்றுமா..???! பாலுணர்வு தூண்டல் மட்டும் தான் தோன்றுமா..??! அப்படிப் பாலுணர்வு தோன்றுதல் கூட ஆபாசம் என்றாகுமா..??! பாலுணர்வுத் தூண்டல் அடுத்தவரை பாதிக்காதவரை.. அது எப்படி ஆபத்தானது என்றாகும்..??!

ஆபாசம் என்பது பெண்களுக்குள் மட்டும் தானா நிலைத்திருக்கிறது.. பெண்ணின் துணைப்பால் உறுப்புகள் தானா ஆபாசமானவை..??!

உயிரியலின் படி துணைப்பால் உறுப்புகள் உணர்ச்சித் தூண்டல் உள்ளவை என்பதை ஏற்றுக் கொள்கிறேம். ஆனால் ஆபாசம்.. நிர்வாணம் என்பது அவற்றுள் அடக்கப்படவில்லை.

ஆபாசம் நிர்வாணம் என்பதெல்லாம் எமக்கு காட்டப்படும் வடிவத்தில் தான் பாலுணர்வை தூண்ட செய்யப்படுகின்றதே தவிர.. நிர்வாணம் ஆபாசம் என்பவை இயல்பான வெளிப்பாட்டின் மாறுபட்ட மனிதக் கருத்துருவாக்கத்தின் தாக்கம் என்றே நான் கருதுகின்றேன். மனிதன் வரையறுத்துக் கொண்டவற்றால் தான் உடல் ஆபாசமானதே தவிர உடல் ஆபசத்தோடு தோன்றவில்லை. இயற்கை ஆபசத்தோடு தோன்றவில்லை. நிர்வாணம் என்பது மனித கருத்துருவாக்கம் என்பதுதான் யதார்த்தம். அதை சமூகத்தில் பல்வேறு வரைவிலக்கணங்களோடு பல் வேறு சூழலுக்கும் ஏற்ப பாவிக்கின்றனர். அதுவே மனித சிந்தனைக்கு தகுதியிடலையும் செய்யப் பாவிக்கப்படுகிறது.

ஆக ஆபாசம் என்பது நிர்வாணம் என்பது.. எப்போ குறை.. குற்றமாகிறது.. ஒரு மனிதனின் சிந்தனைக்கு அது காட்டப்பட்ட பரிமானத்தில் தான். ஒவ்வொருவருக்குள்ளும் ஆபாசம் என்ற கருத்துருவாக்கத்தின் பரிமானம் மாறுபட இது வாய்ப்பளிக்கிறதல்லவா. அப்படி இருக்கும் நிலையில் எது குற்றமற்ற நிர்வாணம் எது குற்றமற்ற ஆபாசம்.. எது குற்றமான ஆபாசம்.. குற்றமற்ற நிர்வாணம் என்று காட்டுதலுக்கும் தேவை உண்டல்லவா..??!

அண்மையில் ஒரு பிரதான தமிழ் இணையத்தளம் ஒன்றில் "புதுமைப் பெண்" என்ற தலைப்பின் கீழ் இந்தப் படம் இணைக்கப்பட்டிருந்தது.



ஆதாரம்: இங்கு அழுத்தி பிரதான இணைப்பைப் பார்க்கவும்.

இதைப் பார்த்த எனது நண்பன் சொன்னான் இதென்ன ஆபாசமா இருக்குது. இப்படி இருக்கிறதா புதுமைத்தனம். இதில் என்ன புதுமைத்தனம் என்று..??! ஆபாசமாகத் தோன்றல் புதுமைத்தனமா..??! என்று பதிலுக்கு வினவினான்.

எனக்கும் அது நியாயமான கேள்வியாகத்தான் தோன்றியது. ஆடைகளற்ற நிலை என்பது புதுமையல்ல. காரணம் ஆதி மனிதனும் ஆடைகளின்றியே இருந்தான். ஆடைகளால் உடலை மூடுதல் என்ற நிலை தோன்றிய பின்னர் அல்லது அப்படி ஒரு சிந்தனை உருவாக்கத்தை மனிதன் உயர்ந்தது என்று வரையறுத்துக் கொண்டதன் பின்னர் ஆடைகளைக் களைந்து உடலை இயற்கைத்தனமாகக் காட்டல் என்பது புதுமை என்று எண்ணுகின்றனரோ.. அங்கும் மனிதன், தான் பழைய நிலைக்கு மீளுதலை புதிய சிந்தனையாகக் காட்டுறான் அல்லது காட்ட முயல்கின்றான். இயற்கை காட்டவில்லை. அது குறுகிய காலத்தில் பெரிய மாற்றத்தைக் காட்டவில்லை..! என்று விளக்கமளித்தேன்.

அதன் போது எழுந்த எனது இந்த சந்தேகம் இன்னும் இருக்கவே செய்கிறது. அவனில் இப்படத்தை பார்த்ததும் தோன்றியுள்ள கருத்துருவாக்கம் என்னில் இல்லை. நான் இதை ஆபாசமாக நோக்கவில்லை. ஆபாசம் என்று சொல்வதிலும் நிர்வாணம் என்று வரையறுக்கப்பட்ட ஒரு வடிவத்தில் அது உள்ளதை ஏற்றுக் கொள்கிறேன் என்றேன். அவன் இல்லை அப்படி இருக்காது நீ உண்மையை சொல்ல மறுக்கிறாய் எங்கிறான். இங்குதான் தோன்றியது இந்த சொல்லாடல்களுக்குள் பொதிந்திருக்கும் மனித இயற்றுகைகளின் செல்வாக்கும் மனித சிந்தனையை அவை செய்யும் ஆதிக்கமும் என்பதாகக் கருதி உங்கள் முன் இவ்விடயத்தைக் கொண்டு வருகின்றேன்.

ஆனால் பெண்கள் சார்ந்துதான் ஆபாசம் நிர்வாணம் என்ற சிந்தனையோட்டம் இருக்கிறது என்ற நிலைப்பாட்டை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. அப்படிக் காட்டுவதில் புதுமைத்தனமும் இல்லை.

இவ்வோவியம் தொடர்பில் உள்ள விமர்சனங்களையும் சேர்த்து உங்கள் கருத்துக்களை முன் வைக்கலாம்.

இவை தொடர்பில் உங்கள் பார்வைகள் என்ன.. சிந்தனையோட்டங்கள் என்ன..??!

குறிப்பு: 1. தயவுசெய்து குறித்த படத்தை கீழ்த்தரமான பாலியல் கண்ணோடு நோக்காதீர்கள். அது ஒரு ஓவியம். ஓவியனின் சிந்தனைக்கு உருக்கொடுத்த நிகழ்வு. மதிப்பளியுங்கள். அதில் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்திருக்கும்.

2. உங்கள் சிந்தனையில் எழும் வளமான கருத்துக்களை மட்டும் சொல்லுங்கள். நாகரிகமற்ற சொல்லாடல்களைத் தவிருங்கள்.

2 comments:

Anonymous said...

ennasshu neengka eppadi ippai anningkal. nalla kelvithan. vidai than illai.

kuruvikal said...

நியாயமான சந்தேகம் தான். ஆனா..