Tuesday, October 09, 2007

பெரியார் ஒரு தமிழின விரோதி - ஆதாரங்களுக்கு ஆதாரம்

தமிழ் படித்தால் நடைப்பிணமாய் இருக்கலாம் - தமிழ் வெறுப்பு

...தமிழ் மக்கள் என்னும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் என்னும் தமிழானது, முன்னேற்றம் என்னும் உடல் தேறுவதற்கோ வளர்வதற்கோ பயன்பட்டு இருக்கின்றதா? பயன்படுமா? "தாய்ப்பால் சிறந்தது' என்பதில் தாய்ப்பாலில் சக்தியும், சத்தும் இருந்தால்தான் அது சிறந்ததாகும். இங்கு தமிழ் என்னும் தாயே சத்தற்றவள் என்பதோடு, நோயாளியாகவும் இருக்கும்போது அந்தப் பாலைக் குடிக்கும் பிள்ளை உருப்படியாக முடியுமா? தாய்க்கு நல்ல உணவு இருந்தால்தானே அவளுக்கு பாலும் ஊறும்; அந்தப் பாலுக்கும் சக்தி இருக்கும்! தமிழில் நல்ல உணவு எங்கே இருக்கிறது?

இப்படிப்பட்ட இந்தத் தாய்ப் பாலைக் குடித்து வளர்ந்த பிள்ளைகள், இந்நாட்டிலேயே நடைப்பிணமாய் இருப்பதைத் தவிர, அதுவும் மற்றவன் கை காலில் நடப்பதைத் தவிர, உழைப்புக்கு – காரியத்துக்குப் பயன்படும்படியான, தன் காலால் தாராளமாய் நடக்கும்படியான பிள்ளை ஒற்றைப் பிள்ளை தமிழ்நாட்டில் இருக்கின்றதா என்பதை அன்பர்கள் காட்டட்டுமே என்றுதான் பரிவோடு கேட்கிறேன்.

இன்றைய தினம் கூட மேற்கண்ட தமிழ்த் தாயின் பாலை நேரே அருந்தி வளர்ந்த பிள்ளைகள், இங்கிலீஷ் புட்டிப் பாலை அருந்தி இருப்பார்களேயானால், இந்த அன்பர்கள் உட்பட எவ்வளவோ சக்தியும், திறமையும் உடையவர்களாக ஆகி, இவர்கள் வாழ்க்கை நிலையே வேறாக, அதாவது அவர்கள் நல்ல பயன் அடைபவர்களாக ஆகி இருப்பார்கள் என்பதோடு, மற்றவர்களுக்கும் பயன்படும்படியான நல்ல உரம் உள்ள உழைப்பாளிகளாகி இருப்பார்கள் என்று உறுதியோடு கூறுகிறேன்.

பெரியார் "தாய்ப் பால் பைத்தியம்' என்ற நூலிலிருந்து.
-----------------

பெண் விடுதலை - திருமணத்தை அடியொற்றி வந்த பெண் விடுதலை

...பெண்கள், பிள்ளைபெறும் தொல்லையிலிருந்து விடுதலையாக வேண்டும் என்கிற மார்க்கத்தைத் தவிர, வேறு எந்த வகையிலும் அவர்களுக்கு விடுதலை இல்லை என்கின்ற முடிவு நமக்கு கல்லுப் போன்ற உறுதியுடையதாய் இருக்கிறது.

தவிர, "பெண்கள் பிள்ளை பெறுவதை நிறுத்தி விட்டால், உலகம் விருத்தியாகாது; மானிட வர்க்கம் விருத்தியாகாது' என்று தர்ம நியாயம் பேச சிலர் வருவார்கள். உலகம் விருத்தியாகா விட்டால் பெண்களுக்கு என்ன நஷ்டம்? மானிடவர்க்கம் பெருகா விட்டால் பெண்களுக்கு என்ன ஆபத்து ஏற்பட்டு விடக்கூடும்? அல்லது இந்த தர்ம நியாயம் பேசுபவர்களுக்குத்தான் என்ன நஷ்டம் உண்டாகி விடும் என்பது நமக்குப் புரியவில்லை.

"குடியரசு' (12.8.28)
-----------

வெளிநாட்டான் அறிவு இனிப்பு; மொழி கசப்பா ? - அறிவியலையும் ஆங்கிலத்தையும் கலந்தடித்து ஆங்கிலத்தை முதன்மைப்படுத்தல்

சர்வத்தையும் விஞ்ஞான மயமாக மேல்நாட்டு முறைகளைக் கொண்டு ஆக்கி, சர்வத்திலும் மேல்நாட்டானை (புதிய முறைகளை)ப் பின்பற்றி, வளர்ச்சி அடையவே முயற்சிக்கிறோம். திட்டம் போடுகிறோம். இந்தக் காரியங்களுக்கு தமிழர் முத்தமிழர் சங்கங்களையே நம்பி என்ன காரியத்திற்கு, ஆங்கிலக் கருத்தோ,
இங்கிலீஷ் சொல்லோ, ஆங்கிலேயனிடம் பயிற்சியோ இல்லாமல் இங்கிலீஷை பகிஷ்கரித்து விட்டு என்ன சாதித்துக் கொள்ள முடியும்?
----------

பலரும் அறிந்த சொல்லைப் புறக்கணிப்பானேன் ? - தமிழ் மொழி கலைச் சொற்களை கண்டறியத் தூண்டாது ஆங்கிலச் சொற் பாவனையை தமிழில் திணித்தல்.

சாதாரணமாக பிரயாணத்திற்குப் பயன்படும் ரயில், கார், லாரி, பஸ், சைக்கிள் என்ற பெயர்களை எதற்காக மாற்ற வேண்டும்? இந்தியாவில் உள்ள பல நூற்றுக்கணக்கான மொழி பேசும் மக்களும், இந்தப் பெயர்களை அப்படியேதான் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

பெரியாரின் கருத்துகள், "அறிவு விருந்து' என்ற நூலிலிருந்து.
------------

தொல்காப்பியன் மாபெரும் துரோகி தமிழ் இலக்கண கர்த்தாக்களில் ஒருவரான தொல்காப்பியர் மீதான தமிழ் இலக்கண வரம்புக்கு அவசியமில்லாத வசைபாடல்.

தொல்காப்பியன் ஆரியக் கூலி. ஆரிய தர்மத்தையே தமிழ் இலக்கணமாகச் செய்து விட்ட மாபெரும் துரோகி. திருவள்ளுவன் அக்காலத்திற்கு ஏற்ற வகையில் ஆரிய கருத்துக்கு ஆதரவு கொடுக்கும் வகையில், பகுத்தறிவைப் பற்றி கவலைப்படாமல் நீதி கூறும் வகையில், தனது மத உணர்ச்சியோடு ஏதோ கூறிச் சென்றார்.
-------------

வேறு மொழி ஏற்பதால் கேடு என்ன? - பிறமொழித் திணிப்பு.

தமிழை ஒதுக்கி விடுவதால் உனக்கு நட்டம் என்ன? வேறு மொழியை ஏற்றுக்
கொள்ளுவதால் உனக்குப் பாதகம் என்ன? தமிழிலிருக்கும் பெருமை என்ன? நான் சொல்லும் ஆங்கிலத்தில் இருக்கும் சிறுமை என்ன? நமது நாட்டுக்கு கமால் பாட்சா ஆட்சி போன்ற ஒரு வீரனும் யோக்கியனுமான ஒருவன் ஆட்சி இல்லை என்பதால், பல முண்டங்கள் பல விதமாய் பேசி முடிக்கிறதே அல்லாமல், இன்று தமிழைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் யாருக்கு என்ன வந்தது என்று கேட்கிறேன்.
-------------

தமிழ் காட்டுமிராண்டி பாஷை - மொழியின் தொன்மையை வைத்தே அதைப் பழித்தல். அப்ப உலகில் உள்ள பழைய மொழிகள் எல்லாம்.. மனிதர்களின் பகுத்தறிவின் விளைவில்லையா..??! வெறும் காட்டுக் கூச்சலா..??!

இந்த தமிழ் மொழியானது காட்டுமிராண்டி மொழி என்று நான் ஏன் சொல்கிறேன்? எதனால் சொல்கிறேன்? என்று இன்று கோபித்துக் கொள்ளும் யோக்கியர்கள் ஒருவர் கூட சிந்தித்துப் பேசுவதில்லை. "வாய் இருக்கிறது எதையாவது பேசி வயிறை வளர்ப்போம்' என்பதைத் தவிர, அறிவையோ, மானத்தையோ, ஒழுக்கத்தையோ பற்றி சிறிது கூட சிந்திக்காமலே பேசி வருகிறார்கள்.

இப்படிப்பட்ட இவர்கள் போக்குப்படியே சிந்தித்தாலும், "தமிழ் மொழி 3000 - 4000 ஆண்டுகளுக்கு முந்தி ஏற்பட்ட மொழி' என்பதை, தமிழின் பெருமைக்கு ஒரு சாதனமாய்க் கொண்டு பேசுகிறார்கள். நானும் தமிழ் காட்டு மிராண்டி மொழி என்பதற்கு அதைத் தானே முக்கிய காரணமாய்ச் சொல்கிறேன். அன்று இருந்த மக்களின் நிலை என்ன? அவன் சிவனாகட்டும், அகஸ்தியனாகட்டும், பாணிணியாகட்டும், மற்றும் எவன்தான் ஆகட்டும், இவன்களைப் பற்றி தெரிந்து கொள்ள உனக்கு புத்தியில்லா விட்டால், நீ தமிழைப் பற்றி பேசும் தகுதி உடையவனாவாயா?
------------

ஒரே புருஷன் என்ற கட்டாயம் கூடாது - ஒருவனுக்கு ஒருத்தி என்ற எண்ணக் கோட்பாட்டை எதிர்த்து ஆணும் பெண்ணும் விலங்குகள் போல கலவி செய்து சமூகம் உறவுகள் என்ற நிலையறுந்து வாழும் நிலையைத் தூண்டல்.

...இந்தக் காதல் காரணத்தினாலேயே ஒரு புருஷன் ஒரே மனைவியுடனும், ஒரு மனைவி, ஒரே புருஷனுடனும் மாத்திரம் இருக்க வேண்டியதென்றும் கற்பித்து, அந்தப்படி கட்டாயப்படுத்தியும் வரப்படுகிறது. இதன் பலாபலன் எப்படியிருந்தாலும் இந்தப்படி சொல்கின்றவர்களை எல்லாம் உலகனுபவமும், மக்கள் தன்மையின் அனுபவ ஞானம் இல்லாதவர்கள் என்றோ, அல்லது இயற்கைத் தன்மையையும் உண்மையையும் அறியாதவர்கள் என்றோ, அல்லது உண்மை யறிந்தும் வேறு ஏதாவதொரு காரியத்திற்காக வேண்டி, வேண்டுமென்றே மறைக்கின்றவர்கள் என்றோதான் கருத வேண்டியிருக்கிறது.

...இவையெல்லாம் ஒரு மனிதன் தனக்கு இஷ்டமான ஒரு ஓட்டலில் சாப்பிடுவது போலவும், தனக்குப் பிடித்த பலகாரக் கடையில் பலகாரம் வாங்குவது போலவும் அவனுடைய தனி இஷ்டத்தையும், மனோபாவத்தையும், திருப்தியையும் மாத்திரமே சேர்ந்ததென்றும், இவற்றுள் மற்றவர்கள் பிரவேசிப்பது அதிகப்பிரசங்கித்தனமும், அனாவசியமாய் ஆதிக்கம் செலுத்துவதுமாகும் என்றுதான் சொல்ல வேண்டும்.
-----------

எல்லாமே தமிழ்தான் ! - தமிழின் தனித்துவத்தை பிறமொழிகளோடு தமிழை கலப்படைய செய்து அழிக்கும் கருத்து. பிறமொழிக்காரர்களை தமிழுக்கு எதிராக தூண்டி விடுதல்.

தமிழன், தெலுங்கன், கன்னடியன், மலையாளி இவர்கள் பேசுவதெல்லாம் தமிழ்தான். இவர்கள் பேசுவது வெவ்வேறு மொழியென்று கூறுபவன் தமிழ் மகனல்லன்; தமிழை அறியாதவன்; ஆரியத்திற்குச் சோரம் போனவன். நம்மைக் காட்டிக் கொடுத்து ஆரிய ஆதிக்கத்திற்கு ஆக்கந்தேட முயற்சிப்பவன்.

- "மொழியாராச்சி' நூலிலிருந்து
------------

திருக்குறளைக் கண்டிக்கிறேன் ! - உலகப் பொதுமறையே தமிழில் இருந்ததற்காக குற்றமாக்கப்படுகிறது. அதன் உட்பொருள் அறியாத முட்டாளா ஈ வெ ராமசாமி.

...குழந்தைகள் எல்லாம் வீட்டிலேயே இங்கிலீஷில் பேச வேணும். அது நல்ல நாகரீகத்தையும் கொண்டு வரது. ஏன் "குறளை' எடுத்துக்குங்க. நான் மட்டும்தான் குறளைக் கண்டிக்கிறேன். குறளோடு நின்னுட்டா வளர்ச்சியே குன்றி விடுமேன்னுதான். குறள் இரண்டாயிரம் வருஷத்துக்கு முந்தினது. பெண்ணை ஆணுக்கு அடிமையாக்கி விட்டது.

- பெரியார் பேட்டியிலிருந்து
------------

தேர்தலுக்காக ! - திராவிட நாட்டை வலியுறுத்தும் வகையில் பேசல்.மா பொ சி போன்றவர்கள் தனித் தமிழ்நாட்டை வேண்டினர். அண்ணாவும் அக்கருத்துக்களை அப்போது ஏற்றுக்கொண்டவர். அவர் ஈ வெ ராமசாமியில் திராவிடக் கொள்கையின் பாதிப்பால் தான் திராவிட நாடாக்கிக் கேட்டாரா அல்லது பிறமொழி மக்களை கொண்டிருக்கும் தமிழக நிலப்பரப்பை தமிழகத்தோடே தக்க வைக்கக் கேட்டாரா என்பது முக்கியம். ஆனால் ஈ வெ ராமசாமிக்கு தனித் தமிழ்நாடு என்று பேசிய மா பொ சி போன்றவர்கள் கடும் எதிரிகளாகத் தெரிந்தனர். அவர்களை ராமசாமி திட்டித் திரிந்தார்.

காங்கிரஸ் ஆட்சி பலத்தால், திராவிட நாடு பிரிவினை கேட்பவர்கள் தேர்தலுக்கு நிற்க முடியாது' என்று விதி செய்து கொண்டவுடன், தி.மு.க. "நாங்கள் திராவிட நாடு பிரச்சனையை விட்டு விட்டோம்' என்று சொல்லி, தேர்தலுக்கு நின்று வெற்றி பெற்று இன்று ஆட்சிக்கும் வந்து விட்டார்கள். தேர்தலுக்கு அது ஒரு தடைப் பிரச்சனையாக ஆகி விட்டதால், அவர்கள் அதைப் பற்றி பேச்சு மூச்சு கூட விடக் கூடாத நிலையில் இருக்கிறார்கள். மத்திய அரசாங்கம் காங்கிரஸார் கையில் இருப்பதால், அவர்களுக்கு பயந்து கொண்டு அடிக்கடி தி.மு.க.வினர் காலாகாலம் பார்க்காமல் "நாங்கள் திராவிட நாடு பிரச்சனையை கைவிட்டு விட்டோம்; விட்டு விட்டோம்; விட்டே விட்டோம்' என்று சொல்ல வேண்டிய அவசியத்திற்கு வந்து விட்டார்கள்.

- "விடுதலை' (30.3.67)
---------------

11.4.1947 தேதியிட்ட விடுதலையில் ஈவேரா எழுதியது: - தமிழரசு, தமிழாட்சி தமிழ்மாகாணம் என்ற எதனையும் தமிழர்களுக்கு அங்கீகரிக்காத நிலை. ஆனால் திராவிட நாட்டில் தமிழர்கள் திராவிடராக வாழ வேண்டும் இந்திய தேசியத்தோடு இணையந்திருக்கக் கூடாது என்ற ஈ வெ ராவின் முரண்பாடான நிலைப்பாடு. தமிழர்கள் தங்கள் தமிழ் தேசிய அடையாளத்தோடு மிளிரக் கூடாது. ஆனால் திராவிட அடையாளத்தோடு கன்னட சகோதர்களை அண்டி வாழலாம் என்ற திராவிட ஆதிக்கத்தை தமிழர்கள் மீது திணித்தல்.

'தமிழ்நாட்டைத் தனியாகப் பிரிக்க வேண்டும் என்பதும், தமிழரசு, தமிழர்ஆட்சி, தமிழ் மாகாணம் என்றும் பேசப்படுவனயெல்லாம் நம்முடைய சக்தியைக் குலைப்பதற்காகவும், குறைப்பதற்காகவும் செய்யப் படுகின்ற காரியங்கள் என்பதை நீங்கள் உணர வேண்டும்.
-------------

அண்ணாதுரை பற்றி பெரியார் ! - அண்ணா பற்றி.

அண்ணாதுரை ஏன் போனார்? திராவிடர் கழகத்தில் இருந்தால் பணம் சம்பாதிக்க முடியாது; பெரிய நிலைக்கு வர முடியாது என்று கருதினார். வெளியேறினார். சௌக்கியமாக பணம் சம்பாதித்துக் கொண்டு வாழ்கிறார். அதைப் பார்த்து ஆத்திரப்பட்டுத்தானே, நாமும் பணம் சம்பாதிக்க வேண்டும்; எத்தனை நாளைக்கு இப்படியே இருப்பது என்று கருதித்தானே, இன்றைய துரோகிகளும் வெளியேறுகின்றார்கள்?
---------------

கன்னடக்காரன் ! - தன்னைக் கன்னடன் என்று பறைசாற்றல். தமிழர்கள் மத்தியில் தமிழைப் பற்றியும் தமிழரைப் பற்றியும் குறை சொன்னபடி.. தன்னை கன்னடன் என்று இனங்காட்டி மொழிதல்

ஏன் என்னையே தமிழன் இல்லேன்னு சொல்றாங்களே. என் தாய்மொழி கன்னடம் என்பதாலே சொல்றாங்க. பெரும்பாலானவங்க என்னை தெலுங்கர் - நாயுடு என்றே நினைக்கிறாங்க. நான் கன்னடக்காரன்.
---------------
ஹிந்தி இருக்கட்டும் - ஹிந்தியின் இருப்பைக் காத்தல்.

இந்தி வேண்டவே வேண்டாம் என்பதல்ல எங்கள் கொள்கை; அதைக் கட்டாயப்படுத்தக் கூடாது என்று நாங்கள் சொல்லுகிறோம்... சில காரியத்திற்காக இந்தியை கட்டாயமாக்க வேண்டுமானாலும் கட்டாயமாக்குங்கள்; ஆனால் குழந்தைகளுக்கு வேண்டாம். பெரியவர்களுக்கு, கல்லூரி மாணவர்களுக்கு வேண்டுமானால் இருக்கட்டும் என்றுதான் நாங்கள் கூறுகிறோம்.

- "விடுதலை' (7.10.48)
--------------

முட்டாள்தனம் ! - தமிழ் தேசியம் போன்ற கொள்கைகளுக்கு எதிராக தாய் மொழி.. தாய் நிலம் என்பதை முட்டாள் என்பது.

இந்த அதிசய காலத்தில் "எனது தாய்மொழி, எனது தாய்நாடு இதற்காக எனது உயிரை விடுவேன்' என்று முட்டாள் தனமாகப் பிடிவாதம் பிடித்தால், நாம் எப்போது முன்னேறுவது? உலகம் நாளுக்கு நாள் நமக்கு நெருக்கமாக வந்து கொண்டிருப்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா?

"விடுதலை' (14.11.1972)
--------------

தொடரும்.......

3 comments:

Anonymous said...

இன்னும் ஆதாரங்களைத் தொகுத்துத் தாருங்கள். ராமசாமியின் இரட்டை வேடம் அம்பலமாகட்டும்.

Anonymous said...

adai kizava unakku enna thakuthi irukku thamilai pattri pesa

nalla pathivu.

Thamizhan said...

முதலில் ஆரிய பார்ப்பான் என்று எழுது.என்ன பிராமணன், அதன் அர்த்தம் தெரியுமா?
நீ, சூத்திரன் என்று ஒத்துக் கொள்.
தமிழ் வளர்ச்சிக்கு என்ன செய்துள்ளீர்கள்?
செத்துப் போனத் தமிழை, தமிழில் மூன்றெழுத்துத் தவிர மீதியெல்லாம் சமச்கிருதத்தில் இருந்து வந்தது என்பதைத் "தமிழறிஞர்களே" ஒத்துக் கொள்ளும் அளவிற்கு மூளை மழுங்கியிருந்ததைப் போக்கியது யார்.

பார்ப்பன அடிமைத் தனத்திலிருந்து வெளியே வந்து தமிழுக்கு உண்மையான் தொண்டு செய்து விட்டுத் "தமிழன்" என்று சொல்.மதிப்பார்கள்.இல்லாவிட்டால் சிரிப்பார்கள்.