Monday, September 24, 2007

தியாகி திலீபனின் தியாகத்தின் 20ம் ஆண்டு நினைவாக..!

தியாகி திலீபன் தமிழீழ தமிழ்மக்களின் 5 அம்சக்கோரிக்கைகளை இந்திய மத்திய ராஜீவ் காந்தி அரசிடம் முன்வைத்து.. இந்திய அமைதிப்படை ஆக்கிரமிப்புப் படையாக ஈழத்தில் நிலை கொண்டிருந்த போது.. 16-09-1987 அன்றில் இருந்து 26-09-1987 அன்று வரை.. உண்ணா நோன்பிருந்து தமிழ் மக்களுக்காக உயிர்நீத்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இவர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவனும்.. யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கு தெரிவாகி இருந்த மாணவருமாக விளங்கியவர்.

இன்று.. உலகின் நவீன காந்தியாகவும் இவர் தமிழ் மக்களால் பார்க்கப்படுகிறார்.




திலீபன் அவர்களுக்காக பாடப்பட்ட நினைவுப் பாடல்.



திலீபன் முன் வைத்த 5 அம்சக்கோரிக்கைகளும் ஆங்கில வடிவில் இக்கானொளியில் உண்டு.

அவரின் வீரமரணத் திகதி தவறுதலாகப் 26-August-1987 என்று இக்கானொளியில் உள்ளது. அதைத் திருத்தி 26-September-1987 என்று வாசியுங்கள்.

மேலும் தியாகி திலீபன் அவர்களின் இறுதிப் பயணத்தின் 12 நாட்களும் நடந்த நிகழ்வுகள் பற்றிய விபரங்கள் கானொளி வடிவில் யாழ் இணையத்தில் உள்ளது. இங்கு அழுத்தி அதைப் பார்வையிடலாம்.

1 comment:

Anonymous said...

திலீபன் அண்ணா பற்றிய பதிவுக்கு நன்றிகள். எம்மைப் போன்ற புகலிடத்தில் உள்ளவர்கள் பல விடயங்களை அறியக் கூடியதாக இருந்தது.